டேவிட் லிவிங்ஸ்டன்,David Livingston (Tamil & English)
இருண்ட கண்டத்தில் ஓர் நட்சத்திரம்
டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு ஏழைச் சிறுவன்!
அவனுக்கு பத்து வயதான போது பஞ்சாலை ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டான். பத்து மணி நேரம் அவ்வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தத்தினால் பகலில்
பள்ளிக்குச் செல்ல அவனால் இயலாது
போனது.அவன் தனக்குக் கிடைத்த முதல் சம்பளத்தில் புத்தகங்கள் வாங்கி
ஓய்வு நேரங்களில் பிரதானமாக இரவு நேரங்களில் தனது படிப்பை தொடர்ந்தான்.
அந்நாட்களில் கடவுள் தன்னைக் குறித்து என்ன திட்டம் கொண்டிருக்கிறார் என்பது அவனுக்குத் தெரியாது. என்றாலும் தன்னை குறித்து தேவனுக்கு ஒரு சிறந்த நோக்கம் உண்டு என்பது மட்டும் சிறுவன்
டேவிட்டுக்குத் தெரியும்.அவன் எதிர்நோக்கிய அந்த சிறந்த எதிர்காலத்துக்கு தன்னை நன்றாய் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் அவன் அறிந்திருந்தான்.
இதற்குள் வருடங்கள் விரைந்தன.
அப்போது அவன் தனது 20-வது வயதை எட்டிவிட்டான். இதற்குள் தான் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்பதையும் தீர்மானித்து விட்டான்.பின்னர் ராபர்ட் மொபட் என்ற ஆப்பிரிக்க ஊழியரை அவன் சந்திக்க நேர்ந்த போது எங்கே, எப்படி அந்த ஊழியத்தை தொடர்வது என்பதையும் நிச்சயித்துக் கொண்டான்.
பலநூறு வருடங்களாக வெளி உலகுக்கு ஆப்பிரிக்கா கண்டம் ஒரு இருண்ட பிரதேசமாகவே இருந்தது. கடலால் சூழப்பட்ட அந்த பு+மியில் கப்பல்களை வரவேற்கும் துறைமுகங்களோ அகன்ற மணல் பரப்போ இருக்கவில்லை. மேலும் கடலோரப் பகுதியில் உயர்ந்த மண்மேடுகளும் பாறைகளும் சூழ்ந்திருந்தன. வட ஆப்பிரிக்கப் பகுதியோ பாலைவன பு+மியாக மனித சஞ்சாரமற்ற பகுதியாக இருந்தது. எனவே அங்கே ஜீவராசிகள் வாழ முடியாது என்றே எல்லோரும் யு+கித்தனர். கொடிய விலங்கினங்கள், காட்டு மிராண்டிகளாக காட்சியளித்த கொடூர மக்கள், அங்கு பரவிய விஷ நோய்கள், அசுத்த ஆவிகளின் ஏவல், ஜாதிப்பு+சல், அடிமை வியாபாரம் என்று ஆப்பிரிக்காவைப் பற்றி சிந்திப்பவர்கள் நடுக்கம் கொள்ளும் அளவுக்கு திகில்
உலகமாகவே தெரிந்தது.
இப்படிப்பட்ட இருளின் சிறைவாசத்திலிருந்த ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் சிலர் ஊழியத்தை துவக்கிய அந்நாட்களில் டேவிட் ஆப்பிரிக்காவின் மத்திய
பகுதியில் தனது ஊழியத்தை மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பிரயாசத்தின் மத்தியிலும் துவக்கினார். தான் கற்றுக் தேர்ந்திருந்த மருத்துவம், பு+கோளம், தாவரவியல், விலங்கியல், மண்ணியல், வான சாஸ்திரம், திருமறை, வேதியல் இப்போது ஊழியத்திற்கு பெரிதும் கைகொடுத்தது.
30 ஆண்டுகள் அந்த மக்களுக்காக ஓடி ஓடி சேவை செய்தார். ஆயிரமாயிரம் மக்கள் மனம் திரும்பினார்கள். விலங்குகளால், விஷஜூரத்தால், இயற்கையின் சீற்றத்தால், பொல்லாத மனிதர்களால்
பலவிதங்களில் தாக்கப்பட்டார். ஒரு முறை சிங்கம் ஒன்று அவரை திடீரென தாக்கியது. அதன் காரணமாக அவரது தோள்பட்டை எலும்பு கூட நொறுங்கிப் போனது. தன்னுடன் இருந்த ஆப்பிரிக்க விசுவாசியின் உதவியினால் உயிர் தப்பினார். வெளி உலகத்தோடு இருந்த எல்லா தொடர்புகளும் இல்லாத நிலையில் காலைதோறும் மண்டியிட்டு வெகுநேரம் ஜெபித்து, வேதத்தை தியானித்து, தேவனோடு ஐக்கியம் கொண்டு
வந்தார். ஒரு நாள் டேவிட் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவரது ஆவி பிரிந்தது.
