Corrie Ten Boom, காரி டென் பூம் (Tamil & English)
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த அன்று காரி டென் பூமும் விடுதலையாக்கப்பட்டார். தேவன் தனக்கு செய்த மகத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார். இரண்டாம் உலகப் போரில் அனாதைகளான மக்களுக்காக இல்லம் ஒன்றைக் கட்டி அவர்களுக்கு உதவினார். பல நாடுகளுக்கு சுற்று பயணம் செய்து தனது சிறைச்சாலை அனுபவங்களை எடுத்துரைத்து மக்களை விசுவாசத்தில் வேரூன்றச் செய்தார். சுவிசேஷத்தை மக்களிடம் சொல்வதை விட, கிறிஸ்தவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எப்படி துணிந்து நிற்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டுமென விரும்பினார். ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று ஆண்டவரின் அன்பை பற்றி சொல்ல ஆரம்பித்தார். கடைசி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாம் ஆண்டவருக்காக எப்படி வைராக்கியமாக நிற்க வேண்டும் என்று நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க கூறுகிறார். வெறும் வருகைக்கு மட்டும் தகுதிப்படுவது அல்ல. ஆண்டவருக்காக இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும் என்றாலும் துணிந்து நிற்க வேண்டும் என பிரசங்கம் பண்ணினார். ஒரு முறை ஆப்பிரிக்கா தேசத்திற்கு சென்றிருந்தார். அங்கு புதிய அரசாங்கம் வந்ததினால் கிறிஸ்தவர்கள் அதிகம் தாக்கப்பட்டார்கள். அநேக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முதல் நாள் ஆப்பிரிக்கா தேசத்தில் ஊழியம் செய்யும் போது சில விசுவாசிகளை போலீஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்று கொன்றனர். இரண்டாவது நாளும் அதே போல நடந்தது. மூன்றாம் நாளும் ஆப்பிரிக்கா தேசத்தின் ஒரு பட்டணத்தில் உள்ள விசுவாசிகளில் பாதி பேர் கொல்லப்பட்டார்கள். நான்காவது நாள் காரி டென் பூம், ஒரு சிறிய ஆலயத்தில் பிரசங்கம் செய்ய சென்றார். அப்போது மக்கள் மனதில் ஒரு விதமான பயம் நிலவியது. இன்றைக்கு போலீஸ் வந்தால் என் நிலைமை என்ன? அடுத்து நான் தான் கொல்லப்படுவேனா? என்ற பயத்தோடும், திகிலோடும் இருந்தார்கள். அப்போது காரி டென் பூம் எப்படி கடைசி வரைக்கும் விசுவாசத்தை காத்துக் கொள்ள வேண்டும், ஆண்டவரின் அன்பை விட்டு பின் வாங்கி விடக் கூடாது என்று பிரசங்கம் பண்ணினார். ஐந்தாவது நாள் அந்த ஆலயத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் போலீசாரால் அழைக்கப்பட்டு கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆனால் விசுவாசிகள் தைரியமாக, சந்தோஷத்தோடு மரணத்தை எதிர் கொண்டார்கள்.
ஒரு முறை யூரோப் தேசத்தில் மன்னிப்பையும் அன்பையும் பற்றி காரி டென் பூம் பிரசங்கம் பண்ணி கொண்டிருந்தார். மன்னிப்பு என்ற குணம் நம்மிடம் இருந்தால் அது ஒரு சந்தோஷமான, சமாதானமான வாழ்க்கைக்கு நேராக நம்மை வழி நடத்தும் என்று பிரசங்கம் பண்ணி, ஜெபித்து முடித்தார். கண்களை திறந்து பார்த்த போது ஒரு பெரிய மனிதன் அவர் முன் நின்று கொண்டிருந்தான். நீ யார் என்று கேட்ட காரி டென்னிடம் அம்மனிதன், என்னை உங்களால் அடையாளம் காண முடிகிறதா? என்று கேட்டான். நீங்கள் சிறையில் இருக்கும் போது உங்கள் தந்தையையும், தங்கையையும் கொன்ற மனிதன் நான் தான் என்றும், நீங்கள் இப்போது மன்னிப்பை குறித்து பிரசங்கம் பண்ணினீர்கள்; என்னை மன்னிப்பீர்களா? என்றும் கேட்டான். காரி டென் பூமிற்கு ஒரு வித அருவருப்பும், வெறுப்பும் வந்தது. மன்னிக்க முடியாத நிலையில் இருந்தார். அப்போது ஆண்டவர், நீ பிரசங்கம் மட்டும் தான் செய்வாயா? உன் வாழ்வில் அதை கடைபிடிக்க மாட்டாயா? என்று தன்னுள் பேசுவதை உணர்ந்தார். உடனே அந்த மனிதனின் கரங்களை பிடித்து மன்னிக்கிறேன் என்று கூறி முழு மனதோடு மன்னித்தார். அவன் அன்று அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
காரி டென் பூம் ஓர் சிறந்த எழுத்தாளரும் கூட மறைவிடம் என்று அவர் எழுதிய நூல் பிரபலமானது. பின்னர் அது படக்காட்சியாகவும் தயாரிக்கப்பட்டது. இப்படி ஒரு பெண்மணி அநேக தேசங்களில் ஆண்டவரால் பயன்படுத்தப்பட்டார். கடைசியில் 1983ல் ஏப்ரல் 15 அன்று தனது பிறந்த தினத்திலேயே ஆண்டவருக்காகவே மரித்து, தன் வாழ்க்கையின் ஓட்டத்தை முடித்தார். நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் (1பேதுரு 3:14) என்ற இந்த வசனம் ஒவ்வொரு நாளும் காரி டென் பூமை தைரியப்படுத்தி தேற்றியது. நாமும் நம்முடைய விசுவாசத்தில் எப்படி உறுதியாக இருக்கின்றோம். எதிர்ப்புகளை கண்டு சோர்ந்து போகின்றோமா? இல்லையென்றால் கடைசி வரைக்கும் ஆண்டவருக்காக நிற்கின்றோமா? நாம் ஆண்டவரின் சமூகத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.
