HUGH LATIMER லாட்டிமர் (Tamil & English)

 

1555, அக்டோபர் 16ஆம் நாள்…

கள்ளப்போதகன் என்று பட்டம் சூட்டப்பட்டு கம்பங்களில் கட்டப்பட்டு போகிப் பொங்கலன்று தூக்கி எரிக்கப்படும் தேவையற்ற பொருளாக வேத பண்டிதர் லாட்டிமர் நிறுத்தப்பட்டார்கிரியையை வலியுறுத்தி கிருபையை இருட்டடிப்புச் செய்ய அவர்கள், சத்தியம் தவறாத தேவமகன் லாட்டிமர் தங்களோடு ஒத்துபோகாத காரணத்தால் கொலைக்குற்றம் சாட்டினர். அவருடன் பிஷப் ரிட்லுயும் அதே காரணத்துக்காக முதுகோடு முதுகாக சேர்த்துக் கட்டப்பட்டு கொலைமரத்தில் கொண்டு நிறுத்தப்பட்டார்.

இந்த விசுவாசப் படுகொலை பார்க்க திரள்கூட்டம் கூடி வந்திருந்தது. பார்வையாளர்களுக்குத் தான் அன்றும் இன்றும் பஞ்சமில்லையே. இந்த மரணத்தால் தங்கள் ஆத்துமாவை கொல்ல முடியாது என்று மனத்தெளிவுடன் அந்தக் கொலைக் கம்பங்களையே லாட்டிமர் முத்தமிட்டார். ரிட்லி வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவே உமது கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், என்று உரக்கச் சொன்னார்.

திருச்சபையின் துரோகிகள் என்று இவர்கள் பொய் குற்றம் சாட்டினார்கள.; அக்கம்பங்களுக்கு தீமூட்டும் முன்னர் தங்கள் சடங்குபிசகாமல் இறுதிப் பிரசங்கம் ஒன்றை செய்தனர். அன்று பேசிய ஸ்மித் என்ற பாதிரியார், உன் சரீரத்தை சுட்டெரிக்க நீ கொடுத்தாலும் உனக்கு அன்பிராவிட்டால் அதில் பயனொன்றும் இல்லை என்று எந்த நிகழ்வுக்குப் பொருத்தமான வசனத்தைக் கையாளும் தங்கள் தங்கள் வழக்கப்படியே பொருத்தமில்லாத தில்லுமுல்லு உபதேசம் ஒன்றைச் செய்து முடித்தார்.     

லாட்ரிமரின் மாணாக்கன் ஆஷ்லி மட்டும் தொலைவிடத்தில் கண்கலங்க நின்றான். அதைக் கண்ட லாட்டிமர்,  "ஆஷ்லி கண்ணீர் சிந்தக் கூடாது. இன்று இரண்டு தீபங்களுக்கு ஒளியேற்றப்படவிருக்கிறது. இந்த தீபங்களை இனி எவராலும் அணைக்கவே முடியாது. இங்கிலாந்து முழுதையும் ஒளியேற்றும் அமர தீபங்கள் நாங்கள்" என்றார்.

   இருவரின் துணிவையும் கண்டு சபைத் தலைவர்களும் அரச பிரதிநிதிகளும் பிரமித்து நின்றனர். தீ எரியட்டும் என்று கட்டளை பிறந்தது. வெளிச்சத்தை விட சத்தியத்தின் காவலர்களான லாட்டிமர், ரிட்லி ஆகிய இருவரின் முகத்திலிருந்தும் பிரகாச ஒளிக்கீற்றுகள் புறப்பட்டன. அந்த ஜோதிப் பிரகாசத்தில் தேவ தூதர்களாக அவர்கள் காட்சி தந்தார்கள்.

