Andrew Van Derbijl, ‘God’s smuggler’ (Tamil & English)

               

  ஆண்ட்ரூ வான் டெர்பிஜ்ல்                                       

தேவனின் கடத்தல்காரர் என்று அழைக்கப்படும் ஆண்ட்ரூ வான் டெர்பிஜ்ல், நெதர்லாந்த் தேசத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது தகப்பனார் காது கேட்காதவராகவும், தாயார் படுத்த படுக்கையாகியும் இருந்தனர். அவருடைய மூத்த சகோதரர் மூளை வளர்ச்சி குன்றியவர். இப்படிப்பட்ட குடும்ப பின்னணியிலேயும் ஆண்ட்ரூ வான் ஆண்டவருக்காக வாழ்ந்து வருகிறார். அவரது தாயார் படுத்த படுக்கையாக இருந்தாலும் வேத வசனத்தின் மகத்துவத்தை தனது மகனுக்கு சொல்லி கொடுத்தார். குடும்பத்தில் தரித்திரம், வறுமை காணப்பட்டாலும் ஆண்டவரை இந்த குடும்பம் உறுதியாக பற்றிக் கொண்டார்கள். ஆண்டவர் மட்டும் தான் உதவி செய்ய முடியும் என்பதில் அதிக நம்பிக்கையோடு இருந்தார்கள். இரண்டாவது உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. ஆண்ட்ரூ தன்னையும் ஒரு போர் வீரனாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திக் கொண்டார். போரில் ஈடுபடும் போது அவரது கால் கரண்டையில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சை எடுப்பதற்காக சில நாட்கள் ஓய்வில் இருந்தார். அந்த சமயம் வேதத்தின் மகத்துவங்களை அதிகமாக தியானித்தார். ஆண்டவரின் அன்பை ருசிக்க ஆரம்பித்தார். எந்த வித சிகிச்சையும் பெற முடியாத சூழ்நிலையில் ஆண்டவருடைய வல்லமை, கிருபை அவரது காயத்தை குணப்படுத்துவதை உணர்ந்தார். ஆண்டவரே நான் எதை செய்தாலும் உமக்காக செய்கின்றேன் என்று தன்னை அர்ப்பணித்தார். வேதாகம கல்லுரியில் சேர்ந்தார். அங்கு ஆங்கிலம் பயில மிகவும் கஷ்டப்பட்டார். அப்போதும் "என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு" என்று ஜெபித்து படிக்க ஆரம்பித்தார். ஆண்டவரின் கிருபையினால் வேதாகம கல்லூரி படிப்பை வெற்றியோடு முடித்தார்.

வேதத்தின் மகத்துவத்தை தெரியாத நாடுகளுக்கும் குறிப்பாக, கம்யு+னிச நாடுகளுக்கு வேதாகமத்தை கடத்தி கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். அங்கு செல்வது மிகவும் கடினம் என்பதால் கம்னிச கட்சியின் இளைஞர் கூட்டத்தில தன்னை சேர்த்துக் கொண்டார். கம்யூனிச கோட்பாடுகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு தெரியாமல் வேதபுத்தகத்தை மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார். சுவிசேஷம் செல்வதற்கு கடினமான நாடுகள் என்று சொல்லப்படும் போலந்து, செக்கஸ்லோவேகியா, அல்பேனியா, ருமேனியா, ரஷ்யா,ஹங்கேரி, சீனா போன்ற நாடுகளுக்கு வேதாகமத்தை கடத்தி செல்ல முயற்சி எடுத்து சென்றார்.ஒரு முறை ருமேனியா தேசத்திற்குள் வேதாகமத்தை ஒளித்து வைத்து, கடத்தி செல்லும் போது எல்லையில் போலீஸ் அதிகாரிகள் பரிசோதனை செய்தார்கள். அப்போது அவர் "ஆண்டவரே நீங்கள் இந்த உலகத்தில் வாழும் பொழுது குருடரின் கண்களை காணச் செய்தீர், ஆனால் இப்போது காண்கிற கண்களை குருடாக்கும்" என்று ஜெபித்தார். ஆண்டவர் ஜெபத்தை கேட்டார். அந்த காவலர்கள் இவரது பாஸ்போட்டை மட்டும் பரிசோதித்து விட்டு அனுப்பி விட்டார்கள். ஆண்டவர் அவரை மரணத்தின் கடைசி நேரத்தில் காப்பாற்றிய தருணம் அநேகம். வேதாகமம் செல்லாத தேசங்களுக்கு வேதாகமத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று  அவரது மனதில் இருந்த பாரத்தை ஆண்டவர் நிறைவேற்றினார். எங்கெல்லாம் திறந்த வாசல் இல்லையோ, அங்கெல்லாம் திறந்த வாசலை கொண்டு வருவதற்கு ஆண்டவரால் முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். "மனுஷரால் கூடாது தேவனால் கூடும்" என்ற வசனம் அவரை அதிகம் ஊக்கப்படுத்தியது. சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தது. அநேக அதிகாரிகளின் கண்களில் அடிக்கடி பிடிபட்டார். இருந்தாலும் ஆண்டவருக்காக துணிந்து நிற்பேன் என்று தான் முன் வைத்த காலை பின் வைக்கவே இல்லை. இரும்பு திரை நாடுகளுக்குள்ளாக செல்வது மிகவும் கடினமான காரியமாக இருந்த போதிலும், ஆண்டவர் ஆண்ட்ரூவை பயன்படுத்தினார். அநேக சட்ட திட்டங்களை மீறக் கூடிய சூழ்நிலை வந்தாலும் அவர் ஓடி ஒளியவே இல்லை. அதற்காக அநேக தண்டனைகளையும் பெற்றார். இன்னொரு பக்கம் ஆண்டவர் திறந்த வாசலை வைத்திருந்தார். அநேகர் வேதத்தை படிக்க ஆரம்பித்தார்கள். ஆண்டவரின் அன்பை அநேகர் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். 1967ம் ஆண்டு God’s Smuggler என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப்புத்தகம் 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சுமார் 10 மில்லியன் புத்தகம் விற்று முடிந்தது. இப்படி ஒரு பாரம் நமக்கும் உருவாக வேண்டும். நம்மையும் சுற்றி எத்தனையோ பேர் வேதாகமம் கையில் கிடைக்காமல் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நம்மை தேவனிடம் அர்ப்பணிப்போம்.




