கிளாரா ஸ்வைன் Dr. Clara Swain (Tamil & English)

    டாக்டர் கிளாரா ஸ்வைன் 1834ம் ஆண்டு ஜூலை 18ம் நாள் நியூயார்க் தேசத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜான் ஸ்வைன், ஐரிஸ் வம்சா வழியைச் சேர்ந்தவர். தாயார் கிளாரிசா, நியூ இங்கிலாந்து வம்சா வழியைச் சேர்ந்தவர். கிளாரா தனது எட்டாவது வயதில் மெதடிஸ்ட் சபையில் சேர்ந்தார். தனது மத ஆய்வுகளைத் தொடர்ந்து 21ம் வயதில் கிளாரா, கேஸ்டிலில் தனியார் மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் ஒரு பள்ளியில் முறையாக கற்பிக்க, நியூயார்க்கின் கனான்டைகுவாவிற்கு சென்றார். அங்கு நோய்வாய்பட்ட மக்களை கவனிப்பதன் மூலம், மருத்துவம் படிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. கேஸ்டிலிலுள்ள  சானிடோரியத்தில் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்து அதில் பட்டமும் பெற்றார்.

    1870ம் ஆண்டு ஆண்டவரின் அழைப்பை பெற்று இந்தியா வந்தார். உத்திர பிரதேசத்திலுள்ள பரேலி மாவட்டத்தில் தன் மருத்துவப் பணியை ஆரம்பித்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். ஒரு பெண் மருத்துவர், உயர் ஜாதி பெண்களுக்கு மருத்துவ சேவை வழங்குவது அந்நாட்களில் அவசியமாக இருந்தது. இந்தியாவில் பேசப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் கிளாராவிற்கு சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவற்றை கற்றார்.

ஒரு வருடத்தில் சுமார் 1300 நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிக மருத்துவ உதவிகளை செய்தார். இந்தியாவில் முன்னோடி பெண் மருத்துவர் என்றும் பெயர் பெற்றார். பரேலியில் 1873ம் ஆண்டு பெண்களுக்கான முதல் மருத்துவமனையை நிறுவினார். அந்நாட்களில் முகமதிய அரசனான நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்ட போதிலும், கிளாராவின் பணிகளால் பெரிதும் கவரப்பட்டார். அங்கு மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார். இம்மருத்துவமனை சுமார் 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. மேலும் தாதியர் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தி, அநேக அர்ப்பணிப்புள்ள, கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்ட தாதியர்களை உருவாக்கினார். 1880ம் ஆண்டு மட்டும் 7000க்கும் அதிகமான நோயாளிகளை இவர் பராமரித்தார்.

 1885ம் ஆண்டு, ராஜ் புட்னாவை ஆண்டு வந்த அரசியின் விசேஷ மருத்துவராக கிளாரா பணி செய்தார். தனக்கு கிடைத்த இம்மாபெரும் பதவியை பயன்படுத்தி, அவ்விடத்திலுள்ள மக்கள் கிறிஸ்துவின் அன்பை கண்டு கொள்ள மிகுந்த பிரயாசங்களை மேற்கொண்டார். அநேகர் அதன் மூலம் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். சுமார் 27 ஆண்டுகள் இந்தியாவில் பணி செய்த கிளாரா, தன் வாழ்வின் கடைசி நாட்களை கேஸ்டிலில் கழிக்க நியூயார்க் சென்றார். அங்கு அவர் 1910ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதியன்று மரித்து, கிரேஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். கிளாரா தனக்கு தேவன் தந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினார். தான் உயர் பதவியில் இருந்த போதிலும், அவற்றை சுவிசேஷம் அறிவிக்கும் பணித்தளமாக மாற்றிக் கொண்டார்.

 இன்று நாம், நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளையும், பதவிகளையும் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?


On 1834 July 18th, Dr. Clara Swain was born in New York. Her father, John Swain was of Irish descent and her mother Clarissa came from the dynasty of New England. Clara joined the Methodist church when she was eight. She began teaching private pupils in her 21st age as she continued her religious studies and subsequently moved to Canandaigua, New York. As she repeatedly encountered and cared for sick people, she developed an interest in learning medicine. She continued her medical studies in Castille’s Sanatorium where she went on to earn her degree as well.

Clara came to India in 1870 as she embraced God’s calling for her. She started her medical mission in Uttar Pradesh in the district of Bareilly. In those days, she was one of the very first women who came by sea to carry out medical mission work in India. It was necessary in those times where a lady doctor was needed to provide medical assistance to women of higher class. Even though, Clara had difficulty with learning the Indian language, she learnt and strived with earnest.

Within a year, she had treated at least 1300 patients. During the next four years, she would go on to provide exceptional medical help for women and children. She earned the name “Pioneer Woman Physician in India”. She went on to open an women-exclusive hospital in Bareilly in 1873. Although there had been resistance toward Christianity in those days, the Islamic king, the Nawab was inspired by the works of Clara that he donated lands for the hospital and encouraged her mission. This hospital spreads over 40 acres. She even established nurse training centres that led to the empowerment of skilled nurses grounded in the Christian faith. She treated more than 7000 patients in the year 1880 alone.

In 1885, she served the Queen of Rajput as her special doctor. Clara worked fervently to help people realise the love of Christ when she held such an honourable position. There were many who accepted Christ Jesus as their Saviour and Lord. After almost 27 years of medical mission in India, Clara spent her last days in Castile, New York. She went on to be with the Lord on December 25, 1910 and her remains are laid to rest in Grace Cemetery. Clara shined in every opportunity God provided her with and made even her highest social standing as a step closer to spreading God’s love.

Today, How do we utilise the opportunities that God gives us?

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)