Posts

William Carey -1 (Tamil & English)

Image
"What are you planning to do, William?" asked his friend. "I'll travel the world. How about you?" "I have two looms and I'll be a weaver”. “But it will not be within four walls." said William Carey. He had youthful energy and zest to serve the Lord while he was a sickly man. His father, knowing his son's illness, wanted him to be a cobbler and trained him in the profession. Carey became a cobbler and worked from home. He placed a notice outside his cottage saying 'Old Shoes bought and sold'. During his weekdays, he did his work but spent his weekends at church preaching and attending church. He had a leather globe at home and his heart longed to travel around the world with missionary zeal. He learned all the facts about countries and stuck them on the globe. He joined a Baptist church to become a missionary. The priests stopped him by saying he was hasty and the Lord would somehow save them even if he didn't go. He was

William Tyndale வில்லியம் டிண்டேல் (tamil & English)

Image
வில்லியம் டிண்டேல் ( A Hero for the information age - Father of English Bible Translators) (1494 -1536) டிண்டேலின் இளமைக் காலம் :       வில்லியம் டிண்டேல் 1494 ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார் . சிறு வயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப்பட்டார் . பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய கால மூடநம்பிக்கைகள் இவரை சிந்திக்க வைத்தன . ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார் . இதன் விளைவு அவரை ஒரு சபை சீர்திருத்த வாதியாக உருவாக்கியது . மார்ட்டின் லுத்தர் மற்றும் சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்த வாதிகளின் கருத்து இவரை மிகவும் கவர்ந்தது .1521 ம் ஆண்டு இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவம் பெற்றார் . திரும்பவும் தன் ஊருக்குத் திரும்பி , அங்குள்ள சபையின் போதகரானார் . டிண்டேலின் முற்போக்குத் தனமான சிந்தனைகளும் , கத்தோலிக்க பழமை வாதத்திற்கு எதிரான இவரது செயல்களும் சபை தலைவர்களின் கவனத்தை திருப்பியது . முதல் ஆங்கில வேதம் :      1523 ல் டிண்டேல் லண்டன் திரும்பி புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழ

ஜான் சுங் John Sung (Tamil & English)

Image
ஜான் சுங் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் , தன் ஜீவனை நஷ்டப்படுத்தினாலும் அவனுக்கு லாபம் என்ன ? இந்த வசனம் ஜான் சுங்கின் வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்தது . யார் இந்த ஜான் சுங் ? இவர் சீன மெதடிஸ்ட் ஊழியரின் மகனாக பிறந்தார் . சிறுவயதிலேயே மிகுந்த அறிவாளியாக காணப்பட்ட இவர் . அறிவியல் துறையில் அதிக நாட்டம் கொண்டார் . அமெரிக்காவிற்குச் சென்று அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார் . கல்வியில் அவர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் மனதிலே நிம்மதியற்றவராகவும் , குழப்பங்கள் நிறைந்தவராகவும் வாழ்ந்து வந்தார் .   ஒரு நாள் மேற்கண்ட வேத வசனம் அவரோடு பேச ஆரம்பித்தது . ஆண்டவரின் அழைப்பிற்கு அடிபணிய ஆரம்பித்தார் . வேதாகம கல்லூரியில் சேர்ந்தார் . எனினும் அக்கல்லூரியின் போதனைகள் அவருக்கு உற்சாகத்தை அளிக்காத நிலையில் தனிமையில் இறைவனோடு உறவாட ஆரம்பித்தார் . வேதாகமத்தை படிக்க படிக்க அவர் உள்ளத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது . பரிசுத்த ஆவியானவர் அவரோடு இடைப்பட்டார் . ஜான் சுங் பெற்ற ஆனந்தத்திற்கு அளவே இல்லை . தான் பெற்ற மகிழ்ச்சியை நண்பர்களிடம் வந்து கூற , அவர்களோ இவரை பைத்திய

ஜான் கெடி John Geddie (Tamil & English)

Image
ஜான் கெடி ஏப்ரல் 10,1815- ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார் . பிறந்த சில நாட்களிலேயே கெடி மிகவும் பலவீனப்பட்டு மரண தருவாயில் இருந்தார் . அவரின் பெற்றோர்   அவருக்காக பாரப்பட்டு ஜெபித்தனர் . அவர் குணமாக்கப்பட்டால் அவரை ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்வதாக ஜெபித்தனர் . அவர் கொடூரமான மக்கள் மத்தியில் பயமில்லாமல் ஊழியம் செய்வார் என்று யாரும் நினைத்து பார்த்ததில்லை . ஜான் ஒரு சிறந்த மாணவனாக இருந்தார் . தன் சிறுவயதில் எந்நேரமும் புத்தகத்தை படித்துக் கொண்டே இருப்பார் . தனது  19- ம் வயதில் இரட்சிப்பை பெற்று பிரஸ்பெடிரியன் சபையோடு சேர்ந்தார் . தன் இளவயதில் வேதாகம கல்வியில் ( Theology ) சேர்ந்தார் . மார்ச் 13, 1838- ஆம் ஆண்டு போதகராக நியமிக்கப்பட்டார் . அதே ஆண்டு போதகராக நியமிக்கப்பட்டார் . அதே ஆண்டு சார்லெட் அம்மையாரை திருமணம் செய்தார் . New Hebrides   - இல் ( தற்கால  Vanvatu  நாட்டின் )  Melensian  மற்றும்  Polynesian   தீவுகளில் வாழும் நர மாமிச பட்சிகள் மத்தியில் ஊழியம் செய்ய நவம்பர் 30, 1846- ல் கெடி தன் குடும்பத்தோடு புறப்பட்டார் . அக்டோபர் 17, 1847- ல் அவர் அங் கு சென்றடைந்தார் . பின்னர் ,

Damien டாமியன் (Tamil & English)

Image
டாமியன் பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் ( Molokai Island) என்பது சிறு தீவு . தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள் . தொழுநோயால் தாக்கப்பட்டோ ர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்டு , கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை கழித்தனர் . மக்களால் மட்டுமல்ல , கடவுளாலும் கைவிடப்பட்டு விட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர் . அவர்களுக்கு உதவி செய்யவும் , நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பாற்றவும் யாரும் முன்வரவில்லை . காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு . 1873- ஆம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடிப் புறப்பட்டான் ஒரு இளைஞன் . அவர் தான் டாமியன் ஆவார் . பலர் அவரை தடுத்தனர் . ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார் . மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ கொடுமையாய் இருந்தன . வியாதியின் கொடுமையால் நடைபிணங்களாக , உடலெல்லாம் புண்களாக , சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர் . அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன