Moravian Missionary Society மொரேவியன் மிஷனெரி சங்கம் (Tamil & English)
வில்லியம்கேரிக்கு அப்போது இருபத்து மூன்று வயது. தன் ஆவிக்குரிய வழிகாட்டிகளான ஜான் நிலாண்ட், ஆண்ட்ரூபுள்ளர், ஜான் ஸட்கிளிப் ஆகியோருடனும் வேறு சிலருடனும் இணைந்து மாதந்தோறும் இங்கிலாந்திலுள்ள சபைகளின் மலர்ச்சிக்காகவும், சுவிசேஷத்தின் பரவுதலுக்காகவும் ஜெபிக்க முற்பட்டார். அதுவே பின் பேப்டிஸ்ட் சுவிசேஷ பிரபல்ய சங்கமாக வடிவம் பெற்று கேரியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இது நடந்தது 1784-இல். இந்த அமைப்புதான் சீர்திருத்த சபையின் முதல் நற்செய்திப்பணி இயக்கமாகக் கருதப்படுகிறது.
கிழக்கு ஜெர்மனியில் ஹெர்ன்ஹட் எனுமிடத்தில் வாழ்ந்துவந்த சின்சென்டார்ப் குழுவில் அவர்கள் கிரமமாக கூடி ஜெபித்ததோடு சங்கிலித்தொடர் ஜெபமுறையையும் கையாண்டு ஆளுக்கு ஒரு மணிநேரம் என்று ஒரு நாளை 24 கூறுகளாக்கி தொடர் கண்விழிப்பு ஜெபத்தை மேற்கொண்டனர்.
ஏசாயா 62:6. வசனத்தின்படி தங்கள் தாய் நாட்டு மக்களின் காவலாளிகளாக தங்களை எண்ணிக் கொண்ட இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிஷனெரி ஜெபக்குழுக்களை திரளாக அமைத்தனர். தேவனைத் தேடுவது, வேதத்தை கற்றுக் கொள்வது, கிறிஸ்தவ ஐக்கியத்தை அப்பியாசிப்பது, ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்வது, தம்தம் குறைவுகளை அறிக்கையிட்டு சீர் பொருந்துவது, கூட்டாக தேவசித்தத்தை கண்டு கொள்வது, கிறிஸ்துவுக்கு சாட்சி பகருவது போன்றவை இக்குழுவின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
இந்த அமைப்பு நாளடைவில் ஊழியரை அனுப்பி ஆதரிக்கும் மொரேவியன் மிஷனெரி சங்கமாக வடிவம் பெற்றது. 100 ஆண்டுகள் தங்குதடையின்றி கூடிவந்த இந்த ஜெபக்குழுக்கள் 2000 ஊழியர்களை உலகெங்கும் அனுப்பி வைத்தனர். வில்லியம்கேரி இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே இவ்வியக்கத்தின் ஊழியர் கல்கத்தாவில் கரையேறி இருந்தனர். வில்லியம்கேரியின் முதல் கனியாகக் கூறப்படும் கிறிஸ்ணபால் கூட மொரேவிய ஊழியரிடம் தான் முதல்முதல் சுவிசேஷத்தை கேள்விப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினரான வில்லியம் விப்பர் போர்ஸ், கிளாப்ஹாம் நகரில் தன் நண்பர்களுடன் சேர்ந்து 20 ஆண்டுகள் தினமும் மூன்று மணி நேரம் கூடி ஜெபித்து தேவபெலத்தோடு அடிமை வியாபாரத்துக்கு எதிராக குரல் கொடுத்துப் போராடி, வெற்றிப் பெற்றனர். அதன் பயனாக அடிமை வியாபாரத்தை ஒழிக்கும் மசோதா 1807-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இன்றும் தேவன் கரிசனையோடு, பாரத்தோடு ஜெபிக்கும் ஜெப வீரர்களை தேடிக்கொண்டிருக்கிறார். நம்முடைய ஜெபமே தேசத்தை பாதுகாக்கும் கேடகமாகும். ஆகவே சோர்ந்து போகாது ஜெபிப்போம். நாம் தேசத்தின் ஜாமக்காரன் என்பதை நினைவில் கொண்டு ஜெப ஊழியத்தை இடைவிடாது செய்வோம். நமது தேசத்திற்கு நமது ஜெபம் தேவை. ஏற்ற சமயத்தில் தேவன் பதில் அளிப்பார். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று கொலோ 4:2
Global visionary and his prayers
William Carey was 23 years old, when he joined hands with his spiritual mentors John Ryland, Andrew Fuller, John Sutcliffe and a few others. They prayed for the revival of the churches in England and for the proclamation of the Gospel. This group later took form as the Baptist Missionary Society and sent William Carey to India in 1784. This organization is considered as the pioneer missionary group after the revival sweep over the church.
Herrnhut is a place in East Germany. A group from this place, ‘Zinzendorf' began to study the Bible and held all-night prayer vigil. They prayed round-the-clock which lasted for one hundred years. Their fervent prayers resulted in designating missionaries to many countries.
As per Isaiah 62:6, they believed themselves to be the watchmen for their mother land. They were instrumental in founding similar prayer groups in England and America.
Zinzendorf established "bands," groups of two, three or more who would encourage each other spiritually. Plans were drawn up to reorganize and unify the community. A sense of expectancy grew and differences dissolved. All embraced one another in forgiveness, with a spirit of love and confessed their sins to each other. Their thoughts were Christ-entered.
This prayer group later became the Moravian Missionary Society which sent and supported missionaries around the world. They thrived
for 100 years and sent 2000 missionaries world wide. This society's Missionary was in Calcutta even before William Carey came to India. It is said that the first fruit of William Carey, Krishna Paul , heard the gospel for the first time from the missionary.
William Wilberforce, a member of the British Parliament, along with his friends in Clapham, prayed for 3 hours everyday for 20 years. He prayed for the abolition of slave trade. God gave him the strength to raise his voice against slave trade. He fought and finally emerged victorious. As a result, the Slave Trade Act 1807, officially an act of slave trade abolition was passed. Although it did not abolish the practice of slavery, it did encourage British action to press other nations to abolish slave trade.
In later years, Wilberforce supported the campaign for the complete abolition of slavery and continued his involvement after 1826, when he resigned from Parliament because of his failing health. The campaign led to Slavery Abolition Act 1833, which abolished slavery in most of the British Empire.
Our Lord needs prayer warriors who will pray with zeal and commitment . Our prayers act as shield for our nation. Let's pray fervently without getting tired. Let's always remember that we are watchmen for our nation and continue this prayer ministry without ceasing. Our nation needs our prayers. Our Lord will answer at the right time. Colossians 4:2 says, "Devote yourselves to prayer, being watchful and thankful."
Comments
Post a Comment