Posts

Dr.Ida Scudder டாக்டர். ஐடா ஸ்கடர்

Image
டாக்டர் ஜான் ஸ்கடர் திண்டிவனத்தில் மருத்துவ மிஷனெரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர் ஜான் ஸ்கடர் ஜூனியர் மற்றும் சோபியா ஸ்கடர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தையாக 1870 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ஐடா ஸ்கடர் பிறந்தார். ஐடா ஸ்கடருக்கு ஆறு வயதாக இருக்கும்போது 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின் கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனெரியாகப் போவதில்லை என தீர்மானித்திருந்தார். மசாசூசெட்ஸில் உள்ள நார்த்ஃபீல்ட் செமினரியில் படிக்க டுவைட் மூடியால் அழைக்கப்பட்டார். அங்கு அவர் குறும்புகளுக்கு நற்பெயர் பெற்றார். 1890 இல் தமிழ்நாட்டின் திண்டிவனத்தில் உள்ள மிஷன் பங்களாவில் அவரது தாயார் நோய்வாய்பட்டிருந்தபோது தனது தந்தைக்கு உதவுவதற்காக இந்தியா திரும்பினார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் இரவில் நடந்த நிகழ்வு அவரது வாழ்வை மாற்றியது.  அந்நிகழ்வை இவ்வாறாக குறிப்பிடுகிறார் ஐடா,  ...... அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை!  காரணம்,   பிள்ளை பேற்றுக்காக எதிர்நோக்கி இருந்த தன் அன்பு மனைவியருக்கு, உள்ளூர் மருத்துவச்சிகளால் வைத்திய உ...

THOMAS WALKER தாமஸ் வாக்கர்

Image
         பண்ணைவிளை பங்களாவிற்குள் சென்றவர்கள் எவரும் தனி மனிதனாய் திரும்பியதில்லை. கிறிஸ்துவை இதயத்தில் ஏந்தியபடி தான் திரும்பி வர முடியும். அந்த பங்களாவிற்குச் சொந்தக்காரராய் இருந்தவர் தாமஸ் வாக்கர் ஐயர் அவர்கள்.         தாமஸ் வாக்கர் பிப்ரவரி 9, 1859 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டெர்பிஷையரில் உள்ள மேட்லாக்பாத் என்ற கிராமத்தில் ரிச்சர்ட் மற்றும் இசபெல்லா ஆகியோருக்குப் பிறந்த ஏழு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ள குடும்பத்தில் நான்காவது மகனாகப் பிறந்தார்.          வாக்கர் தனது பள்ளி படிப்பை சாண்ட்ரிங்ஹோம் பள்ளியில் படித்தார். பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே தேவபயத்துடன் வளர்ந்தார். 17வது வயதில் இவர் ஒரு வேதாகம வகுப்பில் கலந்து கொண்ட போது, அங்கு சொல்லப்பட்ட "கன்மலையின் மேல் கட்டுகிறவன் மற்றும் மணலின் மேல் கட்டுகிறவன்" உவமை அவரின் இருதயத்தை ஆழமாகத் தொட்டது. உடனே அவர் கர்த்தரிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார்.  வாக்கரின் தந்தை தனது மகன் வியாபாரம் செய்ய வேண்டும் என்று விரு...

பக்த்சிங் Bakht Singh

Image
   2000 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாள் ஹைதராபாத் நகரமே ஸ்தம்பித்தது. ஹெப்ரோன் வளாகம் முதல் சிக்கடப்பள்ளி மயானம் வரை மக்கள் கூட்டம் கடல் போல் இருந்தன. அன்று மட்டும் சுமார் 2 1/2 இலட்சம் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. கூட்டங்களைக் கட்டுப்படுத்த போலீஸாரின் போராட்டமும் பலனளிக்கவில்லை. மூன்று கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 3 மணி நேரங்கள் ஆனது. அடக்க ஆராதனை மக்கள் தேவனைத் துதிக்கும் விழாவாகக் காட்சியளித்தது. இறுதி ஊர்வலத்தில், அன்னாரது உயிரற்ற சடலத்தை மக்கள் மரங்களிலும், வீட்டு கூரைகளிலும் ஏறி நின்று காணத் துடித்தனர். அவர் மரித்த செப்டம்பர் 17 - ஆம் தேதியன்று காலை 6:05 மணிக்கு ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அசாதாரணமான இடி மற்றும் மின்னல்களுடன் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. விளக்குகள் அணைந்து சிறிது நேரம் நகரம் முழுவதையும் இருள் சூழ்ந்தது. அவரை அடக்கம் பண்ணும் செப்டம்பர் 22 - ஆம் நாளன்று, வானவில் ஒன்று சூரியனைச் சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் வானவில் மறைந்தபின், கிரீடம் போன்ற ஒளிரும் வளையம் ஒன்று சூரியனை சுற்றி தோன்றியது. இறுதி ஊர்...

ஜிம் எலியட் & எலிசபெத் எலியட் Jim Elliot and Elisabeth Howard Elliot

Image
நான் ஆண்டவருக்காக தன்னலமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு எனது ஆற்றல் மற்றும் வலிமை அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன். இது ஒன்றே எனது வாஞ்சை! – ஜிம் எலியட் ஜிம் எலியட் அமெரிக்காவில் ஓரிகன் மாநிலத்திலுள்ள போர்ட்லன்ட் என்ற பட்டணத்தில் பிரட் எலியட் மற்றும் கிளாரா தம்பதியருக்கு 1927 - ஆம் ஆண்டு அக்டோபர் 8 - ஆம் நாள் மூன்றாவது மகனாக பிறந்தார். இவரது பெற்றோர் பல இடங்களுக்குச் சென்று பிரசங்க ஊழியம் செய்து வந்தனர். ஜிம் எலியட் தனது சிறுவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து போதித்ததோடு கீழ்ப்படிதலையும் நேர்மையையும் அவர்களுக்கு அதிகமாக வலியுறுத்தினர். தனது சிறுவயதிலேயே பேச்சாற்றல் கொண்ட ஜிம் எலியட் கிறிஸ்துவைப் பற்றி பேசவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். தனது கல்லூரி படிப்பின்போது எந்தவொரு சபையையும் சாராமல் விசுவாசத்தோடு மிஷனெரி ஊழியம் செய்ய வேண்டுமென உந்தப்பட்டார். 1947- ஆம் ஆண்டு மெக்சிகோ சென்று 6 வாரங்கள் அருட்பணியாற்றினார். ஒருமுறை சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜிம் எலியட் அங்கு பிரேசில் நாட்டிலிருந்து...

