Samuel Kaboo Morris (Tamil & English)

இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்கா தேசத்திற்குள் ஊழியர்கள் பலர் சுவிசேஷத்தை சொல்ல சென்றிருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் இங்கிருந்து ஆண்டவரை ஏற்றுக் கொண்ட ஒரு மனிதன், ஆண்டவரை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வந்தார். அவர் பெயர் காபு. தென் ஆப்பிரிக்காவில் 2 விதமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். அதில் குரு இன மக்களுக்கு காபுவின் தகப்பனார் தலைவனாக இருந்தார்.தந்தைக்கு பின் காபு தான் குரு பழங்குடியின மக்களின் அடுத்த தலைவன் என்பது மக்களின் விருப்பம். இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்படும் சண்டையில்,தோற்பவர்களின் பணம், பொருள் மற்றும் தலைவனின் மகன் என அனைத்தையும் வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு ஏற்பட்ட சண்டையில் குரு இன மக்கள் மூன்று முறை தோற்றுப் போனார்கள். அப்போது காபுவையும், அவர்களின் பொருட்கள் எல்லாவற்றையும் சிறைப்படுத்தி கொண்டு சென்றார்கள்;.

காபு அங்கே அதிகமாக சித்திரவதை செய்யப்பட்டான். காபுவை மீட்க குரு இன மக்கள் மிகவும் போராடினார்கள். ஆனால் அவனை அடிமையாக கொண்டு சென்ற மக்களோ அவனை கொன்று விட முயற்சி செய்தார்கள். அந்நாட்களில், முகம் மட்டும் வெளியில் தெரியும் படி மண்ணுக்குள் புதைத்து, முகத்தில் இனிப்பை பூசி விடுவார்கள். அதனால் எறும்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் அவனை கடித்து அவன் உயிர் பிரிந்து விடும். ஆனால் காபுவை சிலுவை போன்ற மரத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் கட்டி வைத்து விட்டார்கள். திடீரென காபுவின் முகத்தில் ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. "காபு, நீ எப்படியாவது இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு" என்று ஒரு மெல்லிய சத்தம் கேட்டது. காபுவை எதிர்ப்பாளர்கள் தாக்கியதால் உடல் சோர்வுற்று அவனால் எழும்ப முடியவில்லை. மீண்டும் அதே சத்தம் கேட்கவே, காபு தன் முழு பெலனோடு அங்கிருந்து தப்பித்து ஒரு வெளிநாட்டுக்காரரின் வீட்டிற்கு சென்றான். அங்குள்ள ஊழியர்கள் அவனை ஏற்றுக் கொண்டு அவனை பராமரித்தார்கள். அவனுக்கு சுவிசேஷத்தையும்  கூறினார்கள்.

ஒரு நாள் வயதான ஒரு மிஷனெரி தாயார், சவுலை தேவன் சந்தித்த போது,  அந்த பிரகாசமான ஒளி எப்படி அவனை மாற்றியது என்பதைப் பற்றி கூறினார்கள். அன்றைக்கு காபு, அந்த சிலுவை மரத்தில் தன்னை சந்தித்தது ஆண்டவர் தான் என்பதை புரிந்து கொண்டார். தன்னுடைய அனுபவத்தை மிஷனெரிகளோடு பகிர்ந்து கொண்டார். அவர்கள் இன்னும் ஆண்டவரைப் பற்றி அதிகமாக காபுவிடம் சொல்ல, அன்றே காபு தன்னை ஆண்டவருக்காக அர்ப்பணித்தார்.

