ஜான் பனியன் John Bunyan (Tamil & English)

  

இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு என்ற இடத்தில் ஜான் பனியன் 1628ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவரது பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் அல்லர். சிறுவயதில் தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலையே இவரும் தனது தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் உயர் கல்வி பெற இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வீட்டின் பொருளாதார தேவையைச் சந்திக்க பள்ளிப் படிப்பை இடையிலேயே விட வேண்டியிருந்தது. தனது இளம்பிராயத்தில் ஒரு தீய மனிதனாகவே வளர்ந்தார். பொய் சொல்லவும், மற்றவர்களை ஏமாற்றவும், பெரியவர்களை மதிக்காமலும் இருந்தார். வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போகவே தனது 16வது வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் மட்டும் இராணுவத்தில் பணியாற்றி திரும்பிய இவர் தனது 19வது வயதில் ஒரு விசுவாசியான கிறிஸ்தவப் பெண்னை திருமணம் செய்தார். அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜானிடம் பேசுவார். அவரைப் பிரியப்படுத்த ஜான் ஆலயத்திற்குப் போகவும், சில கெட்ட காரியங்களை விடவும் ஆரம்பித்தார். ஆனால் முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க மனமில்லை. இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரங்கள் பழுது பார்க்கப்படும் என்று கூவிக் கொண்டே சென்ற போது வழியில் மூன்று பெண்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதை நின்று கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட ஜான், வீட்டில் சென்று வேதத்தை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார். வேதத்தை வாசிக்க வாசிக்க தான் ஒரு பாவி என்று அதிகம் உணர்த்தப்பட்டார். ஒரு நாள் அதிகமாக சுகவீனப்பட்டு, சோர்வுடன் இருந்த போது மார்ட்டின் லுத்தரின் புத்தகத்தை படித்த போது, தன்னை கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக் கொடுத்தார்.

         ஆண்டவரை ஏற்றுக்கொண்ட கொஞ்ச நாட்களிலேயே ஜான் பனியனின் அன்பு மனைவி இறந்து போனார். அதிக வேதனையுற்ற பனியன் தனது இரட்சகர் மட்டுமே இறுதி வரை தனக்கு உதவி செய்ய முடியும் என்று நன்கு உணர்ந்துக் கொண்டார். தனது வாழ்வை அவருக்கு சமூலமாய் அர்ப்பணித்து, ஆண்டவருக்கு தன்னால் இயன்றதைச் செய்ய முன் வந்தார். பாத்திரங்களை பழுது பார்க்கும் வீடுகளில் தனது தொழிலை செய்துக் கொண்டே இயேசுவையும் அறிவிக்க ஆரம்பித்தார். இவரது ஊழியத்தின் மூலம் பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இவரது வியாபாரமும் நன்கு வளர்ந்தது.

         அந்நாட்களில், இங்கிலாந்து தேசத்தில் போதகர்கள் தவிர மற்ற எவரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கக் கூடாது என்றொரு சட்டம் இருந்தது. ஜாண் நாட்டின் சட்டத்தை மீற விரும்பாவிட்டாலும், தேவனுக்குக் கீழ்ப்படிதலை தனது வாழ்வின் முதன்மையாக கருதினார். எனவே தனது ஊழியத்தை அவர் நிறுத்தவில்லை. ஒரு நாள் போலீசாரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார். நீதிபதி இவரிடம் இனி சுவிசேஷத்தை பிரசங்கிக்க மாட்டேன் என்று உறுதி கூறினால் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறினார். ஆனால் அப்படி உறுதியளிக்க ஜான் பனியன் முன்வரவில்லை. முதலில் 3 மாதம் சிறைத்தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலுரைத்த ஜான் பனியன் இன்று நான் விடுவிக்கப்பட்டால், தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன்ல் என்றார். எனவே அவரது சிறையிருப்பு 3 மாதத்தில் முடியாமல் 12 வருடமாக நீடித்தது. இந்த 12 வருடத்தில் எந்த நேரத்திலும் அவருக்கு விடுதலை கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அதாவது நான் இனி பிரசங்கிக்க மாட்டேன் என்ற ஒரே ஒரு உறுதிமொழி அவர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. சிறையில் அதிக அழுக்கும், சிறிய இருண்ட அறையில் 50 பேருடன் இவர் தங்க வேண்டியிருந்தது. இதனால் நோய்கள் வேகமாக பரவி, பலர் அதே அறையில் மரித்தனர். தனது குடும்பத்தையும் நான்கு பிள்ளைகளையும் பிரிந்து வெளி உலகத்தையே பார்க்காமல் 12 வருடம் சிறையில் கழித்தது கஷ்டமாக இருந்தாலும் ஆண்டவரை அதிகம் நேசித்ததால், அதனை சகித்தார். சிறையில் ஒரு நிமிடமும் வீணாக்காமல் வேத வசனத்தை வாசிப்பது, ஜெபிப்பது, எழுதுவது என்று செலவழித்தார். அங்கு தான் அவர் மோட்ச பிரயாணம் என்ற தனது தலைச்சிறந்த புத்தகத்தை எழுதி முடித்தார்.