John Hyde, ஜான் ஹைடு

Image
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் சுவிசேஷம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியிலோ, திருச்சபையிலோ எந்தவித அனலுமில்லாத நிலை இருந்தது. பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது. 1892-ம் ஆண்டு இம்மண்ணில் ஜெபவீரன் ஜான் ஹைடு கால்பதித்தார்.  இவரது தந்தை ஸ்மித் ஹாரிஸ் ஹைடு குருத்துவப் பணி செய்து வந்தார். இவரது மனைவி திருமதி. ஹைடு அம்மையாரும் போதகருக்கேற்ற சிறந்த துணைவியாராக இருந்தார். ஆத்தும அறுவடைக்கு பணியாளர்கள் தம் திருச்சபையிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று இத்தம்பதியர் தினந்தோறும் தேவனிடம் மன்றாடி வந்தனர். ஆனால் தன் மகனே இப்பணிக்குச் செல்வார் என்று சிறிதும் நினைக்கவில்லை. அழைத்தவர் தேவன் அல்லவா? ஆகவே பெற்றோர் சந்தோஷத்தோடு தங்கள் மகனை பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.  ஜான் ஹைடு சாதாரண மனிதராகவே காணப்பட்டார். அவருக்குக் கேட்கும் திறன் சிறிது குன்றியிருந்தது. இது அவர் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள இடையூராக இருந்தது. எனினும், அதனைப் பொருட்படுத்தாது முன்னேறி சென்றார். "The Punjab Prayer Union" என்ற குழுவோடு...

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

Image
பரஹத் என்பது அவரது இயற்பெயர். எகிப்தின் தலைநகராகிய கெய்ரோவில் ஒரு பிரபலமான நிறுவனத்தின் ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். ஒருநாள் விலை மதிப்புள்ள அவரது  கைக்கடிகாரம் காணாமல் போனது. அதன் நிமித்தம் இடிந்து போயிருந்தார். சில நாட்களுக்குப் பின் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. தெருவெல்லாம் குப்பை குவியலில் கோமேதகம் தேடுவது போல் கிளறித் திரியும் ஒரு மனிதன் அவரது வீட்டின் கதவைத் தட்டினான்.  அருவருப்போடும் அலட்சியப் போக்கோடும் அதட்டும் மொழியில் 'என்ன வேண்டும்' என்று கேட்டார். அந்த மனிதனின் முகத்தில் ஒரு அலாதி ஜொலிப்பு. தரித்திரத்தையும் மீறி பிரகாசமாய் அவனை வட்டமிட்டிருந்தது. வந்தவன்,"ஐயா, உங்கள் பொருள் ஏதேனும் காணவில்லையா?  இந்த அடுக்கத்தில் பலரிடம் கேட்டு விட்டேன். எவரும் எதையும் இழக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். நீங்கள் எதையும் இழந்து தவிக்கிறீர்களா?" என்று பணிவோடு கேட்டு  பரஹத்தின் பதிலுக்காகக் காத்திருந்தான்!  "ஆமாம்! எனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பறிகொடுத்து சில நாளாய் தவியாய் தவிக்கிறேன்" என்றார். "அப்படியா? இதோ பாருங்கள். இது உங்களுடையது தானோ? "...

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

Image
       1999 - ஆம் ஆண்டு ஜனவரி 22 - ஆம் நாள் நள்ளிரவில் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவின் ஒரிசா மாநிலத்திற்கு சமூக சேவை செய்ய வந்த கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் (57 வயது) அவரது மகன்கள் பிலிப்பு (10 வயது) தீமோத்தேயு (7 வயது) இம்மூவரும் இரக்கமின்றி தீ கொளுத்தப்பட்டார்கள்.         ஒரிசாவிலுள்ள கியோஞ்ஜகார் மாவட்டத்தைச் சேர்ந்த பாரிப்படாவில் வாழும் சராசரி மனிதர்களில் ஒருவர் சாந்தானுசத்பரி. எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியாவிலுள்ள கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் அவரது பேனா நண்பரானார். இவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பின் மூலம் பெற்ற அன்பு மேலோங்கியது. சத்பதி தன் கடிதத்தில் இந்தியாவைப் பற்றி ஸ்டெய்ன்ஸிற்கு விவரித்து எழுதினார். சத்பதியின் எழுத்து ஸ்டெய்ன்ஸை 1965 - ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அழைத்து வந்தது. நண்பரைப் பார்க்க பாரிபாடாவுக்குப் புறப்பட்டு வந்தவர் அதன் பின் தன் நாட்டிற்குத் திரும்பாமல் இந்தியா என் தாய் வீடு என தங்கிவிட்டார். ஆஸ்திரேலிய தொழுநோய் மருத்துவ ஊழியம் என்ற சமுதாய சேவை நிறுவனத்தோடு தன்னை இணைத்து பணி செய்ய ஆரம்பித்தார். ஒரியா சந்தாலி மக்களை ஸ...