சூசன்னா வெஸ்லி Susanna Wesley (Tamil & English)
18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த வெஸ்லி குடும்பம் அருட்பணியில் அதிக நாட்டம் கொண்ட குடும்பம். சாமுவேல் வெஸ்லி ஒரு போதகராக பணி செய்து வந்தார். சூசன்னா வெஸ்லி இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார். தேவன் அவர்களுக்கு 19 பிள்ளைகளை கொடுத்தார். அதில் 10 பேர் மட்டுமே பிழைத்துக் கொண்டனர். சூசன்னா அயராத ஒரு ஜெப வீராங்கனையாக இருந்தார். தன்னுடைய வீட்டு வேலைகளை எல்லாம் காலமே முடிந்து விட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிள்ளைகளுக்காக தேவனிடம் ஜெபிப்பது அவரது வழக்கமாக இருந்தது. தன்னுடைய பத்து பிள்ளைகளும் தேவனின் திராட்சைத் தோட்டத்தின் பணியாளர்களாக வாழ வேண்டும் என விருப்பம் கொண்டார். சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால் தேவன் சூசன்னாவின் ஜெபத்திற்கு பதிலளித்ததை நாம் பார்க்க முடியும். இங்கிலாந்து தேசத்தின் எழுப்புதலுக்கு சூசன்னாவின் இரண்டு பிள்ளைகளான ஜான் வெஸ்லி மற்றும் சார்லஸ் வெஸ்லி முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவர் சாமுவேல் வெஸ்லி மரித்த பின் தன் 10 பிள்ளைகளையும், சூசன்னா தனிமையாக
பொறுப்போடு வளர்த்து வந்தார். அநேக சவால்களையும், போராட்டங்களையும் சந்தித்தார். இரண்டு முறை அவருடைய வீடு தீப்பற்றி எரிந்தது. சூசன்னாவின் ஜெபத்தினால்
குழந்தைகள் காக்கப்பட்டனர். கணவர் சாமுவேல் வெஸ்லி ஊழியம் செய்ததினிமித்தம் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டார். அண்டை வீட்டார் துன்புறுத்தினார்கள். வீட்டுத் தோட்டத்தை நாசம் செய்தனர். அவர்கள் வளர்த்து வந்த பசு மாடுகளை கத்தியால் குத்தி கொன்றனர். இதனால் சரியான
உணவில்லாமல் பிள்ளைகளின் உடல் பாதிப்படைந்தது. இப்படி அடுக்;கடுக்காக பல துன்பங்கள் வந்து குவிந்த போதிலும், இத்தாயார் விசுவாசத்தை
விட்டு விடாமல், முழங்கால்களை ஊன்றி
ஆண்டவரிடம் ஜெபிப்பதில் உறுதியாக இருந்தார்.
தன் பிள்ளைகளை கிறிஸ்துவுக்காக வளர்த்தது மட்டுமல்லாமல், அருகிலுள்ள பிள்ளைகளுக்கும்
இயேசு கிறிஸ்துவை பற்றி கூறினார்கள். அவர்களுக்கு வேதத்திலிருந்து வசனத்தை சொல்லி கொடுத்து, அவர்களோடு ஜெபித்து
வந்தார்கள். இயேசு கிறிஸ்துவின்
அன்பை பற்றியதான கடிதங்களை எழுதி கொடுத்து அப்பிள்ளைகளை வாசிக்க ஊக்குவித்தார்கள். சுமார் 200 குழந்தைகள் இந்த
வேதாகம பள்ளியில் இணைந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய பிள்ளைகளையும் கிறிஸ்தவ ஒழுக்கத்திலும், பக்தியிலும் வளர்த்து
வந்தார்கள். "பிள்ளைகளுக்கு
சேவை செய்வதே என் ஆசை. அதற்காகத் தான் நான் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். பிள்ளைகள் கிறிஸ்துவுக்குள்
வளர, ஒவ்வொரு நாளும்
கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பலவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டியிருந்தது. என்றாலும் பிள்ளைகளும்
அதற்கு இசைந்து கட்டுப்பட்டு வளர்ந்தனர்.
சூசன்னா தன் நாட்களை அன்பு மகன் ஜான் வெஸ்லியுடன் வாழ்ந்து கழித்து
வந்தார். ஒரு முறை கிறிஸ்தவ
இயக்கம் ஒன்று, ஜான் வெஸ்லியை
செவ்விந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வட அமெரிக்கா செல்ல அழைப்பு கொடுத்தனர். ஜான் வெஸ்லியோ
தன் தாயார் விதவை என்றும் அவரை விட்டு விட்டு தான் செல்ல முடியாது என்றும் திட்டவட்டமாக
கூறி விட்டார். தன் தாயாருக்கு
தான் ஆறுதலும், ஊன்று கோலுமாக
இருப்பதாக கூறினார். அந்த இயக்கத்தின் ஊழியர்கள், வெஸ்லியிடம் ஒரு வேளை உங்கள் தாயார் சம்மதம் தெரிவித்தால் செல்வீர்களா? என்று கேட்டார்கள். ஜான் வெஸ்லி அப்படியொரு
காரியம் நிகழ சாத்தியமே இல்லை என்று தன் மனதில் நினைத்து கொண்டு, என் தாயார் சம்மதம்
தெரிவித்தால் நிச்சயம் செல்வேன் என்றார். இயக்கத்தின் ஊழியர்கள் சூசன்னா வெஸ்லியிடம் இதைப் பற்றி கலந்தாலோசித்தார்கள். சூசன்னாவின் பதில்
வரலாற்றில் இடம் பெறும் வகையில் இருந்தது. "எனக்கு 20 பிள்ளைகள் இருந்திருந்தால், அவர்கள் அனைவரும் கர்த்தருடைய சேவையில் இருந்தால், நான் அவர்களை மீண்டும்
பார்க்க முடியாமல் போகலாம் என்றாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்" என்றார்கள். தன்னுடைய வயதான
காலத்திலும் சூசன்னாவின் மிஷனெரி பாரம் குறையவே இல்லை. தனக்கு ஆறுதலாய் இருந்த ஜான் வெஸ்லி தேவ அழைப்பை ஏற்று தூர தேசத்திற்கு
மிஷனெரியாகச் செல்ல அவர் தடையாக இருக்கவே இல்லை. ஜான் வெஸ்லி முதலில் ஜார்ஜியா தேசத்திற்கு கடந்து சென்று ஊழியம்
செய்தார். அதன் பின்பு தேவன்
இவரை வித்தியாசமாக பயன்படுத்த ஆரம்பித்தார்.
