ஆர்தர் மர்காஷிஸ் Arthur Margochis (Tamil & English)


ஆர்தர் மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்தான்
. இடையிடையே, வெளிப்பட்ட இருமல் வேறு அவனை அதிகத் தொந்தரவு செய்தது. பெலவீனமான நிலையில் இப்படி தனியாக மாட்டிக் கொண்டோமே என்று எண்ணிய போது வருத்தமாக இருந்தது ஆர்தருக்கு. இதுவே வீடாக இருந்தால் இந்த சமயங்களில் அம்மாவாவது உடன் இருப்பார்கள். துணையாக இருந்த நண்பன் ஜோசாவும் நேரமாகி விட்டதால் தன் இருப்பிடத்திற்கு சற்றுமுன் சென்று விட்டான். கட்டிலில் மல்லாக்க படுத்துக் கிடந்த ஆர்தர் கதவு ஜன்னல்களை எட்டிப்பார்த்தான். வெளியே பனி கொட்டிக் கொண்டிருப்பதால் அவைகளெல்லாம் சாத்தியிருந்தது. எதிரே கிடந்த மேஜையை எட்டிப் பார்த்தான். மேஜை மீது தட்டில் பழ வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு புறம் அவனுக்குரிய மருந்து பாட்டில்களும் இருந்தன. மருந்து பாட்டில்களை பார்த்த போது ஆர்தருக்கு வெறுப்பாக வந்தது. இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது என அலுத்துக் கொண்டான்.

ஆர்தர், பதினேழரை வயது நிரம்பிய இளம் வாலிபன். அவனுடைய பெற்றோருக்கு எட்டுக் குழந்தைகள். அதில் கடைக்குட்டி ஆர்தர்தான். எட்டாவது பிறந்த அவனை ஈன்றெடுக்கும் போதே அவனது தாய் பெலவீனமாக இருந்ததாலோ என்னவோ ஆர்தரும் சிறுவயது முதல் பெலவீனமான குழந்தையாகவே இருந்து வந்தான். இளம் வயதிலேயே அவனை தொற்றிக் கொண்ட ஆஸ்துமா வியாதி வேறு அவனை படாத பாடு படுத்தியது. அதற்கு அவர்கள் பார்க்காத வைத்தியமில்லை. ஆனால் வியாதியென்னவோ குறைந்தபாடில்லை.

ஆர்தர் உடல் நலத்தில் பெலவீனமாக இருந்தானேயொழிய ஆவிக்குரிய வாழிவில் அவன் பெலசாலியாகவே திகழ்ந்தான். பக்தியுள்ள பெற்றோருக்கு பிறந்த அவன், தன் தாய் தந்தையரைப் போல பக்தியுடனே காணப்பட்டான். இயேசுவே தெய்வம் என்பதைப் பற்றி அறியாத மக்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த போது துடித்துப் போனான் ஆர்தர். அன்றிலிருந்து, இயேசுவை அறியாத மக்கள் மத்தியில் தானும் ஒரு மிஷனெரியாக செல்ல வேண்டும் என ஆசைப்பட்டான் அவன். ஆனால் தன் உடல் நிலையை நினைத்த போது தான் அவனுக்கு வருத்தமாக இருந்தது. பதினோரு வயதுவரை வீட்டிலிருந்தே கல்வி பயின்ற ஆர்தர் உயர்கல்விக்காக இப்போது கௌலி நகருக்கு வந்திருந்தான். கௌலிக்கு வந்ததிலிருந்து அவனது ஆஸ்துமா வியாதி அதிகரித்திருந்தது. அதனால் தான் இப்போதும் ஆர்தர் மூச்சுவிட திணறிக் கொண்டிருந்தான்.