அமெரிக்காவிலுள்ள வேதாகம கல்லுரியில் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் எனற வாஞ்சை கொண்டார். ஆனால் கப்பல் ஏறி செல்வதற்கு அவரிடம் பணம் இல்லை. ஒவ்வொரு நாளும் கப்பல் துறைமுகத்தில் நின்று கொண்டு, காபு மிகவும் பரிதாபமாக கப்பல் கேப்டனிடம் தன்னை அமெரிக்கா தேசத்திற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்பார். அவர் உன் கையில் எப்போது பணம் இருக்கின்றதோ அப்போது அழைத்து செல்கிறேன் என்று கப்பல் மாலுமி கூறுவார்.ஆனால் அது சாத்தியப்படவே இல்லை. ஒரு நாள் கப்பல் கேப்டன் மனம் இரங்கி தன்னுடைய கப்பலில் காபுவை ஏற்றிக் கொண்டார். 6 மாத கப்பல் பயணத்தில் காபுவுடன் அநேக கைதிகள், முரட்டாட்டமான நபர்கள் என பலர் சிறைபிடிக்கப்பட்டு சென்றனர். காபு அவர்களுக்கு ஆண்டவரை பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஒரு நாள் கப்பலின் கேப்டன் குடி போதையில் இருந்த போது காபு அவரிடம் ஆண்டவரைப் பற்றி கூறினார். அவரோ குடிவெறியில் அவனை அடித்து விட்டார். குடிவெறி தெளிந்த பிறகு ஆண்டவரை பற்றி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார். விரைவிலேயே அந்த கப்பல் கேப்டன் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

ஆறு மாதத்திற்கு பிறகு கப்பல் அமெரிக்கா சென்றடைந்தது. அந்த கப்பலில் பயணம் செய்த அனைவரும் காபு மூலமாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். அமெரிக்கா தேசத்தில் ஸ்டீபன் மெரிட் என்பவர் நடத்தி வந்த வேதாகம கல்லுரியில் சேர்ந்து படிக்க அரம்பித்தார். விரைவிலேயே தன்னுடன் பழகியவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவித்தார். விரைவிலேயே புகழ் பெற்ற ஒரு நபராக மாறினார். யார் இந்த காபு?; அமெரிக்க தேசத்தில் ஏற்பட்ட பெரிய எழுப்புதலுக்கு காரணமாக அமைந்த சாமுவேல் மோரிஸ் என்பவரே அவர். வேதாகம கல்லூரியை முடித்து விட்டு ஆப்பிரிக்கா தேசத்திற்கு சென்று தன்னுடைய இன மக்களுக்கு ஆண்டவரை பற்றி சொல்ல வேண்டும் என்பது தான் அவரது தரிசனமாக இருந்தது. வேதாகம கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனது தாயகம் திரும்ப ஆயத்தமானார். 21 வயதில் கடினமாக உழைத்ததினால் அவரது சரீரம் டிராப்சி என்ற வியாதியினால் அதிகம் பாதிக்கப்பட்டது. ஒரு நாள் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதே கீழே சரிந்து அவர் உயிர் பிரிந்தது.

ஆனால் அவர் மரித்த பிறகும் அவரது ஊழியம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவரால் அவரது குரு இன மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க செல்ல முடியாமல் போனாலும், அவரோடு கல்லுரியில் படித்த ஏழு மாணவர்கள் ஆப்பிரிக்கா தேசத்திற்கு சுவிசேஷம் அறிவிக்க சென்றார்கள். அவர்கள் மூலமாக ஆப்பிரிக்கா தேசத்தில், குரு மக்கள் மத்தியில் பெரிய எழுப்புதலை தேவன் கட்டளையிட்டார். காபு வாழ்ந்தது 21 வருடம் தான். ஆனால் அவரது ஊழியம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாரையெல்லாம் காபு சந்தித்தாரோ அவர்களெல்லாம் இரட்சிப்பின் அனுபவத்தையும், பரிசுத்த ஆவியானவரின் நிறைவையும் பெற்றார்கள். அவருடைய பெயர் செய்திதாள்களில் அச்சடிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.