Andrew Van Derbijl,fondly referred to as ‘God’s smuggler’ was born and brought up in the Netherlands. His dad had hearing disabilities while his mother was bed-ridden. His eldest brother was diagnosed with limited brain development. While he had a challenging family background, he was still living a life for God. Though his mother was in bed all the time, she taught her son the magnificence of the ‘Word of God’. They held on to the Lord dearly even though they were drowning in poverty. They believed as a family that the Lord is their only help. It was during the time of the Second World War and Andrew was also a war veteran fighting for his country. In his stint, he was wounded on his feet and was on medication rest for a few days. During those days, he meditated on the wisdom found in the Bible and he really experienced the love of God. Stuck at a situation where no surgery or advanced treatment could be performed, he felt the Lord’s power and grace healing his wounds. At that moment, he surrendered his life to Christ and committed to do everything for His glory. He enrolled himself at Bible college but struggled to learn the English language. He uttered the prayer “I can do all things through Christ who strengthens me” and set forth to pursue his course. By the grace of God, he was also able to successfully finish his course at the Bible College. He set his heart on carrying the Word of God to cities where it was not known especially to communist countries. Knowing that it is difficult to enter a communist country, he joined the youth wing of the communist party. While he pretended to abide by their policies, he secretly distributed Bibles to the others. He tried hard to carry the Bible to countries like Poland, Czechoslovakia, Russia, Albania, Romania, Russia, Hungary and China where carrying the Scripture was very difficult.

Once while trying to hide and carry the Bibles to Romania, the Police stopped him for checking. He immediately prayed to the Lord, “When you were earth, you made the eyes of the blind see but now make these eyes blind.” The Lord heard his prayers and the guards let him go after verifying his passport. There were many such incidents where the Lord saved him in the nick of time. The Lord helped fulfill his desire to carry the Word of God to places it has not reached. Andrew believed that the Lord would open doors wherever there are shut doors. He was always encouraged by the word, “With man it is impossible but with God all things are possible.” There were times when things did not work in his favor, and he was caught by officials. But he never stepped back as he was determined to accomplish what he had committed. The Lord used Andrew mightily to wade through the Iron curtain countries though it was impossible and highly risky. Even though there were several occasions where Andrew had to break the law and had to face the consequences, he was never discouraged. He knew that the Lord was on his side and would open new doors for him. There were many who received the Bible through him, started reading it and was touched by the love of God through it. He wrote and published the book ‘God’s Smuggler’ in 1967. This book was translated in 35 other languages and sold all over.  By the time Andrew passed away, 10 million copies of the book were sold, - that was the extent to which God had powerfully used Andrew.

There are many people around us who have not had the opportunity to read a Bible. If we would also have the same desire as Andrew, we can reach out to them just like he did. Let’s commit ourselves to God to help others who have not known His word.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)