Jonathan Goforth (ஜோனத்தான் கோபோர்த்) (Tamil & English)


கனடாத்தில் பிறந்து வளர்ந்த ஜோனத்தான் கோபோர்த், 20ம் நூற்றாண்டில் சீனா தேசத்தில் ஏற்பட்ட எழுப்புதலுக்கு முக்கியமானவராகக் கருதப்பட்டார். 1859ம் ஆண்டு பிப்ரவரி 10ம் நாள், பிறந்த இவர், ஐந்து வயதாக இருக்கும் போதே சங்கீதங்களை பிழையின்றி வாசிப்பார். வேத வசனங்களை வாசித்து மனப்பாடம் செய்து, அவற்றை யாரிடமாவது கூற ஆசைப்படுவார். சிறுவயதிலேயே கோபோர்த் ஆண்டவரை அதிகம் தேடினார். அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்தார். தன்னுடைய பள்ளி சுவற்றில் தொங்கின உலக வரைபடத்தின் முன் மணிக்கனக்காக நின்று, பரந்து விரிந்த மக்கள் என்று இயேசுவை அறிவார்கள்? என்ற பெருமூச்சோடு பார்ப்பார். ஆத்துமாக்களை குறித்த பாரம் அவரை அதிகம் அழுத்தியது. பாடுகளும், இழப்புகளும் அவரது வாழ்வை சுற்றி சுற்றி வந்த போதிலும், தேவ ஆளுகைக்குள் இருந்த கோபோர்த், விசுவாசத்தை விட்டு ஒரு போதும் பின்வாங்கவில்லை. ஹட்சன் டெய்லர் எழுதிய புத்தகத்தை படித்த போது, கோபோர்த் சீனாவில் மிஷனெரி ஊழியத்தின் அவசியத்தை புரிந்து கொண்டார். சீனாவிற்கு சென்று மிஷனெரியாக பணியாற்ற வேண்டுமெனவும் பாரம் கொண்டார். அது மட்டுமல்லாது அப்புத்தகத்தை அநேக ஊழியர்களுக்கும், போதகர்களுக்கும் அனுப்பி, ஆத்தும பாரத்தை தூண்டினார்.
  1888ம் ஆண்டு தன் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளுடன் தன் பயணத்தை தொடர்ந்த கோபோர்த், உயர்ந்த தரிசனத்தோடும், மிகுந்த தாகத்துடனும் சீன தேசத்தில் கால்பதித்தார். சுவிசேஷத்தை தெருத் தெருவாக பிரசங்கம் பண்ண வேண்டுமென திட்டம் தீட்டினார். வேதவசனமும், ஜெபமுமே அவருக்கு அவ்வனாந்திரமான இடத்தில் ஆறுதலாக இருந்தது. இவர் வேதாகமத்தை 73 முறை ஆங்கிலத்திலும், 35 முறை சீன மொழியிலும் வாசித்து முடித்தார். வேதத்தின் மீது அவருக்கிருந்த தாகம் ஒரு போதும் குறையவே இல்லை.
சீனாவின் மாறுபட்ட சுகாதாரம், கோபோர்த்தையும் அவரது குடும்பத்தையும் தாக்க ஆரம்பித்தது. இரத்த பேதி நோயினால் தனது முதல் பிள்ளையை இழந்தார். இரண்டாவது குழந்தை உடல் செயல்பாடு இழப்பினால் மரித்துப் போனது. மூன்றாவது குழந்தையும் ஒரு புதுமையான நோயினால் மரித்தது. ஒன்றன் பின் ஒன்றாக, தன்னுடைய ஆறு குழந்தைகளையும் இழந்து, கணவன்-மனைவியாக ஆறுதலற்று இருந்தனர். ஆனால்“அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது (ரோமர் 8:28) என்ற வேத வசனம் அவரை கிறிஸ்துவுக்குள் பெலப்படுத்தியது. உலகம் தரக்கூடாத சமாதானத்தால் அவர் உள்ளம் நிறைந்தது. தேவனுடைய பணியை சோர்வில்லாது செய்ய ஆரம்பித்த அவருக்கு, எதிர்ப்புகளும் வர ஆரம்பித்தது. பல முறை சீன மக்களால் தாக்கப்பட்டார். சீனாவில் பணியாற்றி வந்த மிஷனெரிகளுள், கோபோர்த் எல்லாராலும் கவரப்பட்டார். அதேநேரத்தில் அநேகரால் வெறுத்து ஒதுக்கவும் பட்டார். என்றாலும் அவர் மனம் தளரவில்லை
 "பாக்சர் யுத்தம்" என்று சீனாவில் நடைபெற்ற போரில் இவர் படுகாயம் அடைந்தார். ஆயினும் ஆயிரக்கணக்கான மக்களை இரட்சிப்பிற்குள் நடத்தி, ஞானஸ்நானம் கொடுத்தார். சீன தேசத்தின் எழுப்புதலுக்காக பாரத்தோடு ஜெபித்தும், உழைத்தும் வந்தார். உடல் சுகவீனத்தினிமித்தம், சிறிது காலம் கனடாவிற்கு ஓய்வெடுக்க சென்றார். ஆனால் சீனாவிலிருந்து ஊழியத்திற்கான அழைப்பு வந்ததால், உடனே திரும்பி வந்தார். சீனாவில் நடைபெற்ற கூடுகைகளில் கோபோர்த் செய்தியளிக்கும் போதே, மக்கள் பாவத்தால் இதயம் நொறுக்கப்பட்டு, கதறினர். சபையின் மூப்பர்களும், போதகர்களும் தங்கள் பாவத்தை உணர்ந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள். எழுப்புதல் தீ சீன தேசம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. தெருக்கள், பட்டணங்கள் தோறும், உண்மையான மனந்திரும்புதல் உண்டானது. மக்கள் தங்களை தேவனுக்கென அர்ப்பணித்தனர். தனி ஜெபங்கள், குழு ஜெபங்கள் என ஜெப அலைகள் எழும்பியது. தன் கண்களில் பார்வையை இழந்த போதிலும், இருதயம் தேவனுக்காக பணி செய்ய தூண்டியது. சீன மக்களின் எழுப்புதலில் மிக முக்கிய பங்கு ஜோனத்தான் கோபோர்த்திற்கு உண்டு என்று சரித்திரம் கூறுகிறது.
 1936 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி அன்று, அவருடைய உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டு,தேவனுடைய ராஜ்யத்தில் சேர்ந்தார். என்றாலும் கோபோர்த்தின் மனைவி, அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்து வந்தார். தன் கணவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி “Goforth of China” என்ற பெயரில் வெளியிட்டார். அநேக ஆயிரமான பிரதிகள் அச்சிடப்பட்டு, மக்களால் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கோபோர்த் உள்ளத்தில் உள்ள ஜெபமும், ஆத்தும பாரமும் அநேகரைப் பற்றிப் பிடித்து, அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது
இன்று (பிப்ரவரி 10ம்தேதி) அவருடைய பிறந்த நாளை நினைவு கூர்ந்து, இப்படிப்பட்ட எழுப்புதலின் ஊழியரை தேவன் இவ்வுலகில் தந்ததற்காக அவரைத் துதிப்போம். அதோடு மட்டுமல்லாது, கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தின் மேல் நம்முடைய வாழ்வும் கட்டப்பட அர்ப்பணிப்போம். அப்பொழுது, புயல் போன்ற பிரச்சினைகள் நம்மை தாக்க வந்தாலும், அவை நம்மை மேற்கொள்ளாது.
கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
நீதிமொழிகள் 29:25

