Pramila Puller Amma பிரமிளா புல்லர்

 


Pramila Puller

She returned homeland after toiling for the Lord in the southern region of Tamil Nadu especially Pannaivillai and Donavur areas for 36 years.

The dedication of Lady Puller is daunting for many if us - getting up early in the morning with the local people, gathering fire wood under the palm trees, embracing the orphaned children, learning Tamil, working hard, braving the unbearable dust and heat, such was her dedication. The words uttered frequently in her prayers was “100% submission”. The Indian Nation especially the Tamilians are greatly indebted to her.

She is one among the pioneers with Tucker Ayya, Lady Amy Carmichael and Walker Ayya in the 1880s. Lady Amy Carmichael had started a children’s home in Pannaivillai  Dohnavur. Pramila Puller who was addressed lovingly as Pramila Ammal came from Canada to India and worked as in charge of the Donavur Home. We are going to learn about her life.When she spoke about promises, she said that promises had double sides. One side is what we have to fulfill and the other side helping to fulfill the promise of God. God had given us many promises. We may be thinking that such promises had not been fulfilled, let us examine ourselves whether we are doing the duty that we ought to do. Many are the experiences of Lady Puller.

Lady Puller when she attended a missionary meeting realized the calling of God when she was 12 years old. She dedicated herself to God and was ready to go anywhere. After school education, she underwent dental nursing Training. While working happily for five years, she conducted Sunday children Bible classes and meetings. She was 24 years old then. God reminded her of her promise which she made when she was 12 years old. Lady puller made many excuses like - I am conducting Sunday classes, I am conducting meetings, It is war time to go outside the country and also that she has dental medical work. God constantly began to intercede with her. When she revealed this to her parents, they also told her that they dedicated her in her young age when she was affected by brain fever. Immediately, She rededicated her life to the Lord who led her wonderfully and got ready to start for India.

God helped Lady Puller to get a place in the ship even when it was war time. The ship which started in March reached India in July after a circuitous route. Do you think why and how she came to India. She used to Sunday school children about all the nations and about the missionary works there. Once she had to teach about the India, she read about the Donavur Mission and taught them. God directed the attention and affection of Lady Puller towards India who knew not where India was. Mother of Lady Puller was praying in the women’s meeting for Donavur. After that, in all incidents, God spoke clearly about India when she realized more about the great needs of India, she disregarded her marriage also.

Lady Puller arrived at India without getting married. When she was asked why she did not marry, she said since the harvest of God’s work was waiting, she whole heartedly involved in that work and that she did not find time for marriage. The Lord honored her dedication and He led her unto the end of her life. She used to say that dedication should not be for a place, or a work or for a person, it should be for the Lord. She said we are to be always ready like a warrior so that wherever there is a need and when God shows it. We have to do it. When Lady Puller came to India, there was neither transport facility nor Electricity. She disregarded herself and carried the cross daily. She regarded the responsibility that fell on her and worked. God enabled growth. 

Lady Puller who worked with Lady Amy Carmicael learnt many things from her and carried them out. Especially obedience. If it is God’s will she learnt instant obedience in fulfilling the task. It was a challenge for her to work in the dirty and dusty Donavur area. She was had to undergo surgeries for 2 or 3 times. She tolerated these for the sake of God. She was careful not to let anything between her and the Lord. She always looked upto God for all her needs. For example, when she begged God for proficiency in Tamil, God gave her the wisdom even to preach in Tamil. God was her everything when she left her family, culture and came alone here for the ministry. She contended with God and got every need met. Let us think it over. You also might have dedicated yourself someday. Are you still going the same path. Think it over. See how many people had dedicated themselves for the salvation of our nation. What is our empathy for the other nations? How is God to us today.


பிரமிளா புல்லர்

      தமிழகத்தின் தென் பாகங்களில் குறிப்பாக பண்ணை விளை டோனாவூர் பகுதிகளில் 36 ஆண்டுகள் தேவனுக்காக தளராது உழைத்து தம் தாயகம் திரும்பி இருக்கிறார். 

      பனை மரத்தடியில் மக்களோடு மக்களாக அதிகாலமே எழுந்து விறகு பொறுக்கி அனாதையென விடப்பட்ட குழந்தைகளை அரவணைத்து,  கடினமாக உழைத்து தமிழ் கற்று தாங்க முடியாத தூசுகள், உஷ்ணம் இவற்றை பொறுத்துக் கொண்டு, அதற்கென தம் சரீரத்தில் வடுக்களை சம்பாதித்த அம்மாவின் தியாகம் சவாலானது!  அவர்கள் தம் ஜெபங்களில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் "நூற்றுக்கு நூறு கீழ்ப்படிந்து வாழ வேண்டும்" என்பது. இந்திய தேசம் அதுவும் தமிழ் சமுதாயம் இவர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறது.

