கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

 


    1999 - ஆம் ஆண்டு ஜனவரி 22 - ஆம் நாள் நள்ளிரவில் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவின் ஒரிசா மாநிலத்திற்கு சமூக சேவை செய்ய வந்த கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் (57 வயது) அவரது மகன்கள் பிலிப்பு (10 வயது) தீமோத்தேயு (7 வயது) இம்மூவரும் இரக்கமின்றி தீ கொளுத்தப்பட்டார்கள். 

       ஒரிசாவிலுள்ள கியோஞ்ஜகார் மாவட்டத்தைச் சேர்ந்த பாரிப்படாவில் வாழும் சராசரி மனிதர்களில் ஒருவர் சாந்தானுசத்பரி. எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியாவிலுள்ள கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் அவரது பேனா நண்பரானார். இவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பின் மூலம் பெற்ற அன்பு மேலோங்கியது. சத்பதி தன் கடிதத்தில் இந்தியாவைப் பற்றி ஸ்டெய்ன்ஸிற்கு விவரித்து எழுதினார். சத்பதியின் எழுத்து ஸ்டெய்ன்ஸை 1965 - ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அழைத்து வந்தது. நண்பரைப் பார்க்க பாரிபாடாவுக்குப் புறப்பட்டு வந்தவர் அதன் பின் தன் நாட்டிற்குத் திரும்பாமல் இந்தியா என் தாய் வீடு என தங்கிவிட்டார். ஆஸ்திரேலிய தொழுநோய் மருத்துவ ஊழியம் என்ற சமுதாய சேவை நிறுவனத்தோடு தன்னை இணைத்து பணி செய்ய ஆரம்பித்தார். ஒரியா சந்தாலி மக்களை ஸ்டெய்ன்ஸ் உயிருக்குயிராய் நேசித்ததால் சந்தாலி மொழியையும் ஒரியாவையும் விரைவாகக் கற்றுத் தேர்ந்தார். 

       15 ஆண்டு இடைவிடாத சேவைக்குப் பின் மொபலைசேஷன் (OM) இயக்கத்துடன் தன்னை தன்னார்வ ஊழியராக இணைத்துக் கொண்டு, இந்தியாவின் கிராமங்களுக்குள் அலைந்து திரிந்தார். அச்சமயம் கிளாடிஸை சந்தித்தார். கிளாடிஸ் பயிற்சி பெற்ற தாதிப் பெண்ணாக இருந்தார். அதுமட்டுமல்ல, ஸ்டெய்ன்ஸின் அமைதி, ஆழமான அர்ப்பணம், இந்தியாவின் மீது அவருக்கிருந்த பாசம் ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

        சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு, போலியோ நோய் தடுப்பு, தொழுநோயாளிகள் பராமரிப்பு, சமுதாய மலர்ச்சிப் பணி, பொருளாதார மேம்பாட்டு உதவி என பலவிதங்களில் இருவரும் பணிபுரிந்து வந்தனர். சந்தாலி வாலிபர்கள் "டங்கிரி" கொட்டு முழங்கி, ஆடல் பாடலுடன் கொண்டாடும் வனவிழாவிலே ஸ்டெய்ன்ஸ் தம்பதியினர் கலந்து கொண்டு, அவர்களுக்கு நல்ல போதனைகளை கூறியும் வந்தனர்.  

         ஒருமுறை பாரிபாடா கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 100 பேர் மரித்துவிட்டனர். அந்த விபத்தில் காயப்பட்ட மற்ற மக்களுக்கு ஸ்டெய்ன்ஸ் இரவு பகல் பாராமல் மருத்துவ சேவை செய்தார். அதனால் அவர் "சந்தாலிகளின் காவலனாகக்" கருதப்பட்டார். 

       1999 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்டெய்ன்ஸ் தன் மனைவி, விடுமுறைக்கு ஊட்டியிலிருந்து வந்திருந்த தன் பிள்ளைகள், தன்னுடன் பணியாற்றி வந்த சமூக சேவகர் கில்பர்ட் வென்ஸ் மற்றும் சில உள்ளூர் நண்பர்களுடன் வனவிழாவிற்குச் சென்றார். அன்றிரவு எப்போதும் போலவே மனோகர்பூர் கிராம ஜெப ஆலயத்தின் முன் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, தன் பிள்ளைகளுடன் நித்திரைக்கு சென்றார். சந்தாலி மக்களின் மறுமலர்ச்சிக்காக உழைத்த அவருக்கு எதிரிகள் இருந்ததாகத் தெரியவில்லை. "சாய்பு" என்று எல்லோராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட அவரை இரவு 12 மணியளவில் ஒரு இளைஞர் படை தீப்பந்தங்களுடன் சூழ்ந்தது. அயர்ந்து தூங்கிய ஸ்டெய்ன்ஸிற்கு இது தெரியவில்லை.

