Posts

சூசன்னா வெஸ்லி Susanna Wesley (Tamil & English)

Image
18- ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த வெஸ்லி குடும்பம் அருட்பணியில் அதிக நாட்டம் கொண்ட குடும்பம் . சாமுவேல் வெஸ்லி ஒரு போதகராக பணி செய்து வந்தார் . சூசன்னா வெஸ்லி இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் . தேவன் அவர்களுக்கு 19 பிள்ளைகளை கொடுத்தார் . அதில் 10 பேர் மட்டுமே பிழைத்துக் கொண்டனர் . சூசன்னா அயராத ஒரு ஜெப வீராங்கனையாக இருந்தார் . தன்னுடைய வீட்டு வேலைகளை எல்லாம் காலமே முடிந்து விட்டு , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிள்ளைகளுக்காக தேவனிடம் ஜெபிப்பது அவரது வழக்கமாக இருந்தது . தன்னுடைய பத்து பிள்ளைகளும் தேவனின் திராட்சைத் தோட்டத்தின் பணியாளர்களாக வாழ வேண்டும் என விருப்பம் கொண்டார் . சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால் தேவன் சூசன்னாவின் ஜெபத்திற்கு பதிலளித்ததை நாம் பார்க்க முடியும் . இங்கிலாந்து தேசத்தின் எழுப்புதலுக்கு சூசன்னாவின் இரண்டு பிள்ளைகளான ஜான் வெஸ்லி மற்றும் சார்லஸ் வெஸ்லி முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . கணவர் சாமுவேல் வெஸ்லி மரித்த பின் தன் 10 பிள்ளைகளையும் , சூசன்னா தனிமையாக பொறுப்போடு வளர்த்து வந்தார் . அநேக சவால்களையும் , போராட்டங்களையும் சந்தித்தார் . இரண்டு முறை அவ

Martyrs in Rome , ரோம் நகரில் இரத்த சாட்சிகள் (Tamil & English)

Image
40 Martyrs  ரோம சக்ரவ ர்த்தியின் போராளிகளில் 14- ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு திடீரென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது . மன்னன் லைசீனியஸிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த அரச கட்டளையின்படி அவர்கள் அனைவரும் தன் குலதெய்வத்துக்கு முன்பு விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் . அந்த போர் படையில் 40 பேர் கிறிஸ்துவை சேவிக்கும் வீரர்கள் இருந்தனர் . இயேசுவுக்கு முன்பு தெண்டனிட்டுப் பணிந்து வாழும் நாங்கள் வெறும் சிலைகளுக்கு முன்னதாக தாழ்பணிய முடியாது என்று தீர்க்கமாக மறுத்து விட்டனர் . இது நடந்தது கி . பி .320 – ஆம் ஆண்டில் . அது ஒரு பனிகாலம் , சிலைக்கு முன் சிரம் தாழ்த்த மறுத்துவிட்ட அந்த கிறிஸ்துவின் அடியவர்கள் உறைந்துபோய் நின்ற நதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . அவர்களது அனைத்து வஸ்திரங்களும் உரிந்து கொள்ளப்பட்டன . ஒன்று அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும் அல்லது அந்த உறைபனியில் வெற்றுடம்போடு நின்று சாக வேண்டும் . இது தான் அவர்கள் முன் வைக்கப்பட்ட தெரிந்தெடுப்பு . அஞ்சாத ஆண்மையோடு அந்த நாற்பது வீர விசுவாசிகளும் பாடல்கள் பாடி அந்தக் கொல்லும் பனியிலும் தேவனை துதித்த வண்ணம் இருந்தனர் .

மெரிலின் லசோலா, Merlin Lasola (Tamil & English)

Image
பாப்புவா நியூ கினித் தீவில் வாழும் மக்கள் 700 விதமான மொழிகளைப் பேசுகிறார்கள் . அதில் செப்பிக் இவாம் என்பதும் ஒன்று . அம்மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்துக் கொடுக்க மெரிலின் லசோலா என்ற பெண் ஊழியர் புறப்பட்டுச் சென்றார் . செப்பிக் இவாம் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது . அது ஒரு பேச்சு மொழி ஹவுனா கிராமத்தில் தளம் அமைத்து தன் உடன் ஊழியருடன் மெரிலின் தனது ஊழியத்தை ஆரம்பித்தார் . அவ்வூரில் மந்திரவாதிகள் அதிக சுறுசுறுப்பாகவே காணப்பட்டனர் . யாருக்காவது சுகமில்லை என்றால் அவர்களது கூரிய மூங்கிலால் நெற்றியைக் கீறுவார்கள் . பின் அதிலிருந்து வெளிப்படும் இரத்தம் சுகவீனத்தினிமித்தம் கெட்டு விட்டது என்று கூறி ஒருவித இலையை வாயில் மென்று கொண்டே அவர்கள் காயமுண்டாக்கின நெற்றியில் துப்புவார்கள் . அதன் மூலம் அசுத்த ஆவிகள் நோய்கண்டவர்களிடமிருந்து நீங்குவதாக அந்த ஊர் மக்களை மந்திரவாதிகள் ஏமாற்றி வந்தனர் . அவர்கள் அப்படி உமிழ்வதால் மந்திரவாதிகளை " துப்புவோர் " என்ற பெயரில் அழைத்தனர் .     மெரிலின் தன் உடன் ஊழியருடன் அன்றாடம் மொழி பெயர்த்த பகுதிகளை அவ்வூர் முதியவர்களைக் கூடிவரச் செய்து இரவுதோறு