இவரது மற்றொரு மகன் சார்லஸ் வெஸ்லி நாம் பாடும் பல பாமாலை பாடல்களை
இயற்றினார். இருவரும் மெதடிஸ்ட்
திருச்சபையை உருவாக்கி இங்கிலாந்தின் ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தனர். ஜான் வெஸ்லி தன்
வாழ்நாட்களில் மொத்தம் 40,000 பிரசங்கங்களை செய்திருக்கிறார். 15 மொழிகள் பேசக் கூடிய ஞானத்தை தேவன் இவருக்கு கொடுத்தார். இதற்கு முக்கிய
காரணம் சூசன்னா வெஸ்லியின் ஜெபமே! மெதடிஸ்ட் சபையின் தாயார் என அழைக்கப்பட்ட சூசன்னா வெஸ்லி தன்
முழங்காலினாலேயே தன் பிள்ளைகளை வளர்த்தார்.
அன்பு பெற்றோரே, இன்று நம் பிள்ளைகளைக் குறித்த நம்முடைய ஆசை எப்படி உள்ளது? உலகில் எவ்வாறு
வெற்றி பெறுவது என்பதை மட்டுமே அவர்களுக்கு கற்று கொடுக்கிறோமா? அல்லது தேவ இராஜ்யத்தின்
பணிகளை குறித்து கற்று கொடுக்கிறோமா? நம் பிள்ளைகள் மூலம் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகிறதா?
Wesley family was a mission-oriented family who lived in the
18th century in England. Samuel Wesley was a pastor. Susanna Wesley lived as a
homemaker. God had blessed them with 19 children. Of them, all only survived.
Susanna lived as a tireless prayer warrior. She would finish her household
chores early and pray to God every day for every child. She greatly wished that
all her ten kids would be workers in the Master’s vineyard. Looking into the
missionary history, we can see that the Lord answered Susanna’s prayers. Two of
her children, John Wesley and Charles Wesley, played an important part in the
revival of England.
After the passing of her husband, Susanna responsibly
brought up her ten children alone. She had to face struggles and challenges
along her way. Twice her house was on fire. It was Susanna’s prayers that
protected her children. She was imprisoned because her husband Samuel Wesley
was preaching the gospel. Her neighbours tormented her. They even destroyed her
house garden and murdered her cattle with a knife. Because of all this, her
children were malnourished. Even though she had so many troubles consecutively,
this mother did not lose hope and continued to kneel before the Lord and pray
for all her problems.
Not only did she raise her children for the Lord, but she
also shared the gospel with the neighbouring children. She taught them verses
from the Bible and prayed with them. She gave them Letters describing the love
of God and encouraged them to read. Around 200 children joined this Bible
school and accepted Christ as their Saviour. She raised her children with
discipline and faith as well. She says, “I desire to serve the children. That
is my purpose of existence”. For children to grow in Christ, she had to keep up
many rules for herself and did them all wholeheartedly for the children.
Susanna spent her days with her loving son John Wesley. Once
a Christian missionary organisation requested John Wesley to go among the Red
Indians in North America. John Wesley refused to go leaving his widowed mother.
He said that he was her comfort and helper. The organisation queried if his
mother agreed, would John be willing to go?. Thinking that it can never happen,
John Wesley assured them he would go if she agreed. The organisation people
then discussed it with Susanna Wesley. Her response was one to be etched in
stone! She said,” If I have 20 children and if they were all involved in God’s
work, if ever came a situation that I won’t be able to see them again, I’d
still be happy”. Even in her silver years, her yearning for Christ did not
diminish. She did not stand in the way of John Wesley, who was her source of
comfort and support to go far away for missionary work. John Wesley first went
to Georgia and carried out his mission work. God later began utilising him for
a different kind of mission.
Susanna’s other son Charles Wesley had written many of the
songs we sing today. Together, they established the Methodist church and were
responsible for the spiritual awakening of England. In his lifetime, John
Wesley delivered a total of 40,000 sermons. He was blessed with the knowledge
to converse in 15 languages. Susanna Wesley had raised her children all while
on her knees.
Dear parents, how is our desire towards our children today? Are we teaching them how to succeed in this world alone? Or are we teaching them about the ministries of the Kingdom of God? Is the name of the Lord being honoured through our children?
Comments
Post a Comment