மெரிலின் லசோலா, Merlin Lasola (Tamil & English)

பாப்புவா நியூகினித் தீவில் வாழும் மக்கள் 700 விதமான மொழிகளைப் பேசுகிறார்கள். அதில் செப்பிக் இவாம் என்பதும் ஒன்று. அம்மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்துக் கொடுக்க மெரிலின் லசோலா என்ற பெண் ஊழியர் புறப்பட்டுச் சென்றார்.

செப்பிக் இவாம் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அது ஒரு பேச்சு மொழி ஹவுனா கிராமத்தில் தளம் அமைத்து தன் உடன் ஊழியருடன் மெரிலின் தனது ஊழியத்தை ஆரம்பித்தார்.

அவ்வூரில் மந்திரவாதிகள் அதிக சுறுசுறுப்பாகவே காணப்பட்டனர். யாருக்காவது சுகமில்லை என்றால் அவர்களது கூரிய மூங்கிலால் நெற்றியைக் கீறுவார்கள். பின் அதிலிருந்து வெளிப்படும் இரத்தம் சுகவீனத்தினிமித்தம் கெட்டு விட்டது என்று கூறி ஒருவித இலையை வாயில் மென்று கொண்டே அவர்கள் காயமுண்டாக்கின நெற்றியில் துப்புவார்கள். அதன் மூலம் அசுத்த ஆவிகள் நோய்கண்டவர்களிடமிருந்து நீங்குவதாக அந்த ஊர் மக்களை மந்திரவாதிகள் ஏமாற்றி வந்தனர். அவர்கள் அப்படி உமிழ்வதால் மந்திரவாதிகளை "துப்புவோர்" என்ற பெயரில் அழைத்தனர்.   

மெரிலின் தன் உடன் ஊழியருடன் அன்றாடம் மொழி பெயர்த்த பகுதிகளை அவ்வூர் முதியவர்களைக் கூடிவரச் செய்து இரவுதோறும் ஒருமணி நேரம் வாசித்துக் காட்டுவது வழக்கம்.

அதன்படி மாற்கு சுவிசேஷம் எட்டாம் அதிகாரம் ஒருநாள் வாசிக்கப்பட்டது. இருபத்து மூன்றாம் வசனத்தில் "அவர் குருடனுடைய கையைப் பிடித்து அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டு போய், அவன் கண்களில் உழிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து, எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்".

அதைக் கேட்டவுடனே ஓ! ! இயேசு தான் உலகத்திலேயே தலை சிறந்த துப்புவோராக (மந்திரவாதியாக) இருக்க முடியும் என்று அன்று கூடி வந்த முதியோர் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

அன்று முதல் அவ்வூழியத்தில் ஒரு புது திருப்பம் ஏற்பட்டது. அவர்கள் கட்டியிருந்த ஆலயத்துக்கு என்றுமில்லாத அளவு மக்கள் திரண்டுவர ஆரம்பித்தனர். 'துப்பும் மிகப்பெரிய மந்திரவாதி' இயேசுவைப் பற்றி மேலும் அறிய வேண்டும் என்பதே அவர்கள் ஆசை. வேதத்தை அறிய மக்களின் வாழ்விலே புதிய வெளிச்சம் பிரவேசித்தது. இயேசு வெறும் அற்புதத்தை செய்பவரல்ல அவர்தேவன் என்பதை அம்மக்கள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டனர். அதனால் அப்பகுதியிலே உள்ள ஏனைய கிராமங்களை விட ஹவுனாவில் புது களை கட்டியது.

ஒரு நாள் சுமார் 50 பேர் மருத்துவ உதவி பெற படகு ஒன்றில் புறப்பட்டு ஹவுனா கிராமத்துக்கு வந்தார்கள். அவர்கள் வேறொரு மொழியைப் பேசினார்கள். வியாதியின் காரணமாகவும், ரணம் கண்ட காயங்கள் நிமித்தமாகவும் அவர்கள் மீது மரணவாடை வீசியது. பாப்புவா நியு+கினியின் பொது மொழியான பிட்சின் ஆங்கிலத்தில் மெர்லின் அவர்களோடு பேசினார். பின்னார் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை கொடுத்தார். ஆறு நாட்கள் ஹவுனா கிராமத்தில் அவர்கள் தங்கியிருந்தார்கள்.

ஹவுனா மிஷன் காம்பவுண்டுக்கு 200 பேர் கல்வி கற்க வருவதையும் அவர்கள் தங்கள் தாய் மொழியான செப்பிக் இவாம் -ல் வேத வசனத்தை எழுதுவதையும் பார்த்தார்கள். இவர்கள் மொழி பேசி தொழுகை நடத்திய உள்ளுர் போதகர்களின் பேச்சை கேட்டார்கள்.

சிகிச்சைக்குப் பின் சுகம் பெற்று ஊர் திரும்பும் போது மெரிலினைப் பார்த்து எங்கள் ஊருக்கும் வாருங்கள் என்றும், எங்கள் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுங்கள், இயேசுவைப் பற்றி எங்களுக்கு எழுதிக் கொடுங்கள் என்று அழைத்தனர்.

செப்பிக் மக்களுக்கே புதியஏற்பாட்டை முடித்துக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவர்களது அழைப்பை மெரிலினால் உடனே ஏற்க முடியவில்லை. இந்த மொழியில் என் பணியை முடிக்க சில ஆண்டுகள் ஆகும் என்று மெரிலின் சொன்ன போது அவர்கள் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.