Moravian Missionary Society மொரேவியன் மிஷனெரி சங்கம் (Tamil & English)

Image
வில்லியம்கேரிக்கு அப்போது இருபத்து மூன்று வயது. தன் ஆவிக்குரிய வழிகாட்டிகளான ஜான் நிலாண்ட், ஆண்ட்ரூபுள்ளர், ஜான் ஸட்கிளிப் ஆகியோருடனும் வேறு சிலருடனும் இணைந்து மாதந்தோறும் இங்கிலாந்திலுள்ள சபைகளின் மலர்ச்சிக்காகவும், சுவிசேஷத்தின் பரவுதலுக்காகவும் ஜெபிக்க முற்பட்டார். அதுவே பின் பேப்டிஸ்ட் சுவிசேஷ பிரபல்ய சங்கமாக வடிவம் பெற்று கேரியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இது நடந்தது 1784-இல். இந்த அமைப்புதான் சீர்திருத்த சபையின் முதல் நற்செய்திப்பணி இயக்கமாகக் கருதப்படுகிறது.  கிழக்கு ஜெர்மனியில் ஹெர்ன்ஹட் எனுமிடத்தில் வாழ்ந்துவந்த சின்சென்டார்ப் குழுவில் அவர்கள் கிரமமாக கூடி ஜெபித்ததோடு சங்கிலித்தொடர் ஜெபமுறையையும் கையாண்டு ஆளுக்கு ஒரு மணிநேரம் என்று ஒரு நாளை 24 கூறுகளாக்கி தொடர் கண்விழிப்பு ஜெபத்தை மேற்கொண்டனர்.  ஏசாயா 62:6. வசனத்தின்படி தங்கள் தாய் நாட்டு மக்களின் காவலாளிகளாக தங்களை எண்ணிக் கொண்ட இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிஷனெரி ஜெபக்குழுக்களை திரளாக அமைத்தனர். தேவனைத் தேடுவது, வேதத்தை கற்றுக் கொள்வது, கிறிஸ்தவ ஐக்கியத்தை அப்பியாசிப்பது, ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்

HUGH LATIMER லாட்டிமர் (Tamil & English)

Image
  1555, அக்டோபர் 16 ஆம் நாள்… கள்ளப்போதகன் என்று பட்டம் சூட்டப்பட்டு கம்பங்களில் கட்டப்பட்டு போகிப் பொங்கலன்று தூக்கி எரிக்கப்படும் தேவையற்ற பொருளாக வேத பண்டிதர் லாட்டிமர் நிறுத்தப்பட்டார் .  கிரியையை வலியுறுத்தி கிருபையை இருட்டடிப்புச் செய்ய அவர்கள் , சத்தியம் தவறாத தேவமகன் லாட்டிமர் தங்களோடு ஒத்துபோகாத காரணத்தால் கொலைக்குற்றம் சாட்டினர் . அவருடன் பிஷப் ரிட்லுயும் அதே காரணத்துக்காக முதுகோடு முதுகாக சேர்த்துக் கட்டப்பட்டு கொலைமரத்தில் கொண்டு நிறுத்தப்பட்டார் . இந்த விசுவாசப் படுகொலை  பார்க்க திரள்கூட்டம் கூடி வந்திருந்தது . பார்வையாளர்களுக்குத் தான் அன்றும் இன்றும் பஞ்சமில்லையே . இந்த மரணத்தால் தங்கள் ஆத்துமாவை கொல்ல முடியாது என்று மனத்தெளிவுடன் அந்தக் கொலைக் கம்பங்களையே லாட்டிமர் முத்தமிட்டார் . ரிட்லி வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவே உமது கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் , என்று உரக்கச் சொன்னார் . திருச்சபையின் துரோகிகள் என்று இவர்கள் பொய் குற்றம் சாட்டினார்கள .; அக்கம்பங்களுக்கு தீமூட்டும் முன்னர் தங்கள் சடங்குபிசகாமல் இறுதிப் பிரசங்கம் ஒன்றை செய்தனர் . அன்று பேச