நமக்கும் தேவன் இப்படிப்பட்ட அனுபவத்தை தருவாராக. நாம் யாரிடம் சென்று பேசுகிறோமோ அவர்கள் அனைவரும் இரட்சிப்பின் அனுபவத்தையும், கிறிஸ்துவின் அன்பையும் பெற்று கொள்ள நம்மை பயன்படுத்துவார். இந்த  எழுப்புதலின் நாட்களில் நம்மையும் ஆண்டவர் அவ்வாறு வழி நடத்துவாராக.

 



Samuel Kaboo Morris

We have often heard about Christians who have risked their lives to preach the gospel in what is called the “Dark Continent” Africa.  But the story of raising a believer from Africa and using him as a missionary in another land is unique.  His name was Kaboo. There were two tribal groups and one of them was Kru and Kaboo’s father was their Tribal leader. The tribals expected Kaboo to take over as their chief after his father. Often these two tribes fought, and the tribe that won often ransacked belongings, wealth, and especially the Tribal chief’s son. The Kru tribe were defeated thrice and the Grebos took away their possessions and Kaboo along with them.

Kru began to be tortured everyday. The Kru tribal people tried hard to  deliver Kaboo from the enemies’ hands. The Grebos wanted to murder him. They dug the sand and buried him in the sand with only his face sticking out of the mud. They smeared his face with nectar which attracted a lot of army ants and poisonous insects. They expected him to die soon of the insect bites. Also, he was hung for an entire night on a cross-like wooden pole. Suddenly, in the middle of the night, he heard an audible voice from above –“ Kaboo, flee from here.” He was beaten and was devoid of any strength to even move. But he heard the voice again to flee immediately. With all available strength, he fled and the only place he knew he would be saved was the house of  ‘white men’ who immediately took him in and cared for him. They began to preach the gospel.

The old Lady Missionary in the household narrated the story of Saul and how the Lord miraculously met Him with a vision of light. Immediately, Kaboo understood it was the Lord who spoke to him in the forest. Kaboo narrated that he too had a  similar experience like Saul and they began to speak more freely about the gospel. He immediately accepted Christ and was eager to know more about the work of the Holy Spirit.

He wished to study in Bible School and wanted to know about the Holy Spirit more. But he couldn’t afford to travel or even study. Often, Kaboo went to the harbor pleading the ship’s captain to somehow take him to America. The captain sent him back with the reply that he would take whe hen found enough money to pay for the journey.  But he couldn’t find enough money. After a while, the captain pitied Kaboo and agreed to take him to  America.  It was a long journey of about 6 months. Hardcore criminals also traveled in this ship to be taken to America. He preached to all of them. One day Kaboo preached the gospel  to the captain, but he thrashed him because he was drunk and intoxicated. The next morning, when the captain was sober, he began to preach again. His preaching took effect and soon the captain accepted Christ.

In 6 months’ time, the ship reached America and by then all had accepted Christ. Mr. Stephen Merritt found Kaboo’s zeal and took him in. He studied in the Bible School run by Mr.Merritt. He preached the gospel to everyone he met or acquainted with. His popularity as the great witness grew in those parts immediately.  Samuel Morris was instrumental in bringing great revival in America at the time and it was none other than Kaboo himself.

His only zeal was to finish Bible School and return to his homeland to preach the gospel. When he completed, he began to get ready to leave for his country. Since his body was put to tremendous physical work, torture and strain at the young age of 21, Morris began to suffer from dropsy. One day as he was sitting on a chair, he fell down dead.

Though Samuel Morris died, the desire to spread the gospel to his native people did not die. Seven Bible College students who studied with him went to Africa in his place. The Lord mightily used these 7 men to bring revival in Africa.

Perhaps, Morris lived for only 21 years. But he saved and preached the gospel to so many people in such a short time which would ordinarily take several years. Everyone  he met tasted the fruit of salvation and were filled with the Holy Spirit.  In fact, his popularity got his name to be published in the American newspapers.

May the good Lord grant us the same experience so that everyone we meet and share the gospel receive salvation and the fulfillment of the Holy Spirit. May the Lord lead us to those times of revival. 

 

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!