Born and raised in Canada, Jonathan Goforth was considered instrumental in the 20th-century Chinese awakening. Born on February 10, 1859, he recited psalms flawlessly by the age of five. He reads and memorises the verses of God and desires to recite them to someone. At an early age, Goforth sought the Lord more. He lived as a devoted Christian. Who knows Jesus as the sprawling crowd standing for hours in front of the world map hanging on his school wall? He will look with a sigh. The burden of souls weighed heavily on him. Despite the suffering and loss that surrounded his life, Goforth never wavered from his faith in God. While reading a book written by Hudson Taylor, Goforth understood the need for missionary work in China. He also undertook to go to China and work as a missionary. Not only that, he also sent the booklet to many workers and pastors and inspired their spiritual burden.

 Continuing his journey with his wife and six children in 1888, Goforth set foot in China with a high vision and a great thirst. He planned to preach the gospel from street to street. Scripture and prayer were comforting to him in such a lonely place. He recited the Bible 73 times in English and 35 times in Chinese. His thirst for the Bible never waned. China's poor sanitation began to take a toll on Goforth and his family. They lost her first child to anaemia. The second child died of asphyxiation. A third child also died of a new disease. One after the other, they lost their six children, and the husband and wife were inconsolable. But the scripture that says, "And all things work together for good to them that love God, who are called according to his purpose" (Romans 8:28), strengthened him in Christ. His soul is filled with peace that the world cannot give. As he began to tirelessly do the work of God, opposition also began to come to him. He was attacked many times by the Chinese people. Among the missionaries working in China, Goforth was admired by all.

 At the same time, he was hated and shunned by many. However, he did not lose heart. He was seriously injured in a war in China called the "Battle of Boxers." Yet he led thousands of people to salvation and baptised them. He prayed and worked hard for the awakening of the Chinese nation. Due to his ill health, he went to Canada for some rest. But when he received a call to serve in China, he immediately returned. As Goforth preached at gatherings in China, people were heartbroken by sin and cried out. The elders and pastors of the church realised their sin and gave their resignation letters. The fire of awakening began to spread throughout China. In the streets and towns, there was true repentance. People dedicated themselves to God. Waves of prayer arose as individual prayers and group prayers. Despite the loss of sight in his eyes, his heart moved him to work for God. History says that Jonathan Gofort played a very important role in the awakening of the Chinese people.

 On October 8, 1936, his health was seriously affected, and he entered the kingdom of God. Goforth's wife, however, continued to carry on the work he had left behind. She wrote a biography of her husband and published it under the name "Goforth of China". Several thousand copies were printed and used by the people. As a result, the prayer and spiritual burden in Goforth took hold of many people and brought about a revival in their lives.

 Let us remember his birthday today (10 February) and praise God for bringing such a minister of revival into this world. Not only that, we will dedicate our lives to being built on the foundation of Christ. Then, even if problems like storms come to attack us, they will not overwhelm us.

Whoever trusts in the Lord will be placed in the highest refuge ( Proverbs 29:25).

 


Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)