முரட்டாட்டமாக வாழ்ந்து வந்த ரவீந்திரப் பால் தாரா சிங் என்பவன் அப்பகுதியில் வன்முறைகளையும் கொடுமைகளையும் செய்து வந்தான். எப்பொழுதும், அவன் தாக்குதல் நடத்தும் இடங்களில் வினோதமாக விசில் சத்தம் ஒலிக்கப்படும்.  அப்பொழுது அவனது படையினர் தாக்குதல் நடத்த ஆயத்தமாவார்கள்.  அன்றும் அதே போல விசில் சத்தம் கேட்கப்பட்டது.முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த கிறிஸ்தவ வீடுகளுக்கு முன்னால் இரண்டு இரண்டு கூலிப்படையினர் நிறுத்தப்பட்டனர். ஸ்டெய்ன்ஸைக் காப்பாற்ற உள்ளிருந்து கிறிஸ்தவர்கள் வெளியே வரக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 இருட்டான அந்த நேரத்தில் வாகனத்தின் மேல் வைக்கோல் பரப்பி, தீக்கொளுத்தினார்கள்.  நடப்பதறியாது பதறிப்போன  பிள்ளைகள், ஸ்டெய்ன்ஸை கட்டித் தழுவினார்கள். சாகும்போதும் தன் தகப்பனின் அரவணைப்பிலேயே மரித்தனர்.  பிள்ளைகளைக் காப்பாற்ற ஸ்டெய்ன்ஸ் எவ்வளவோ முயன்ற போதும்  அவரை அத்தீப்பந்தங்கள் கொடூரமாகத் தாக்கின. மூன்று பேரும் ஒரே நேரத்தில் தேவனின் கரத்தை அடைந்தனர். இந்நிகழ்விற்குப் பின் தாராசிங் தலைமறைவானான். தற்சமயம், அதற்காக கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் அனுபவித்து வருகிறார்

 35 ஆண்டுகால சேவை பணியின் மூலம் பல ஆயிரம் பேருக்கு வைத்தியம் கொடுத்து, சிலரை கிறிஸ்துவின் அடியவர்களாக்கினவருக்கு இந்த சமுதாயம் கொடுத்த பரிசு தான் கொலை! ஸ்டெய்ன்ஸ் மறைவிற்குப் பின் அவரது அன்பு மனைவி கிளாடிஸ் (அப்போது 47 வயது) அவர்கள் சொன்ன காரியங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கியது. "என் குடும்பத்தை அநியாயமாய்த் தீக்கொளுத்தியவர்கள் மீது எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை. அவர்களை நான் மன்னிக்கிறேன். என் அன்பு கணவரையும், குழந்தைகளையும் கர்த்தர் தம்மோடு இருக்கும்படி விரும்பினார். அதன் காரணமாக அவர்களை அழைத்துக் கொண்டார். அது தேவனுடைய சித்தம். கர்த்தருடைய திருப்பெயருக்கு புகழ் உண்டாகட்டும். என் கணவர் விட்டு சென்ற பணியை நான் தொடர்ந்து நிறைவேற்றவே விரும்புகிறேன். கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் அவரது வருகையின் போது அவர்கள் மூவரையும் சந்திப்பேன்" என்று கூறினார். 

தீமைக்கு நன்மை செய்யுங்கள் என்ற கிறிஸ்துவின் வார்த்தையை தன் செயலால் செய்து முடித்து விட்டார். ஸ்டெய்ன்ஸ் விட்டுச் சென்ற பணியை மனைவி கிளாடிஸ் மற்றும் மகள் எஸ்தரும் 2004ம் ஆண்டு வரை அங்கேயே தொடர்ந்து செய்து வந்தார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் தன் மகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.  என்றாலும் தான் உயிர் போல் நேசித்த பாரிபாடா கிராம மக்களை சந்திக்க அவ்வப்போது வருகையும் தருகிறார்.

 இப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டு இருந்தாலும், அது தேவனின் சித்தமே. தேவன் தனக்கு நிர்ணயித்திருந்த உலக ஓட்டத்தை அவரது சித்தப்படியே ஸ்டெய்ன்ஸ் ஓடி முடித்துவிட்டார். "ஸ்டெய்ன்ஸ் அவர்கள், கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இதை அறிந்தவர் எவரும் இவ்விதம் அவரை கொடூரமாக கொலை செய்ய துணிந்திருக்க மாட்டார்கள்" என்று குட்லு என்ற ஒரு தொழுநோயாளி கூறுகிறார்.

