William Tyndale வில்லியம் டிண்டேல் (tamil & English)

வில்லியம் டிண்டேல் ( A Hero for the information age - Father of English Bible Translators) (1494 -1536)

டிண்டேலின் இளமைக் காலம்:

      வில்லியம் டிண்டேல் 1494ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார். சிறு வயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப்பட்டார். பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய கால மூடநம்பிக்கைகள் இவரை சிந்திக்க வைத்தன .ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இதன் விளைவு அவரை ஒரு சபை சீர்திருத்த வாதியாக உருவாக்கியது .மார்ட்டின் லுத்தர் மற்றும் சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்த வாதிகளின் கருத்து இவரை மிகவும் கவர்ந்தது.1521ம் ஆண்டு இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவம் பெற்றார். திரும்பவும் தன் ஊருக்குத் திரும்பி, அங்குள்ள சபையின் போதகரானார்.டிண்டேலின் முற்போக்குத் தனமான சிந்தனைகளும், கத்தோலிக்க பழமை வாதத்திற்கு எதிரான இவரது செயல்களும் சபை தலைவர்களின் கவனத்தை திருப்பியது.

முதல் ஆங்கில வேதம்:

     1523ல் டிண்டேல் லண்டன் திரும்பி புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்த நினைத்தார். ஆனால் அது சட்ட விரோதமானது. என அறிந்து, வேதாகமத்தை சொந்த மொழியில் அச்சிட்டு தருவதன் மூலம் மக்களை சடங்கு சம்பிராதயங்களில் இருந்தும், சபையின் அர்த்த மற்ற சீர்கேடுகளில் இருந்தும் நிச்சயம் விடுவிக்க முடியும் என ஆணித்தரமாக டிண்டேல் நம்பினார். டிண்டேல் இங்கிலாந்து சபைக்கு எதிராக குரல் கொடுக்க துணிந்தார். மற்றும் இவரது சிந்தனைகள் மார்ட்டின் லுத்தரின் சிந்தனைகளுக்கு ஒத்திருந்தது.

 1524ல் டிண்டேல் சில லண்டன் வியாபாரிகளின் உதவியுடன் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு ஜெர்மனிக்குச் சென்று குடியேறினார். இதன் மூலம் தனது வேதாகம மொழிபெயர்ப்பு பணியை மிகுந்த பாதுகாப்புடன் நிறைவேற்ற முடியும் என நம்பினார் .விட்டன் பர்க் நகரில் பணியைத் தொடர்ந்து டிண்டேலுக்கு மார்ட்டின் லுத்தரின் ஒத்துழைப்பும் கிடைத்தது. ஒரு வருட பணிக்குப் பின் 1526ல் புதிய ஏற்பாடு புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.இதன் பிரதிகள் வாம்ஸ் பட்டணத்தில் அச்சிடப்பட்டது. அப்போது அவை இங்கிலாந்திற்கு கடத்தி செல்லப்பட்டன.இவையே உலகத்தின் முதல் ஆங்கில வேதாகமம் என்கிறது ஆங்கில காலக் குறிப்பு. கடும் எதிர்ப்பின் மத்தியில் பணி செய்து வந்த டிண்டேல், இனி சிறிது காலம் மறைந்திருந்து மொழி பெயர்ப்புப் பணியைச் செய்யலாம் என எண்ணினார்.

காட்டிகொடுக்கப்பட்டார்:

       இந்நிலையில் டிண்டேல் தனது நண்பன் ஹென்றி பிலிப்ஸ்ஸால் காட்டி கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வில்வார்டே கோட்டையில்  500 நாட்கள் காவல் செய்யப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளானார் .அக்டோபர் 6,1536ம் ஆண்டு, சத்தியத்தை மறுதலிக்கும் படியும், வேதாகம மொழிபெயர்ப்பு தவறு என்று ஒப்புக் கொள்ளவும் துன்புறுத்தப்பட்டார். முடிவில் உயிருடன் கட்டைகளின்  நடுவில் எரிக்கப்படும் படி தீர்ப்பு வெளியானது. அவர் உயிருடன் எரிக்கப்படும் முன்னே ஆயிரக்கணக்கான ஆங்கில புதிய ஏற்பாடுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.

    "கர்த்தாவே இங்கிலாந்து மன்னரின் கண்களை திறந்தருளும்" என்னும் இறுதி முழக்கத்துடன் டிண்டேல் தனது மூச்சை விட்டார். இதன் விளைவு வெறும் மூன்றே வருடத்தில் மன்னர்  8ம் ஹென்றி இடிண்டேலின் மொழி் பெயர்ப்பை அடிப்படையாக கொண்டு முதல் ஆங்கில வேதாகமம் " Great Bible "யை வெளியிட்டார். டிண்டேல் இறந்த போது பழைய ஏற்பாடு முழுவதும் மொழிபெயர்க்கப்படவில்லை.என்றாலும் அதன் பின் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமங்கள் அனைத்தும் இஅவரின் மொழி பெயர்ப்பை அடிப்படையாக கொண்டே மொழிபெயர்க்கப்பட்டன. 1611ல் வெளியிடப்பட்ட பிரபலமான  ' King James Version' ம் இதில் அடங்கும்.

      சூழ்நிலை சாதகமில்லாத அந்த காலத்திலும் ஒரு  hero வாக இருந்தார் டிண்டேல்!

 



William Tyndale (1494- 1536)

Tyndale's Early Life:

William Tyndale was born in England in the year 1494. He was nurtured in the knowledge and fear of the Lord.  Though he was born in a traditional Christian family, he was not happy with the superstitious practices of the Roman Catholic church.  He pursued education at the Oxford and Cambridge Universities. His education was instrumental in making him a leading church reformer. The views of Martin Luther and a few other Protestant reformers attracted him. He was ordained as a Catholic Priest in the year 1521. He returned to his hometown and took charge as Priest of the church there. His modern and forward thoughts were against the old school thoughts of the Catholic Church and it was observed by the elders of the church.

First English Bible

Tyndale returned to London in the year 1523 and started translating the Bible in English though he knew it was against the law. He strongly believed that by giving the Bible to the people in their own language he can save them from superstitious beliefs and the unwanted evil practices of the church. Tyndale decided to raise his voice against the church of England.  His thoughts were similar to the thoughts of Martin Luther.

In the year 1524, he traveled to England and settled in Germany with the help of a few London traders. He believed that he can continue and finish his Bible translation work safely. Tyndale continued his work from Wittenberg with the continued support of Martin Luther.  After years work, the New Testament Bible was translated into English in 1526. It was printed in the Worms city, Germany.  As per the Historical records, these were the first English Bibles that were smuggled to England.

Tyndale who was continuously working in adverse situations planned to continue his translation work in secrecy .

Tyndale was betrayed

Tyndale was betrayed by his friend Henry Phillips,  arrested and locked in prison.  He was in Vilvorde Prison for 500 days and was tortured. He was asked to deny the truth and accept that translating the Bible was a crime. On October 6th 1536, the verdict to burn him at the stake was released. Thousands of New Testament  Bibles were printed and distributed before he was burnt alive.

Tyndale breathed his last making his final proclamation to the Lord pleading him to open the eyes of the King of England.  As a result, Henry VIIIth published the "Great Bible " in just 3 years and it was based on the Bible translated by Tyndale.  Though the old testament translation was incomplete when Tyndale died , Tyndale's translation was the base to all Bibles translated to English.  King James Version published in the year 1611 is also in this list.

Tyndale was a hero even when circumstances were against him.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!