ஈவ்லின் பிராண்ட், Evelyn Brand (Tamil & English)

   


மலைப்பிராந்தியங்கள் என்றாலே ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலாத் தளங்கள் தான் நம் நினைவிற்கு வரும். வசதியான இனிமையான சூழல்கள் அமைந்த அந்த இடங்களுக்கு எத்தனை முறை சென்றாலும் மனம் சலிக்காது. ஆனால் கொல்லிமலை, பச்சைமலை, கல்வராயன் மலை போன்ற இடங்களோ, படிப்பறிவில்லாத பின் தங்கிய மக்களால் சூழ்ந்த இடம். மின்வசதி இல்லாத பல கிராமங்கள் இங்கு இன்றும் உண்டு. அப்படியானால் 130 வருடங்களுக்கு இந்த பகுதி எப்படி இருந்திருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். ஆனால் இந்த மலைப் பகுதி ஒரு இளம் பெண்ணுக்கு தரிசன நிலமாக இருந்திருக்கிறது.

      அந்த இளம் பெண்ணின் பெயர் ஈவ்லின் பிராண்ட்இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் ஒன்பதாவது மகள். வசதியான குடும்பச் சூழல் நிறைவான வாழ்க்கை, எங்கு தன் மகள்கள் தன்னை பிரிந்து தூரம் சென்று விடுவார்களோ என்று எண்ணி திருமணத்தையும் தாமதப்படுத்தினார் தகப்பனார் ஹாரிஸ். ஆனாலும் தேவனுக்கடுத்தவைகளில் ஒரு நாளும் குறைவுபட்டவர் இல்லை. குடும்பமாய் ஊழியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஈவ்லின் சிறந்த ஓவியர். இவரோடு தேவன் இடைபட்ட பிறகு தன் தகப்பனாரிடம் தன்னுடைய தரிசனத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இறுதியில் தகப்பனாரின் ஒப்புதலோடு, இவருக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு ஈவ்லினைப் பார்த்த ஒருவர், இவரைப் பார்த்தால் மிஷனெரியைப் போலில்லை, ஒரு நடிகையைப் போலிருக்கிறார் என்று சொன்னாராம். ஆனால் ஈவ்லினுக்கோ எடுப்பான தோற்றமும், மிடுக்கான வாழ்க்கையும் தேவ சித்தத்தை விட முக்கியமாகத் தோன்றவில்லை.

    ஈவ்லின் ஹோமியோபதி மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.இந்திய மலைப்பகுதிகளில் தன் ஊழியத்தை துவங்க 1917ல் தாகத்தோடு வந்தார்.; இவருக்கு முன்னதாகவே 1907ல் டாக்டர்.ஜெஸிமன் பிராண்ட் இங்கு ஊழியங்களில் ஈடுபட்டிருந்தார். ஈவ்லின் மிஷனெரி பயணத்தில் ஒரு வழிகாட்டியாக இருந்தார். அநேக வாய்ப்புகள் இருப்பினும் தரிசனத்தால் ஒத்த ஜெஸிமன் பிராண்டை தனது வாழ்க்கை துணையாக ஏற்றார். 1913ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள கொல்லி மலையின் அடிவாரத்திலுள்ள சேர்ந்த மங்கலம் ஆலயத்தில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடனேயே அம்மணக் கோலத்திலே கொல்லி மலைக்கு பயணமானார்கள். அம்மலை சுமார் 3,700 அடி உயரமானது. கொட்டும் மழையில் தங்கள் மர வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

     குழந்தைத் திருமணம், பலதாரத் திருமணம், மனைவியைத் தள்ளி வைப்பது, கோடங்கியிடம் குறி கேட்பது, ஜோதிடம் பார்ப்பது, கருப்புசாமி என்னும் தேவதையை வழிபடுவது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் அம்மலைவாழ் மக்களிடம் காணப்பட்டது. மிகவும் ஜெபத்தோடு இம்மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தனர்.

        கல்வியறிவே இல்லாத இம்மக்களுக்காக சுமார் 12 பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தினர். வியாதியஸ்தர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்தனர். சிறுவர் இல்லம், கைம்பெண் ஆதரவு இல்லம், நெசவு வேலை, தச்சுப்பட்டறை, பட்டுப்பு+ச்சி வளர்த்தல், கட்டிட வேலை போன்றவற்றை கற்றுக் கொடுத்ததோடு, வேதாகமத்தையும் நடைமுறையில் கற்றுக் கொடுத்தனர்.