" மரிக்கும் தமது ஊழியர்களை ஒன்றன்பின் ஒன்றாக தேவனே அடக்கம் செய்கிறார். என்றாலும் அவரது ஊழியம் ஒருநாளும் ஸ்தம்பித்து விடாது" என்று ஒரு ஆப்பிரிக்க ஊழியர் ஒருவர் கூறுகிறார். அது மெய்யானதே! அதன் நிறைவேறுதலாக ஸ்டெய்ன்ஸ் இடத்தை நிரப்ப, அர்ப்பணமுள்ள பல ஊழியர்கள் இன்றும் அப்பகுதியில் பணி செய்து வருகின்றனர்.  இளைஞர்களே, இன்று உங்களுடைய பதில் என்ன?


                                                                Graham Stuart Staines

                On the mid night of January 22nd of 1999, Graham Stuart Staines (57 year old), who came from Australia to Odisha State in India for doing social service, was burnt brutally along with his sons Philip ( 10 years ) and Timothy ( 7 years ).

                Santanu Satpathy is a common man living in Baripada in Keonjhar District in Odisha. Unexpectedly, Graham Stuart Staines of Austrialia became his pen friend. Love grew between the two with the communication through letters. Satpathy used to write in detail about India in his letter to Staines. The writings of Satpathy brought Staines to India in the year 1965. Staines who came to India to see his friend did not return to his country but stayed in India embracing it as his homeland. He associated himself with the social service organization called Leprosy Mission of Australia and started his work. Because he loved the Odiya Santhali people, like his life, he got proficient in Santhali and Odiya languages quickly.

            After 15 years of relentless service, he associated himself as a volunteer worker the organization, Operation Mobilization and roamed among the villages in India. He met Gladys during that time. Gladys was a trained nurse. She was attracted to Staines by his silent, deep commitment and for his love he had for India. They both decided to marry.

                They both worked in diverse works like environmental protection, pollution control measures, Eradication of polio, caring for people affected with leprosy, social upliftment and economic development. They participate in the Jungle camps in which the Santhali youth celebrate with dancing and singing to the tunes of Dhangri and gave them good counsel. Once, about 100 people perished in a fire in the Baripada village. Staines did medical service to the injured day and night. So he was looked up as the “savior of the Santhals”.

                In January 1999, Staines attended the Jungle camp along with his wife, his children who had come on vacation from Ooty, his co-worker and social worker, Gilbert Wens and with a few acquaintances from the village. That night, as usual, he parked his vehicle in front of the Manoharpur village church, and went to sleep with the children. It was not known that he had any enemies among the Santhals for whose upliftment he strived hard. The man affectionately called ‘saibo’ was surrounded at 12 midnight by a mob of youth with burning torches. Staines who was deep asleep was not aware of any of this.

                A rowdy element named Rabindrapal Dara Singh used to indulge in violence and cruel activities in the area. Every time he indulges in such activities, a strange whistle sound used to be heard where ever he attacks. Then, his gangsters used to get ready for attacking. Even then, such a whistle sound was heard. As a precaution, two gangsters were stationed in front of all Christian homes. This is to avoid, Christians from coming out of their houses to save Staines.

                Amid the darkness, they spread dry hay on the vehicle and lighted it. The children in their fear, not knowing what to do, embraced their father. They died under the embrace of their father. However hard, Staines tried to save the children, the fire engulfed them and torched them. Those three went to the hands of the Lord at the same time. After this incident, Darasingh went into hiding.

                Murder was the gift that was presented by the society to the one who served for 35 years giving medical treatment to many thousands and who led a few to Christ. After the death of Staines, the things that was told by his beloved wife, Gladys (then 47 years old) melted many hearts. She said, I do not have any grudge or hatred on the people who vehemently torched my family. I forgive them. God wanted my beloved husband and my children to be with Him. It was God’s will. Glory to be His Holy name. I still want to continue the work left behind by my husband. I will meet all three of them in the kingdom of Christ during His coming”. She showed in her actions the word of God that states “ Do good to those who hate you”. His wife Gladys and her daughter Esther continued to do the work left behind by Staines till 2004. Now she lives with her daughter’s family in Australia. Even now, she visits Baripada to see her beloved village people frequently.

                Even though this gruesome murder was planned and executed, it was God’s will. Staines completed his worldly race as planned by God according to His will. “ Staines dedicated himself for the people in magnitude even beyond dreams. Someone knew about him would never have dared to murder him in such a brutal manner” said Kutlu,a leprosy patient. “God himself buries His servants one after the other. But the work of the Lord will never stagnate” says an African missionary. It is very true. True to the above statement, many dedicated missionaries are working in the area in filling the place left vacant by Staines. Dear youth, what is your answer today?

 

 

                 

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)