கர்த்தார் சிங் KARTHAAR SINGH (Tamil & English)

 

கர்த்தார் சிங், பஞ்சாப் மாநிலத்தில் செல்வந்தரான சீக்கியப் பெற்றோருக்குப் புதல்வனாகத் தோன்றினார். அவருடைய தகப்பனார் பஞ்சாபில் ஒரு பெரிய ஜமின்தாராக இருந்தார். கர்த்தார் சிங் ஏகப் புதல்வனாக இருந்தபடியினால் குடும்பத்தினருடைய நம்பிக்கை அனைத்தையும் அவரையே சார்ந்திருந்தது. 

சுகபோகமாக வளர்க்கப்பட்டார்.இவருடைய தந்தை மகனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் கொடுத்து வந்தார். மத சம்மதமான பயிற்சிகள் ஒன்றும் பெறாதிருந்த போதிலும், ஆவிக்குரிய காரியங்களில் ஒருவிதமான வாஞ்சை அவர் உள்ளத்திலே ஏற்பட்டுக் கொண்டே வந்தது. அவர் கிறிஸ்தவ மதத்தைக் குறித்துக் கேள்விபட்டு கொஞ்சங் கொஞ்சமாக கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்கள் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. தான் ஒரு கிறிஸ்தவன் என்று பகிரங்கமாக அறிக்கை செய்தார். கர்த்தார் தன்னுடைய வீட்டிலிருந்து வெறுமையாகத் துரத்தப்பட்டார். 

தன்னுடைய வயிற்றுப் பசி தீர்க்கவும், நிர்வாணத்தை மூடவும் ஒரு கூலி ஆளாக அமர வேண்டியிருந்தது. வெகு சீக்கிரத்தில் கர்த்தார் பஞ்சாபில் உள்ள கிராமங்களிலும், பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலானார். பஞ்சாபில் அநேக இடங்களில் சுவிசேஷத்தை அறிவித்த பின்னர், உயர்ந்த மலைகளை அதிகக் கஷ்டப்பட்டு கடந்து இருள் நிறைந்த திபெத்து நாட்டிற்கு சுவிசேஷத்தை எடுத்துச்; சென்றார். திபெத்து நாட்டில் வசித்த புத்த பிட்சுகள் இயேசு கிறிஸ்துவின் பெயரைக் கேட்டதும் சொல்ல முடியாத கோபம் அடைந்தனர். அந்தக் கொடிய நாட்டிலே கர்த்தாரை அன்புடன் வரவேற்று உபசரிக்க ஒருவருமில்லை. அப்படியிருந்தும், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் அறிவிக்காமல் திரும்ப மாட்டேன் என்று கர்த்தார் தன்னுடைய உள்ளத்திலே தீர்மானித்தார். அவரை நாட்டை விட்டு துரத்த மக்கள் பலமுறை பல ஏற்பாடுகள் செய்தும் விடாபிடியாகத் தெருத் தெருவாகச் சென்று சுவிசேஷத்தை அறிவித்து வந்தார். கடைசியில் அந்நிய நாட்டு மதத்தைப் பரப்ப இந்த நாட்டினுள்ளே, அரசாங்கத்தின் உத்தரவின்றி நுழைந்துள்ளான் என்று இவர் மேல் குற்றஞ்சாட்டி, அவர்கள் தலைவரிடத்தில், அவரைக் கொண்டு வந்து நிறுத்தினர். தலைவன் அவருக்கு மரண தண்டனை விதித்த போதிலும், எந்தவிதமான அச்சமுமின்றி மரணத்திற்கென்று குறித்த இடத்தை நோக்கிச் சென்றார். போகும் வழியில் அங்கு சூழ்ந்திருந்த மக்களுக்கு கடைசியாக சுவிசேஷத்தை அறிவித்துக்கொண்டே சென்றார். அக்கூட்டத்தில் நின்ற ஒருவனுடைய உள்ளத்தை இவருடைய வார்த்தைகள் தொட்டு இரட்சிப்புக்குள் வந்தான். 