        சரியாக 16 வருடங்களுக்குப் பிறகு 1929ம் ஆண்டு, திடீரென மலேரியா காய்ச்சல் தாக்கியதால் ஜெசிமன் இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றார்.ஈவ்லின் பிராண்ட் தனியாக அங்கு ஊழியத்தைத் தொடர அனுமதி மறுக்கப்பட்டது. கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, பெரிய மலை, சித்தேரி மலை இந்த ஐந்து மலைகளிலும் எப்படியாகிலும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்ற தன் கணவரின் தரிசனமும், தேவ அன்பும் ஈவ்லின் மனதை உந்திக் கொண்டேயிருந்தது. கணவர் இறந்து போனதால் சென்னைக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். 36 ஆண்டுகள் பாப்திஸ்து சங்கத்தில் பணி செய்து 1948ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இடையில் இவர் விடுமுறை நாட்களில் கொல்லி மலைக்கு சென்று ஓவியங்கள் மூலம் சிறுவர் ஊழியம், மருத்துவ சுவிசேஷ ஊழியங்களை சுற்றியுள்ள 5 மலை கிராமங்களிலும் முகாம்கள் அமைத்து செய்து வந்தார். ஒரு காலகட்டத்தில் கால் எழும்பு முறிந்து விட நடக்க இயலாது, இரண்டு கோல்களை ஊன்றி; நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும் பலவீனங்களைத் தாண்டி முதுமையிலும், ஏராளம் ஏராளமான மலைவாழ் மக்களை தேவனுக்கென அறுவடை செய்தார். தன் அருமைப் பிள்ளைகளான மகன் பால்வில்சன், மகள் கோண் இருவரும் ஈவ்லினின் சகோதரியிடம் இருந்தே வளர்ந்தனர். சுமார் 7000 மைல்களுக்கு அப்பால் பிள்ளைகளை விட்டுவிட்டு இந்த மலையையே தன் வீடாக பாவித்து இந்த மக்களையே பிள்ளைகளாக ஏற்று செய்த இவரது ஊழியம் ஐந்து மலைகளையும் தாண்டி அநேக கிராமங்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு சென்றது. பிறருடைய துன்பங்களைக் கண்டு சகியாதவர். தொழுநோயாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தகுந்த சிகிச்சைகளைப் பெற்று தந்தவர்.45 வருடங்கள் தன் கணவர் விட்டு சென்ற பணியை கொல்லி மலையில் நிறைவேற்றினார். 1974ல் தனது 95வது வயதில் டிசம்பர் 18ல் ஈவ்லின் பிராண்ட் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இவரது உடல் கொல்லிமலை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. தேவப் பணியை செய்த ஈவ்லின் பிராண்ட் மலைகளின் தாய் என இன்றும் அழைக்கப்படுகிறார். ஏனென்றால் இளமை, வளமை, வாழ்க்கை என எல்லாவற்றையும் தேவனுக்கு அளித்தவர் ஈவ்லின் பிராண்ட்.

        நாம் இன்று நினைக்கலாம் நமக்கு வயதாகி விட்டது. நம்மால் ஆண்டவருக்காக என்ன செய்ய முடியும் என்று. ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்போம்.ஆண்டவர் நம்மையும் கொண்டு பெரிய காரியங்களை செய்வார்.

When you think of hilly regions, tourist spots like Ooty and Yercaud come to mind. No matter how many times you visit places with comfortable and pleasant surroundings, you will never get bored. But places like Kollimalai, Pachamalai, and Kalvarayan Hill are backward hilly places surrounded by illiterate people. There are still many villages here without electricity. So what would these areas have been like almost 130 years ago? Can you imagine? It is an unimaginable situation. But for one young woman, it has been a visionary land. What will you do if we have to stay permanently as a family in this mountain area, which is a few kilometres away from our villages today? Something to think about...

Evelyn is the ninth daughter of a mega industrialist. A comfortable family environment is the key to a fulfilling life. Father Harris also delayed the marriage, thinking that his daughters would be separated and move away. Yet there is no one who lacks a day in the things of God. Their family is very involved in ministry activities. Evelyn is a great painter. Very handsome. After divine intervention, he shares the vision with his father. Finally, with the approval of the father, a send-off party is organised for him. Someone who saw Evelyn there said she looked more like an actress than a missionary. But for Evelyn, good looks and a glamorous life don't seem more important than godliness. What do you value in your life? Eager to start his ministry in these mountainous regions, Eve arrived in 1917 and had a master's degree in homoeopathy. But before him, in 1907, Dr. Jesse Brandu was engaged in mountain activities. Evelyn was a guide on the missionary journey. Despite many opportunities, the couple took Jesse Brandt as their life partner in 1913 and began missionary work in the Kollimal regions. Choosing the right life partner gives birth to a holy life. Eve Brand Life is a precedent for necessity. They established a livelihood through medical work, educational work, handicraft teaching, a children's home, a maid support home, and about 12 schools in these areas. They faced many sufferings as they shared the gospel with love. Jessie Brandu intended the lines engraved on Evelyn's wedding ring.

 Exactly 16 years later, in 1929, Jesse Brand died of malaria. Eve Brand was then denied permission to go on her own and continue the ministry. Evelyn's heart was driven by her husband's vision and love of God to evangelise Kollimalai, Bachamalai, Kalvarayan Hill, Periya Hill, and Chitheri Hill. She was sent from the hill to Chennai in between and used to go to Kolli Hill on holidays to do children's ministry and medical evangelism through paintings and set up camps in five hill villages around it. At one point, the leg bone was broken. Unable to walk, she was in a situation where she had to walk on two legs. However, despite her infirmities, in her old age, she harvested a large number of hill dwellers for God. Her lovely children, son Paul Wilson and daughter Cone, both grew up with Evelyn's sister. Leaving his children some 7000 miles away, she adopted this mountain as her home and accepted the people as her children, and her ministry took the gospel to many villages beyond the five mountains. Evelyn Brand passed away in the Lord on December 18, 1974, at the age of 95.

How fitting that Evelyn Brand, who served God for 24 years until her death, even after claiming to be very old, was called the "Mother of the Highlanders." Youth, prosperity, and life Evelyn's brand of giving everything to God is like a beautiful flower that bloomed in a dry land. Young woman, don't forget that your young life is not to live like a mind and die mediocre, but to sing praises to the Lord who made you die and live. Agree to God's will... 

 


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!