Damien டாமியன் (Tamil & English)

டாமியன்

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (Molokai Island) என்பது சிறு தீவு.தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழுநோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்டு, கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை கழித்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிடப்பட்டு விட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பாற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.

1873-ஆம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடிப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர் தான் டாமியன் ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடைபிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்தத் தீவில் அவர் கொண்டு வந்தார். குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளைக் கொடுத்து ஜனங்களை ஆறுதல்படுத்தினார்.

ஒரு நாள் அவர் குளிக்கச் செல்லும்போது தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில்பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். , அவருக்கும் தொழுநோய் பற்றிக் கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம் நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன் என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் தொழுநோயாளியாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார் என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே, தான் அளவு கடந்து அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49-ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டுப் பாராமல், தன் உடலையும் உயிரையும் தொழுநோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு "அவர்களையும் தேவன் நேசிக்கிறார்" என்பதை எடுத்துக் காட்டின. அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

பிரியமானவர்களே, நம்முடைய அர்ப்பணிப்பு எத்தன்மையுடையது? நான் கிறிஸ்துவுக்காக என்னை அர்ப்பணித்தால் அவர் எனக்கு என்ன தருவார்? என்றும், தங்கள் பெயர் புகழ் வர வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் வாழுகின்ற இந்த நாட்களில், "என் உயிர், உடல் அனைத்தும் கிறிஸ்துவுக்கே, வாழ்ந்தாலும் கிறிஸ்துவுக்காய் வாழ்வேன், மரித்தாலும் கிறிஸ்துவுக்காய் மரிப்பேன் என்ற முழுமையான அர்ப்பணிப்பு நம் ஒவ்வொருவருக்கும் தேவை.

நம் வாலிபமும், நம் வாழ்வும் கிறிஸ்துவுக்கே என்று மாறட்டும். தங்களை கர்த்தருக்கென்று அர்ப்பணித்து உண்மையாய் வாழ்ந்த எத்தனையோ பரிசுத்தவான்கள் நம் நாட்டிலும் உண்டு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மால்தோ இன மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய சென்ற சகோ.பேட்ரிக் ஜாஷ்வாவின் மகன் ஜிம் எலியட் தனது 27-ஆவது வயதில் மூளையைத் தாக்கும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அங்கேயே மரித்ததை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். நாம் மரிப்பதற்கு மாத்திரமல்ல, கர்த்தருக்காக வாழவும் அவருக்கு சாட்சியாக ஜீவிக்கவும் நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

ஒரு வாலிபன் எப்போதும் தன் பாஸ்டரிடம் நான் கர்த்தருக்காக மரிக்க வேண்டும் என்று சொல்லுவானாம். ஒரு நாள் பாஸ்டர் அவனிடம், "முதலில் நீ கர்த்தருக்காக வாழ கற்றுக் கொள்; பின்பு நீ கர்த்தருக்காக மரிப்பதைக் குறித்து யோசிக்கலாம்" என்று கூறினாராம்.

ஆம்! "நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்காக, மரித்தாலும் கர்த்தருக்காக" என்று ஜீவிக்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு நம் ஒவ்வொருவருக்கும் தேவை.



Damien

Molokai is a small island in the Pacific Ocean. It was when leprosy was widespread in the South Pacific region. Those who were inflicted with this terrible disease were sent away to quarantine in the Molokai Island. They had to spend the rest of their lives with no one to care.  The people on this island believed that they were forsaken by God too, as there was no sign of hope. The Government denied re-entry of any individual who visited that island. Owing to this statute, no one came forward to help the lepers or save them from this dreadful disease.

In 1873, a youngster named Damien chose to save these people. Though many admonished him not to go to Molokai, he was determined to serve these people. Once he reached the island, he was all the more heartbroken to see the sad state of the people. People walked around like corpses, with wounds all over their body and smelly discharge. Damien started to bring hope in the lives of these people. He brought many changes in the island. The people who were living in huts were given built homes to live in. A school was built for the children in the island. The people slowly forgot their worries and began to enjoy these benefits. Damien bandaged the wounds of the people and gave them their medication. He brought great comfort to them.

One fine day on his way to take a shower, boiling water spilled on his legs. But to his surprise, he did not feel it. It was then that he realized that he was also affected with leprosy. After he came out of this shock, he told the people of the village that he was one among them now. He praised the Lord’s name during his Sunday sermon saying, the Lord dearly loved the lepers. But he soon succumbed to the disease, left his dear people and died when he was 49 years old. Damien never looked back on his commitment and sacrificed his life for the leprosy inflicted people of Molokai Island. He shared the love of God with others, and when the people of Molokai felt there was no one to love them, his word ‘God loves them all’ was very comforting. His dedication to serve the people is an inspiration for us all.

Dear brother and sisters, let us examine ourselves and see where we stand on our commitments? We live in these days where people feel, ‘What would I gain if I commit my life for Christ?’ or ‘What must I do to get famous?’. We need complete submission to Christ where we submit our life and body for Him alone. Our determination should be: ‘If I live, I will live a life for Christ. If I die, I will die for Christ’.  Let our youthfulness and life be for Christ alone. We have many holy men in our nation who had dedicated their lives for Christ and led a truthful life. We are all aware of Jim Elliot, S/o Bro. Patrick Joshua who died due to brain fever caused by malaria. He died while ministering among the Malto people in Jharkhand when he was just 27 years old after his sacrificial life for Christ. Not just in death, but we also need to live a testimonial life with submission to Christ.  There was once a young boy who always told his pastor that he wanted to die for Christ. The pastor replied, ‘You need to first learn to live a life for Christ and then you can think of dying for Christ’. We need to live a life for Christ and die for Him as well. This is the dedication, expected from us.         

 

 

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!