     குறித்த இடத்தை அடைந்ததும் கர்த்தாருடைய உடைகளை உரிந்து அவரை நிர்வாணமாக்கி, ஓர் ஈர எருமைத் தோலில் வைத்துத் தைத்து வெயிலில் போட்டனர். அவர்படும் வேதனையைப் பார்த்து, கேலியும் பரியாசமும் செய்ய ஒரு பெரிய கூட்டம் அவரைச் சூழ்ந்திருந்தது. சூரிய வெப்பத்தால் காய்ந்து சுருங்கிய எருமைத் தோல் உள்ளிருந்து கர்த்தாருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. கடகட வென்று கர்த்தாருடைய எலும்புகள் முறிபடும் சத்தத்தைக் கேட்டு, அம்மக்கள் கொஞ்சமும் பரிதாபமில்லாமல் ஆனந்தத்தில் மூழ்கிச் சத்தமாகச் சிரித்தனர். மூன்றாவது நாள் தன் அருகாமையில் இருந்த புதிய ஏற்பாட்டை எடுப்பதற்காக தனது கைகளை அவிழ்த்து விடக் கூறினார். நொறுக்கப்பட்ட தன் கரத்தால், அதிக வேதனையுடன், அருகிலிருந்த புதிய ஏற்பாட்டில் அவர் எழுதினதாவது:

இது ஒரு கிறிஸ்தவனுடைய மரணப் படுக்கையா? இல்லை. இது அந்த மரணமே மரிக்கும் இடம். இயேசுவின் மேல் நான் கொண்ட அன்பு குறைவு படுமோ? அவர் கொடுத்த ஜீவனைத் தானே நான் அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறேன். உண்மையாகவே என்னால் முடிந்தவரைச் செய்த போதிலும், எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியவில்லை என்று எழுதினார். மேலும் மரண வேளையில் தன்னுடைய தேவனை ஸ்தோத்தரித்தார். கடைசியில் அவர் மரிப்பதற்கு முன்பாக கர்த்தராகிய இயேசுவே! உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சொல்லி ஜீவனை விட்டார். 

கர்த்தாருடைய மரணத்தைப் பார்க்கக் கூடிய கூட்டத்தின் மத்தியில் இருந்த ஒரு அதிகாரி, கீழே இருந்த அந்த புதிய ஏற்பாட்டை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்ததின் மூலமாக கிறிஸ்துவுக்குள்ளானார். 


KARTHAAR SINGH

Karthar Singh was born in Punjab to wealthy Sikh parents.  His father was a big zamindar in their place. He was the only son and his family's greatest hope.He was brought up in great wealth. He was trained in all kinds of skills by his father.  Though he did not get any kind of religious training he always had an eagerness to know about these things in his heart. When he came to know about Christianity,  he was attracted by the Christian doctrines . And he publicly declared himself as a Christian.  And as a result he was chased away from his own home.

He became a manual laborer for his own basic needs like food and clothes. Very soon he started sharing the good news in the villages and towns in Punjab. After doing so in many places around Punjab he crossed the huge mountains with great difficulty and took the good news to Tibet, the dark country. The Buddhist monks were filled with rage when they heard the name of Jesus Christ. There was no one to welcome or help Karthaar in that cruel land. But he still made a decision to not leave the place without sharing the good news.  Though the people of Tibet tried to chase him away and made many vicious plans against him he still went around the streets sharing the word of God.  Finally he was charged with entering Tibet without  permission from the government and for spreading a foreign religion and was taken before their leader. He was granted death punishment but he went with them for the fulfillment of the death penalty without any hesitation. He kept preaching the gospel to the people who had gathered around as they took him to be killed.  One of the men in the crowd was touched by his words and was saved.

When they reached the execution place, they stripped away his clothes,  made him naked and stitched him to a wet buffalo and left him in the sun. A huge crowd was there and were making fun looking at the way he was struggling.  He was in great pain and was struggling inside the dried, shrinking buffalo skin. The people did not care about Karthar and were totally oblivious to the sound of his breaking bones and were laughing aloud. On the third day he requested them to untie his arms to take the new Testament that was near him. With great difficulty he wrote the following lines in the Bible:

Is this a death bed of a Christian? No.

This is the place where death dies. Will the love I have for Christ, reduce? I'm only giving back the life he gave me. Though I truthfully did my best still I could not do everything. These were the words he wrote.  More importantly he praised God when he was about to die. Finally,  as he breathed his last he said ," Lord Jesus! I submit my spirit in your hands."

One of the officers in the crowd that was Karthaar's final moments took the old testament to his house and accepted Christ after reading it.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!