       1890 களில் முன்னோடி டக்கர் ஐயா, ஏமி கார்மிக்கேல் அம்மையார், வாக்கர் ஐயா போன்றவர்களின் வரிசையில் புல்லர் அம்மையாரும் ஒருவர். பண்ணை விளையில் டோனாவூர் குழந்தைகள் இல்லத்தின் கிளை இல்லத்தை ஏமி கார்மிக்கேல் அம்மையார் அமைத்திருந்தார். அதற்கு பிரமிளா அம்மாள் என்று அன்போடு அழைக்கப்பட்ட பிரமிளா புல்லர் கனடாவிலிருந்து இந்தியா வந்து டோனாவூர் இல்லத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். அவருடைய வாழ்வை குறித்து நாம் பார்க்க போகிறோம்.

      வாக்குத்தத்தை பற்றி அவர் கூறும்போது, வாக்குதத்தத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது. ஒரு பக்கம் நாம் நிறைவேற்ற வேண்டியது, மற்றொரு பக்கம் தேவன் கொடுத்த வாக்கை நிறைவேற்ற உதவுவது. தேவன் நமக்கும் அநேக வாக்குதத்தங்களை கொடுத்துள்ளார். அவை இன்னும் நிறைவேறவில்லையே என யோசித்துக் கொண்டிருக்கலாம். நாம் செய்ய வேண்டிய பொறுப்பை செய்கிறோமா என சிந்தித்துப் பார்ப்போம். 36 ஆண்டுகாலம் இந்தியாவில் பணியாற்றிய புல்லர் அம்மையாரின் அனுபவங்கள் அநேகம்.

        புல்லர் அம்மா தனது 12-ஆவது வயதில் ஒரு மிஷனெரி கூட்டத்திற்கு சென்றபோது தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். எங்கும் போவதற்கு நான் ஆயத்தம் என தேவனிடம் தன்னை அர்ப்பணித்தார். பள்ளி கல்விக்கு பின் பல் மருத்துவ  செவிலியராக பணிபுரிய பயிற்சி எடுத்தார். ஐந்து வருடம் சந்தோஷமாக பணி செய்து கொண்டிருக்கும் போது ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர் வேதா பாட வகுப்புகளும் கூட்டங்களும் நடத்தி வந்தார். அச்சமயம் அவருக்கு 24 வயது. 12 வயதில் ஒப்புக்கொடுத்ததை தேவன் அப்போது நினைவு படுத்தினார். புல்லர் அம்மா ஓய்வு நாள் பள்ளி எடுக்கிறேன், கூட்டங்களை நடத்துகிறேன், வெளிநாடு போக யுத்த காலமாக இருக்கிறது, அதுபோக பல் மருத்துவ பணியும் இருக்கிறது போன்ற பல சாக்குப் போக்குகளை கூறினார். தேவனோ தொடர்ந்து அவரோடு இடைபட ஆரம்பித்தார். இதைப் பற்றி தன் பெற்றோர்களிடம் கூறிய போது அவர்களும் தங்கள் மகளை சிறுவயதில் ஏற்பட்ட மூளை காய்ச்சலின் போது தேவனுக்காக ஒப்புக்கொடுத்ததை கூறினார்கள். தன்னை அற்புதமாய் நடத்திய தேவனுக்கு தன் வாழ்வை மீண்டுமாக அர்ப்பணித்து இந்தியாவிற்கு புறப்பட ஆயத்தமானார். 

      யுத்த காலமாக இருந்தாலும் புல்லர் அம்மா இந்தியாவிற்கு வர கப்பலில் இடம் கிடைக்க தேவன் உதவி செய்தார். மார்ச் மாதம் புறப்பட்ட கப்பல் ஜூலை மாதம் எப்படி எல்லாமோ சுற்றி இந்தியா வந்து சேர்ந்தது. எதற்காக? எப்படி? இந்தியா வந்தார் என யோசிக்கிறீர்களா! ஓய்வு நாள் பள்ளி  பிள்ளைகளுக்கு எல்லாம் தேசங்களை பற்றியும் மிஷனெரி பணிகளை பற்றியும் சொல்லிக் கொடுப்பது வழக்கம். ஒருமுறை இந்திய தேசத்தை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியதாயிற்று, அதனால் இந்தியாவைப் பற்றிய புத்தகங்களை படிக்கும் போது டோனாவூர் ஆராதனை  பற்றி வாசித்து அவற்றை பாடமாக கற்றுக் கொடுத்தார். இந்திய தேசம் எங்கேயோ இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த புல்லர்  அம்மாவின் கவனத்தையும் விருப்பத்தையும் தேவன் நம் தேசத்திற்கு நேராக திசை திருப்பினார். புல்லர் அம்மாவின் தாயார் டோனாவூருக்காக தாய்மார் கூட்டத்திலும் ஜெபித்து வந்தார்கள். அதன்பின் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும் தேவன் இந்தியாவை குறித்து தெளிவாக பேசினார். தன்னுடைய பங்கு இந்திய தேசத்திற்கு அதிகம் தேவை என அதிகமாக உணர்ந்த போது திருமணத்தை கூட பொருட்படுத்தவில்லை.