படுத்துக் கிடந்த ஆர்தர் என்ன நினைத்தானோ தெரியவில்லை. திடீரென எழுந்து முழங்கால் படியிட்டான். "இயேசுவே! பிறருக்கென பயனுள்ள வாழ்க்கை நடத்த வாஞ்சிக்கும் உமது அடியானின் ஆசையை அறிவீர். உடல நலமில்லாமல் உறுதி குலைந்து நிற்கும் அடியேனுக்கு இறங்கும். என் வாழ்நாளை கூட்டித் தாரும்" என ஊக்கமாக ஜெபித்தான்.

ஜெபித்து முடித்ததும் ஆர்தருக்கு புதுத்தெம்பு வந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து தன் டைரியை எடுத்தான். "தன் நாமத்தை கூறி அறிவிப்பதற்காக தேவன் என்னை விட்டு வைப்பார் என நம்புகிறேன்" என அதில் எழுதி வைத்தான்.

ஆர்தருடைய நம்பிக்கை வீண் போனதா? வீண்போகவே இல்லை. இந்த ஆர்தர் மர்காஷிஸ் தான் பின்னாளில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரியாக புறப்பட்டு வந்து தென் தமிழகத்தில் நாசரேத் பகுதியில் தேவனுக்காக உழைத்தவர்.

தன் சுகவீனத்திற்கு மத்தியிலும் பிறருக்காக வாழத் துடித்த மர்காஷிஸைப் போல நீயும் தன்னலத்தை தவிர்த்து பிறருக்காக வாழ உன்னை அர்ப்பணிப்பாயா? மர்காஷிஸின் பெலவீனம் அவரது அர்ப்பணிப்பையோ, இலட்சியக் கனவையோ திசைமாறச் செய்யவில்லை. தேவன் ஒரு மனிதனை கொண்டு செய்ய நினைத்தது ஒரு போதும் தடைபடாது. உன் வாழ்விற்கென்றும் தேவன் ஒரு திட்டத்தை வைத்து வைத்திருக்கிறார். உன் வாழ்நாளில் அதை நிறைவேற்றி முடிப்பதே முழுமையான வாழ்க்கை.     

 Arthur’s Longing

Arthur was holding his breath. Occasionally, an exposed cough bothered him even more. Arthur was saddened when he thought he was stuck alone in such a weak position. If this was his house, his mother would be with him during these times. His companion friend, Joseph, also went to his location because it was too late. Arthur lay on the couch and peeked through the door and window. They were also closed because of the snow and it was closed outside. He peeked at the table opposite. On the table on the platewere stacked fruits . On the other hand, there were bottles of medicine belonging to him. Arthur was frustrated when he saw the medicine bottles. How many more days should I be taking these pills? He said to himself.

Arthur, a young man of seventeen. He was the eighth and last child was his parents. His mother was very weak when she gave birth to him and it was probably due to this fact he was also very weak. Asthma infected him at a very young age. His parents tried all the medication possible but the disease did not get cured.

Though Arthur was very weak physically, he was very strong spiritually. He was a very pious person just like his father and mother. When Arthur understood that there are still people in this world who have not understood about Jesus, he was very worried and was longing to go admit them and work as a missionary and preach about Jesus. But he was worried about his health. He was home schooled until the age of 11 and for his higher education he came to the Canterbury city. Ever since he came to the city his asthma problem started increasing. He was having breathing difficulties because of Asthma.

Some thought came in Arthur’s mind when he was lying down. Suddenly he got up and got down on his knees and started prayingJesus! You know the desire of your servant who longs to lead a useful life for others. He prayed to Jesus to descend gracefully and help him to give him more days so that he can help others. Once he completed praying he got up with great difficulty and he felt that he got some new strength in his body. He wrote in his diary stating that “In order to announce the Glory of Jesus, I believe that God will give me a long life”

Did Arthur’s hope go in vain? Definitely not. He is the same Arthur Margochis missionary who came from England to India and did the work of preaching the Lord’s name in the region of Nazareth in TamilNadu.

Would you also be willing to work for Jesus just like Margochis who worked with his illness and weakness in body. His weakness did not hinder his dedication or the end goal which he wanted to achieve. God’s plan for a particular man will never get stopped. He will also have a plan for your life. It should be your mission to complete his plan.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)