 அப்போது லாட்டிமர் ரிட்லியின் செவிகள் கேட்க ரிட்லி வா! உன் ஆண்மையை வெளிப்படுத்து என்றார். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையால் தங்கள் இரத்த நாளங்களையும், நரம்புகளையும் உரமேற்றிய இவர்களை இந்த நெருப்பு என்ன செய்ய முடியும்? சுயத்துக்கு என்றோ மரித்துப் போன இந்த சீலர்களுக்குசாவு என்பது ஒரு முடிவு அல்லவே அது பரலோகத்தின் முகத் துவாரம் அல்லவா. இறுதியில் யார் ஜெயித்தது?சத்தியத்தை யார் தடுக்க முடியும்!

சத்தியத்தின் காவலர்கள் என்ற தன் மதிப்பில் வாழும் வேத புரட்டர்கள் உண்மையில் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கவா முடியும்? சத்திய தேவனின் பிள்ளைகள் என்றாவது இந்த சதுரங்க ஆட்டத்தில் தோற்றுப் போனதுண்டா? இல்லையே காரணம் சத்தியம் போலிகளின் தோல் உரிக்கும். முடிவில் சத்தியம் நிச்சயம் ஜெயிக்கும்.

இன்று இந்திய திருச்சபை வளர்ச்சிக்கும் அஞ்சாநெஞ்சங்கள் தேவை. சத்தியத்தை நிலைநாட்ட எழுந்து நின்ற லாட்டிமர்கள், ரிட்லிக்கள் தேவை!புழுவாக நெளிந்து பாவத்தில் பரஸ்பரம் கண்டு பின் நெடுங்காலம் வாழ்வதைவிட ஒரு நாள் வாழ்ந்தாலும் தலை நிமிர்ந்து குதிங்காலில் ராஜ கெம்பீரத்துடன், கிறிஸ்துவ அழகுடன், சுவிசேஷத்துக்காக சாதனையாளராக வாழ்வது நல்லது.

            இனி பதில் சொல்ல வேண்டியவர்கள் நீங்களும் நானும் தான்!

HUGH LATIMER

On 16th October 1555, Hugh Latimer, the renowned Christian Preacher was tied up at the stake to be burnt alive, like an old, unwanted stuff. He was burned down for his blind faith, reformed teachings, and religious principles. Since his beliefs of salvation did not abide with the unbiblical ideologies of the Parish, he was falsely accused of murder and treason. For the same reason, Bishop Ridley was also tied with him back-to-back on the same stake to be burned alive together.

Like always, a huge crowd had gathered to watch this. Latimer kissed the stake knowing their death could not diminish the light in their souls. Ridley looked up to the heavens and exclaimed, “Father, I surrender my spirit into your hands”.

These godly men were falsely accused as traitors of the church. Right before the stakes were set ablaze, the preacher who spoke the final sermon preached an unfavourable sermon saying “Though you offer your body to be burnt, there is no gain if there is no love in your hearts” and gave an unrelated talk for their own convenience. Latimer’s student Ashley wept from afar, sorrowful of their plight. Latimer advised him, “Ashley do not shed tears for me. There are two candles that are going to be lit today and none can diminish the light that comes from them. We will be the light that brightens the whole of England.”

The church leaders and the Government officials stood stunned as they watched the courage of these two men. The command was given to set them on fire. The advocates of truth – the countenance of Latimer and Ridley shone bright with rays of light and they appeared like angels.

Then Latimer shouted to Ridley, “Play the man, Master Ridley”. What can a fire merely do to the body that has been fuelled by the resurrection power of Christ? To those who have disowned their self, death is not an end, it is just an entry into the heavens.Eventually, who won? Can the truth be defeated?

Can the false prophets who claim to be the guardians of truth stand a chance to win against the Truth? Can the children of the one true God ever lose this big game? Never! deceit will always be exposed, and truth alone will triumph.We need fearless hearts like Latimer and Ridley, for the churches in India to grow. We need more of them to arise and establish the truth!

Rather than living a long and wretched life soaked in the comfort of sin, it is far better to live one day majestic in walk, head straight, abiding the Christian principles and turn out to be an achiever for the gospel of Christ.

Now it is up to us to make the choice!


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!