       புல்லர் அம்மா திருமணம் செய்யாமலேயே தேவப்பணி செய்ய இந்தியா வந்தடைந்தார். ஏன் திருமணம் செய்யவில்லையென்று அவரிடம் கேட்கும்போது தேவனுடைய பணியின் அறுவடை காத்திருந்ததால் என் முழு கவனமும் அதிலேயே சென்றுவிட்டது. திருமணம் செய்ய நேரமில்லை என கூறுகிறார். தேவன் அவரது தீர்மானத்தை கனம் பண்ணி அவரது வாழ்வின் இறுதிவரை கைவிடாது வழி நடத்தி வந்தார். அர்ப்பணிப்பை பற்றி புல்லர் அம்மா கூறுவது,  "அர்ப்பணிப்பு என்பது ஒரு இடத்திற்கு ஒரு ஒரு ஆளுக்கு ஒரே வேலைக்கு என்று இருக்கக் கூடாது. தேவனுக்கே என்பதாக இருக்க வேண்டும்". எங்கு தேவையோ அங்கு தேவன் காட்டும் போது போர் சேவகர்  போல சென்று வேலை செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். புல்லர் அம்மா இந்தியா வந்தபோது மின்சார வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லை. ஒவ்வொரு நாளும் தன்னை வெறுத்து சிலுவையை எடுத்து பின் சென்றார். பொறுப்பு நம்மேல் விழுந்திருக்கிறது என்ற எண்ணத்தோடு பணியாற்றினார். தேவனோ விளையச் செய்தார்.

       ஏமி கார்மிக்கேல் அம்மாவுடன் சேர்ந்து பணி செய்து வந்த புல்லர் அம்மா அவரிடம் இருந்து அநேக காரியங்களை கற்றுக்கொண்டு தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தினார். குறிப்பாக கீழ்ப்படிதல். ஒரு காரியம் தேவசித்தம் என்றால் உடனே செய்து முடிக்கும் உடனடி கீழ்படிதலை கற்றுக் கொண்டார். தூசி நிறைந்த புழுதி படிந்த டோனாவூர் பகுதியில் பணி செய்வது அவருக்கு சவாலாக இருந்தது. கடுமையான உஷ்ணத்தால் உடல் சீல் பிடித்தது. அதனால் இரண்டு மூன்று முறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் கிறிஸ்துவுக்காக சகித்தார். தேவனுக்கும் அவருக்கும் இடையே எதுவும் நுழைந்து மேற்கொள்ளாமல்  பாதுகாத்தார். என்ன தேவை என்றாலும் தேவனையே நோக்கி பார்க்க பழகியிருந்தார். உதாரணமாக தமிழ் மொழியை தான் கற்றுக்கொள்ள வேண்டுமென தேவனிடம் வருந்தி கேட்ட போது தேவன் தமிழ் மொழியில் அவர் பிரசங்கம் கூட செய்யும் படியான ஞானத்தை தந்தார். தன் குடும்பம், கலாச்சாரம் என அனைத்தையும் விட்டுவிட்டு தனியாக இங்கு ஊழியம் செய்த போது தேவனே அவருக்கு எல்லாமுமாக இருந்தார். எதையும் தேவனிடம் போராடி பெற்றுக் கொண்டார். 

       நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஒரு வேளை நீங்களும் என்றோ ஒரு நாளில் அர்ப்பணித்து இருக்கலாம். இன்றும் அப்பாதையில் செல்கிறீர்களா? என்று யோசித்துப் பாருங்கள். நம் தேசத்தின் மீட்பிற்காக எத்தனை பேர் பாடுபட்டுள்ளார்கள் பார்த்தீர்களா! மற்ற நாடுகளைப் பற்றிய நமது கரிசனை என்ன? இன்று நமக்கு தேவன் எப்படிப்பட்டவராய் இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!