Corrie Ten Boom was born and raised in Holland by her father, since her mother died early. Her father was a clock maker. In 1940, many Jews took refuge in Holland during the Second World War fearing the German Soldiers who were trying to exterminate them. Some of them were caught by the soldiers and imprisoned. More than 700 Jews were put in prison that could barely hold more than 200 prisoners.
Corrie Ten Boom took courage and rescued
Jews who were haunted by the German soldiers and gave them a hiding place. However, it was not long and in 1943, Corrie
Ten Boom, her aging father, and her sister were imprisoned for helping the
Jews. They were sent to a Nazi Concentration Camp where they had to endure much
suffering. In that gloomy prison of 700 prisoners, only the three of them had
accepted Christ. Corrie and her sister Betsie underwent immeasurable torture.
They were stripped naked and paraded before others, were hungry and thirsty
most of the time. Soon, her father and her sister both succumbed and died. Corrie
was all by herself now, but spent significant part of her time worshipping the
Lord without bringing herself to attention before the German soldiers. She
shared the gospel to the women prisoners and her Dutch Bible that she had came
in handy to share the good news. The Lord used Corrie mightily even during her
prison term.
Finally, Corrie was released on the same
day the Second World War ended. She began to spread the love of Christ to all
the people. She also established an orphan house for those who were orphaned
during the World War. She shared the comfort of Christ during her most
turbulent times. This strengthened many in the Lord as she taught how to stand
in the Lord during times of trouble. She traveled to several countries
preaching this. We are called not only
to be ready for the coming of Christ but also to stand steadfast during
challenging times and in needed to die a martyr, she said. Once while preaching
at a church in Africa, a few Christians were taken by the police and killed.
The new government rules were against the Church. On the second day, a few more
were killed. Similarly, on the third day, they heard that half of the
Christians in a church had been killed. Fear struck the small church where
Corrie began to preach boldly on the fourth day. They feared if they would be found and
killed. Corrie preached on staying faithful until the end even if it means
dying for Christ. On the fifth day, all of them were taken and killed. The only
difference was that they faced the situation with great boldness and were happy
to be? martyred for Christ.
Once while preaching in Europe, she
spoke on forgiveness and love and how it shows the way to a life of peace and
security. At the end of the sermon, she closed her eyes for the prayer and when
she opened it, she saw a huge man standing before her. She was shocked by the towering German and
asked him what he wanted. He said that he was the Nazi soldier who had killed
her father and sister. He also said that he came to ask for her forgiveness
because she was preaching on love and forgiveness for all. “Will you forgive
me”, he asked. She was filled with dreadful hate and loathed the idea of
forgiveness to a murderer. The Lord gently reminded her if she would only
preach on forgiveness and not follow it? She held his hands immediately when
she heard the Lord speak and forgave him from the bottom of her heart. He went
back a forgiven man with boundless happiness.
Corrie wrote a book on her experiences. The
book “The Hiding Place” was also made into a movie. Here was a woman mightily
used by the Lord. Finally, on the same day that she was born, Corrie died – 15th
April 1983. One bible verse comforted her every day during her lifetime. But even if you should suffer for
righteousness’ sake, you are blessed. “And do not be afraid of their threats, nor be troubled. (1 Peter
3: 14) . This is the question before us.
Are we steadfast in faith in the Lord? Are we so wearied out by life’s
troubles? Or do we stand for Christ at all times? Let us ponder these questions
as we submit ourselves to Him.
Comments
Post a Comment