என்றாலும் அவர்கள் திரும்பி சென்றபின் சில நாட்களில் மெரிலின் ஒரு சிறு குழுவுடன் படகில் பயணமாகி அம்மக்கள் வாழும் தீவில் வந்திறங்கினார். அவ்வூர் தலைவரால் அதை நம்ப முடியவில்லை. ஊர் மக்கள் ஒன்று திரண்டு பெரிய வரவேற்பு கொடுத்து அமர்க்களப் படுத்திவிட்டார்கள். அவ்வூரை பார்க்க சென்ற போது ஊருக்கு மத்தியில் புதிய ஒரு கட்டிடத்தைக் கண்ட மெரிலின் அது என்னவென்று கேட்டார்.

ஊர் தலைவர் சொன்னார், 'அது உங்கள் ஆலயம் என்று,' இருவரது சம்பாஷணை தொடர்ந்தது.

'உங்கள் ஊரில் மிஷனெரிகள் இருக்கிறார்களா?'

இதுவரை யாரும் வரவில்லை!

உங்கள் ஊரில் போதகர் யாரும் இருக்கிறார்களா?

அப்படி ஒருவரும் இல்லை

"வேதத்தை எழுதப்படிக்கத் தெரிந்த யாராவது…"

ம்ஊஹூம் யாருமில்லை

பின் எதற்காக அந்த கட்டிடம்

வந்து…. உங்கள் ஊரில் உள்ள ஆலயத்தைப் பார்த்தோம் நாங்களும் அதே போன்று ஒன்றை கட்டிக் கொண்டோம். இனி மிஷனெரி தான் பாக்கி… அவரும் சீக்கிரம் எப்படியும் வருவார் என்று வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்திருக்கிறோம்.

அது மெரிலின் நெஞ்சையே உடைத்து விட்டது. அம்மக்களுக்குத் தான் எத்தனை அபாரமான விசுவாசம்.

இவர்களைப் போல மெய் ஊழியர் வருவார்இயேசுவைத் தருவார்வேதத்தை தங்கள் தாய்மொழியில் கொடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள் தான் எத்தனை! எத்தனை!

விசுவாச பட்டதாரி இளைஞர்களே, உங்களுக்காகத் தான் அவர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்போது அவர்களைப் போன்று உங்கள் வருகைக்காக மிகுந்த ஏக்கத்துடனும் எதிர் பார்ப்புடனும் காத்திருக்கிறவர்களைத் தேடிச் செல்லுவீர்கள்?

யார் தடுத்தாலும், இந்த பார் தடுத்தாலும் நீங்கள் இனியும் தாமதம் செய்யக் கூடாது. இன்றே புறப்பட வேண்டும். அதற்கு நீங்கள் ஆயத்தமா?




People who live in Papua New Guinea speak about 700 different languages. Among those languages, Sepik Iwam is one. In order to translate the Bible in that language, Merlin Lasola went there. This language was available only as a spoken dialect.  Sister Merlin established her ministry base in the village of Havuna and started her ministry along with her co-minister.

The magicians were very prevalent in that village. They were involved actively in treating people who were sick. They used to create a wound in the forehead of the sick people with their sharp bamboo sticks. The blood that oozes out of the wounds were considered to be the diseased blood. When the magicians chew a particular type of leaves and spit it on these wounds they believed that the evil spirits left the diseased people through this practice. Hence the magicians were called as ‘spitting magicians’ in that village.

Sister Merlin had the practice of reading out her daily translated portions of her Bible to the elderly men in the village for one hour every night. During one such instance, chapter 8 of the Gospel of Mark was read out to them. Verse 23 of chapter 8 reads as follows : “And he took the blind man by the hand, and led him out of the town; and when he had spit on his eyes, and put his hands upon him, he asked him if he saw ought”.

On hearing this, all the elderly exclaimed that Jesus should have been the most famous spitting magician in the world. That day, marked the turning point in Sister Merlin’s history. People started to come in great numbers to the church that was build. They showed great desire to know more about the great spitting magician. They also learnt that Jesus was not only a miracle worker, but also the Lord. One day, 50 people from a nearby village came to Havuna by boat to get medical treatment. They spoke a different language. Due to the severe wounds and diseases on their body, they seem to be all closed to the hour of death. Sister Merlin spoke to them in Pisis which is the common language of Papua New Guinea. These people stayed there for six days and got the required treatment from Sister Merlin. They saw 200 people coming to the ministry base to learn and write Bible scriptures in their mother tongue.

After their treatment, they made plans to return home when they extended their invite to Sister Merlin to visit their village also to teach them about Jesus. Sister Merlin was not in a s position to accept their invitation since she had not yet completed the teaching of New Testament to the people to Havuna village. When she expressed her inability to help them in their request, they appeared disappointed. Even then, Sister Merlin travelled to their village with a small team after a few days. The people were very happy and excited, and gave her a great reception. When she went around to take a look at the village, she saw a new building in the middle of the village. When she enquired about it to the village chief, he mentioned that it was a church. Sister Merlin was shocked even more when she came to know that there were no missionaries or pastors in that village who initiated in building this church. It was primarily the initiative of the people just by seeing the one built by Sister Merlin in Havuna. The village chief also mentioned that they were waiting for a missionary to arrive at their village.

This faith literally broke Sister Merlin’s heart. Just like these people, there are so many others who wait for a missionary who could come and give them the Savior Jesus and the Bible in their mother tongue.

Dear educated youth! Such people are waiting for you! When will you go out and reach out to them? You should not delay further in undertaking this mission. Start now! Move forward!

ARE YOU READY?


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!