        தனது 43வது வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் பெட்போர்டு என்ற இடத்தில் பாப்திஸ்து திருச்சபையின் போதகராக ஊழியம் செய்ய மக்களால் அழைப்பு பெறவே, அதனை ஏற்று 16 வருடம் அங்கு ஊழியம் செய்தார்.

        தனது சபை அங்கத்தினர்களின் குடும்பங்களிலுள்ள பிரச்சனைகளைத் தீர்த்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் ஊன்றக் கட்டும் பணியிலும் அதிகம் ஈடுபட்டார். 1688ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தனது 59வது வயதில் மரித்து, பு+மியில் தான் ஆசையாய் சேவித்த ஆண்டவரை பரலோகத்தில் முகமுகமாய் தரிசிக்கவும் சேவிக்கவும் சென்று விட்டார். போதகர் ஜான் பனியன் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் உருவாக்கின மோட்சப்பிரயாணம் என்ற புத்தகம் இன்றும் அநேகரை ஆண்டவரண்டை வழி நடத்தி வருகிறது. வேதப்புத்தகத்திற்கு அடுத்தப்படியாக, 130க்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இப்புத்தகம் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. தேவன் தம்முடைய பணியில் பயன்படுத்த தேவை சாமர்த்தியம் அல்ல, சமர்ப்பணம். சாமானியர்களைக் கொண்டு சரித்திரம் படைக்கும் ஆண்டவர் உங்களைக் கொண்டும் புதிய சரித்திரம் படைக்கக்கூடும்.   

 



 John Bunyan

John Bunyan was born in November of 1628 at Bedford in England. His parents were not Christians. From an early age, he followed his ancestral work of tinkering and sale of pots and pans alongside his father. He did not have a proper education as he was born in a poor family. Bunyan had to give up his school education to help manage the financial troubles at home. He was very wicked in his youth. He lied, stole, cheated people and disrespected the elders. He joined the military when he was 16 years old. He found no peace in his life. He was in the army only for a couple of years when he returned to marry a faithful Christian girl as a 19-year-old lad. She shared about Christ often to John. In order to impress his young bride, John Bunyan began to attend church and slowly parted his wicked ways. Yet he didn’t whole-heartedly submit to Christ. One day when he was roaming through the streets with his signage for tinkering, he heard three women preaching the Gospel on his way. John Bunyan went home that day having heard the Word of God and dedicated his time to reading the Bible with focus. He was touched as he read the Holy book and came to realise how evil he had been until then. On a day when he was feeling weak and sore, he was reading the book of Martin Luther and he submitted to Jesus Christ with his whole heart.

John Bunyan’s dear wife passed away within a short period of his acceptance of Christ. A heart-broken Bunyan realised that only his Saviour can help him until the end. He dedicated his life to Christ and volunteered to do whatever he could for the Lord. He started sharing the good news in the houses where he was mending the pots and pans. Not only did his business grow but a lot of people turned to Christ due to his word.

In those days, a law was in force in England that restricted the responsibility of preaching to the priests alone. Although John was not intent on breaking the law, he considered obedience to Christ much more important. Therefore, he did not stop what he was doing. One day police arrested him citing that law and took him to a Judge. The Judge told Bunyan that he will release him if he were to promise not to preach any longer. But John was not willing to make that promise and thus he landed a 3-month long imprisonment. John went on to make a statement saying, “If I was released today, I will preach the word of God tomorrow”. His 3-month imprisonment went on for 12 years. He could have been released at any point of those 12 years but on one condition. He only had to promise that he will not be preaching anymore. In prison, he had to share a small, dirty, dark cell with 50 other men. The diseases spread fast because of the lack of space and many died due to that. John Bunyan tolerated all of the discomforts of prison, his estrangement from his four children and lack of contact with the outside world. He never wasted a minute in prison and spent his time praying, reading the Bible and writing. It is there that he wrote his best book, “The Pilgrim’s Progress”.

John was released from prison when he was 43 years old. He continued his missionary work for 16 years at the Baptist church of Bedford following the requests of people.

John invested his time in helping his church members and their families to resolve their family issues and helped them to live rooted in Christ. On August 13, 1688, John Bunyan passed away at his 59th year, leaving this Earth to meet his beloved Lord in heaven. Pastor John Bunyan is not with us today. But the book,” The Pilgrim’s Progress” he created is still leading masses to Christ even today. In addition to the Bible, His book has been translated to more than 130 languages and is much loved and read by many. The Lord does not require people with wit and skill to do his work, he needs only simple people with devotion and submission. The Lord who makes historical events with the simple, yet devoted to Christ is sure to create history with you.

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!