ஜான் சுங் John Sung (Tamil & English)

ஜான் சுங்

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினாலும் அவனுக்கு லாபம் என்ன?

இந்த வசனம் ஜான் சுங்கின் வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்தது. யார் இந்த ஜான் சுங்? இவர் சீன மெதடிஸ்ட் ஊழியரின் மகனாக பிறந்தார். சிறுவயதிலேயே மிகுந்த அறிவாளியாக காணப்பட்ட இவர். அறிவியல் துறையில் அதிக நாட்டம் கொண்டார். அமெரிக்காவிற்குச் சென்று அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். கல்வியில் அவர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் மனதிலே நிம்மதியற்றவராகவும், குழப்பங்கள் நிறைந்தவராகவும் வாழ்ந்து வந்தார்.

 ஒரு நாள் மேற்கண்ட வேத வசனம் அவரோடு பேச ஆரம்பித்தது. ஆண்டவரின் அழைப்பிற்கு அடிபணிய ஆரம்பித்தார். வேதாகம கல்லூரியில் சேர்ந்தார். எனினும் அக்கல்லூரியின் போதனைகள் அவருக்கு உற்சாகத்தை அளிக்காத நிலையில் தனிமையில் இறைவனோடு உறவாட ஆரம்பித்தார். வேதாகமத்தை படிக்க படிக்க அவர் உள்ளத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பரிசுத்த ஆவியானவர் அவரோடு இடைப்பட்டார். ஜான் சுங் பெற்ற ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

தான் பெற்ற மகிழ்ச்சியை நண்பர்களிடம் வந்து கூற, அவர்களோ இவரை பைத்தியம் பிடித்தவர் என்று எண்ணினர். ஜான் சுங்கின் கொளுந்து விட்டு எரியும் சுவிசேஷ வாஞ்சையை அறியாத அக்கல்லூரி நிர்வாகம் இவரை ஒரு அறையில் தள்ளி கதவை மூடியது. 193 நாட்கள் அவ்வறையிலேயே அடைப்பட்டு கிடந்தார். அந்நாட்களில் வேதாகமம் ஒன்றே அவர் துணையாக காணப்பட்டது. 40 முறை வேதாகமத்தை மீண்டும் மீண்டும் படித்தார். அங்கிருந்து விடுதலை கிடைக்கவே சீனாவை நோக்கி பயணம் மேற்கொண்டார்.

தான் படித்த பட்டங்களுக்கான சான்றிதழ்களை கடலில் வீசி எறிந்தார். சீனாவின் கடைமுனைக்குச் சென்று 15 வருடங்கள் மிஷனெரியாகப் பணியாற்றினார். ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆத்மீக வீரராக மாறினார். அதிகாலை ஜெபத்தில் அதிசயங்களைக் கண்ட இவர் தனது 43-ஆம் வயதில் இவ்வுலக ஓட்டத்தை முடித்து இறைவனடி சேர்ந்தார்.

அன்பு வாலிபர்களே, ஒருமுறை மட்டும் வாழும் உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் உள்ளது? தேவனின் அன்பு உங்கள் இருதயங்களில் ஊற்றப்படுகிறதா? அல்லது உலகத்தின் ஆசை உங்களை அழுத்துகிறதா? நம்முடைய செயல்களும், சுபாவங்களும் பிறருக்கு முன்பு நல்ல மாதிரிகளாக இருந்தால் மட்டுமே உலகம் நமக்குள் இருக்கும் இயேசுவைக் கண்டு கொள்ள இயலும். வாயினால் இயேசுவை அறிவித்தல் மிக மேன்மையான பணி. ஆனால் வாழ்க்கையாலும் நாம் பேச வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார்.

இயேசுவுக்காக இழந்தது எவ்வளவு என்பதை வைத்து அவரிடமிருந்து அடைந்தது எவ்வளவு என்பதை அறியலாம். அன்பரே, உமது சுவிசேஷ வாஞ்சையை அனல் பெறச் செய்கிறீர்களா?

  



John Sung

What good is it for a man if he gains the whole world, yet loses his life/soul?  This verse inspired the life of John Sung.  Who is John Sung?  He was the son of a Chinese Methodist missionary.  He was very intelligent at a young age and became fascinated over science.  He went to the United States and earned Doctorate in the field of science.  Although he excelled in education, he lived a life of restlessness and confusion.  One day the above scripture began to speak to him.  He obeyed to the call of the Lord and enrolled in Bible College.  However, he was not encouraged by the teachings of the college and began to associate with the Lord in solitude.  Reading the Bible changed his mind greatly.  The Holy Spirit intervened with him. The joy that John Sung received was immeasurable. He told his friends about the happiness he had received, but they thought he was crazy.  Unaware of John Sung’s burning passion for the Gospel, the college administration pushed him into a room and closed the door. He was imprisoned for 193 days.  The Bible was his only companion those days.

He read the Bible 40 times repeatedly. He travelled to China after his release. He threw his degree certificates into the sea.  He went to the poles of China and served as a missionary for 15 years.  He became a spiritual warrior for thousands upon thousands of people.  He saw miracles in the early morning prayers and at the age of 43 he completed his worldly journey and joined the Lord.  Dear adolescents, how do you live this one-life given to you? Is the love of God poured into your hearts?  Or does the desire of the world oppress you?  The world can see Jesus in us only if our actions and temperaments are good examples to them. Announcing Jesus by word is the most noble task.  But God expects us to speak through our lives as well.  You can keep track of how much you lost for Jesus and how much you gained from him.  Dear, will you make the Gospel a passion of your life?

 

 

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!