Martyrs in Rome , ரோம் நகரில் இரத்த சாட்சிகள் (Tamil & English)

40 Martyrs 
ரோம சக்ரவ
ர்த்தியின் போராளிகளில் 14-ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு திடீரென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.மன்னன் லைசீனியஸிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த அரச கட்டளையின்படி அவர்கள் அனைவரும் தன் குலதெய்வத்துக்கு முன்பு விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அந்த போர் படையில் 40 பேர் கிறிஸ்துவை சேவிக்கும் வீரர்கள் இருந்தனர்.இயேசுவுக்கு முன்பு தெண்டனிட்டுப் பணிந்து வாழும் நாங்கள் வெறும் சிலைகளுக்கு முன்னதாக தாழ்பணிய முடியாது என்று தீர்க்கமாக மறுத்து விட்டனர்.இது நடந்தது கி.பி.320 – ஆம் ஆண்டில்.அது ஒரு பனிகாலம், சிலைக்கு முன் சிரம் தாழ்த்த மறுத்துவிட்ட அந்த கிறிஸ்துவின் அடியவர்கள் உறைந்துபோய் நின்ற நதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது அனைத்து வஸ்திரங்களும் உரிந்து கொள்ளப்பட்டன.

ஒன்று அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும் அல்லது அந்த உறைபனியில் வெற்றுடம்போடு நின்று சாக வேண்டும். இது தான் அவர்கள் முன் வைக்கப்பட்ட தெரிந்தெடுப்பு.அஞ்சாத ஆண்மையோடு அந்த நாற்பது வீர விசுவாசிகளும் பாடல்கள் பாடி அந்தக் கொல்லும் பனியிலும் தேவனை துதித்த வண்ணம் இருந்தனர். மறுதலிக்க அவர்கள் என்ன கோழைகளா?

இரவு நெருங்க நெருங்க ஒவ்வொருவராக பனியில் உறைந்து போகவே, செத்து மடிந்தனர். கடைசியில் அந்த நாற்பது பேரில் ஒருவன் மட்டும் மீந்திருந்தான். தன் கண்முன்பாக வீரமரணம் அடைந்த போராளிகளைக் கண்டும் கிறிஸ்துவின் பேரிலுள்ள தன் நம்பிக்கையை தைரியமாக வெளிப்படுத்தி மரணத்தை தழுவாமல் - தன் நம்பிக்கையில் நிலைத்திருக்காமல் கடைசி நேரத்தில் இயேசுவை தான் மறுதலிப்பதாகச் சொல்லி அந்த உறைபனித் தேக்கத்தை விட்டு வெளிவந்து விட்டான்.

இதைக் கண்ணுற்ற போர்ப்படைத்தளபதி 39 பேருக்கிருந்த உறுதியை மெச்சி, தானும் ஒரு கிறிஸ்து அல்லாதவனாக நெடுநாள் உயிர்வாழ்வதை விட ஒருநாள் வாழ்ந்தாலும் கிறிஸ்தவனாக வாழ்ந்து சாவைத் தழுவுவதையே மேலாகக் கருதுவதாகக் கூறி தன் இராணுவ ஆடைகளை களைந்தெறிந்து விட்டு நடுங்கும் அந்தக் குளிரில் அந்த 39 சவங்களுக்கு மத்தியில் போய் நின்றான்.

இரவு இறந்து பகல் பிறந்தது. சவங்கள் உறைபனியில் செத்துக் கிடந்தன.

  •  இயேசுவை அறிக்கை செய்வதற்கு இது போன்ற நிர்ப்பந்தம் வந்தால் உங்கள் நிலை என்ன?
  • துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை என்றான் ஒரு உலக ஞானி. இந்த ஞானம் உங்கள் அனுபவமாகுமா?
  • அது தான் உங்களுக்கு முன்பு வைக்கப்படும் கேள்வி! பதில் சொல்ல வேண்டியவர்கள் நீங்களும் நானும்தான்!


A sudden shocking news awaited the 14th Battalion of the Roman Regiment. It was from Emperor Lucinius who ordered everyone to prostrate before his gods and worship them. In the 14th Battalion were 40 soldiers who were Christians. They were staunch that they worshipped Christ Jesus alone and they would never prostrate before statues. In spite of all the threats, they refused. This happened in 320 AD. It was a bitterly cold season. They were punished and forced to stand naked on the frozen river.

They were given a chance to reconsider their decision to escape punishment by bowing down to the idols or die stark naked in a cold unforgiving river. These were the two options laid before them.With unflinching manhood, the 40 Christian warriors sang songs of praises in the cold. They were not cowardly to betray Christ their Savior.

At midnight, one soldier after another suffered and died in the bitter cold. Of the 40 soldiers, one comrade was still alive and saw how cruelly his friends died.  Though he entered the water, he waded back to the bank betraying his belief in Christ. He was ready to give up his faith for the comforts of living.

Seeing the entire scene unfold before him, the Commander saw the bravery of 39 soldiers, who dared not to think a minute to save their lives but held their faith. Just then, he removed his weaponry and clothes; decided to die as a Christian, though it was but a day to hold his faith rather than to live forever as a heathen.

The day dawned and 40 corpes were floating on the freezing river.

1. Do we ever question ourselves what we would do if we were in such a compelling circumstance?

2. There is a saying that “Death is a bed of roses for the brave”. Will that be our proclamation too?

3. This is the question before you and me. And no one else can answer that except you and me? Will we?

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!