ஸ்காட்லாந்தில் பிறந்து, தேவ ஊழியத்துக்கு என்று தன்னை அர்ப்பணித்து, ஆப்பிரிக்காவின் காடுகளில் ஆயிரமாயிரம் பேரை நித்திய
ஜீவனுக்கும், தேவனடைய ஆளுகைக்கும் வழிநடத்தி வீர மரணம் அடைந்தார். அவர் மரித்த பின் அவரது சடலத்தை 9 மாதங்கள் பிரயாணம் செய்து கடலோரப் பகுதிக்கு அவரது விசுவாசிகள் கொண்டு வந்தார்கள். பின் கப்பலில் அவரது உடல் ஏற்றப்பட்டு இலண்டன்
நகரத்தில் பிரபுக்கள் அடக்கம் செய்யப்படும் வெஸ்ட்
மினிஸ்டர் அபி என்ற கல்லறை தோட்டத்தில் இராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று ஆப்பிரிக்காவில் எழுந்து நிற்கும் பிரமாண்ட சபைகளுக்கு டேவிட்டின் கீழ்ப்படிதலே காரணம். டேவிட் மரித்துப் போனதைக் கேட்டு அவர் விட்ட பணியை தொடருவதற்கு, நான் செய்வேன் என்று பலர் முன் வந்தனர். மேரி ஸ்லேஸர் என்ற பெண்மணியும் அவர்களில் ஒருவர். பிற்காலத்தில் அவரும் தேவனுக்காக அரிய பல காரியங்களை ஆப்பிரிக்க மண்ணில்
நிறைவேற்றினார்.
- உன்னைப் பற்றி உன் தேவன் என்ன நினைத்திருக்கிறார்?
- உன்னால் இந்த உலகத்தின் ஈடேற்றத்துக்கு என்ன செய்ய முடியும்?
- உன் நாட்டுக்கு உன்னைக் கொண்டு ஒரு விமோசனத்தைக் கொண்டு வர நினைத்தால் அதற்கு நீயும் ஆயத்தம் தானா?
- உன் தீர்மானத்தைப் பொறுத்தே உன் எதிர்காலம் அமையும்.
A
Bright star in a Dark Continent
David Livingston was a poor child.
When he was barely 10 years old, he was put in a workhouse that manufactured cotton. The 10 long dreary hours of work for a young boy forced the boy to quit school. With his meagre salary, he bought a few books and read them, with which he educated himself during his leisure time at night.David didn’t know what God had in mind for him. But He knew that God surely had a plan and that he had to make himself ready for the call from the Master.
Years rolled by.
He was 20 years old now and decided firmly that he wanted to be a missionary. Also, when he met Mr. Robert Moped, a missionary, he decided where and how he would start his mission work. For centuries, Africa was a dark continent for most of us. Though surrounded by oceans throughout, South Africa didn’t have even a harbor at its shores to welcome ships. The coastal lands were a plateau, surmounted with rocky crags. North Africa, on the other hand, was even more extreme with a vast desert expanse without human habitation. People thought it was uninhabitable. The fierce animals, fiercer human beings, rampant and devastating diseases, deep witchcraft, tribal groups and slave trade made Africa a much terrible place to invade or inhabit.
In
the midst of all this dark imprisonment, while there was very little missionary
work in the southern part of the continent, David Livingston pioneered his
missionary work in Central Africa with much difficulty. His thorough knowledge
on medicine, geography, botany, zoology, geology, astronomy and theology was of
immense help to him.
He
was always ready to help the people and continued his good work for 30 years.
Many thousands accepted Christ. But he himself was afflicted by beasts, bouts
of fever, natural disasters and evil men. In fact, he had broken his shoulder bones
and was rescued by one of the men who went with him in his missionary journey.
Devoid of all contact with the outside world, he prayed long hours on his knees
seeking the Lord, reading the Bible and communing with the Lord. One day while
David was praying, he passed away quietly.
Born
in Scotland, he was a man committed to God’s work in the dark forests of Africa
bringing thousands to the eternal life and kingdom of God. It took 9 months to
bring his corpse to the coastal land. From the coastal land, a ship transported
his dead body to London where he was buried with state honors at the West Minister
Abbey.
If
there are huge churches in Africa, it stands as a witness to David’s simplest
obedience to the call of Christ. Many volunteered to continue the missionary
work of David Livingston when they heard of his passing away. The famous lady
missionary Mary Slessor was one of them. She accomplished much in Africa like
her predecessor David.
- What does God have in His Mind about you?
- What could you possibly do for the betterment of this earth?
- What kind of redemption could you bring to your nation and are you even ready for such a journey?
- The answer to all these questions and your future depends on your decision today.
Comments
Post a Comment