Will you allow God? Lesson from Felix Mendelssohn பெலிக்ஸ் மென்டல்சன் (Tamil & English)

 

பெரிபர்க் நகரம் ர் அழகிய நகரம். ஜெர்மனியில் அந்த நகரத்தின் நடுவே அழகியதொரு பேராலயம். அந்தப் புகழ் பெற்ற பேராலயத்திலே ஒரு பிரமாண்ட காற்றிசைக் கருவியான ஆர்கான் உள்ளது. அதை பல வருடங்களாக ஒரு பிரபல இசைக்கலைஞன் இசைத்து வந்தார். அவரை பாராட்டாத ஜனமே இல்லை என்ற அளவுக்கு திறமையோடு அந்த இசைக்கருவியை மீட்டி வந்தார்.

காலங்கள் உருண்டோடியது….அவரும் வயோதிபராகிப்போனார். என்றாலும் அந்த இசைக்கருவியை மீட்ட அவருக்கு மட்டுமே அந்த பேராலயத்தில் அனுமதியுண்டு!

ஒருநாள் அந்நகருக்கு வருகை தந்த ஒரு பயணி. அந்த ஆலயத்தைப் பார்வையிட வந்தார். அவரது பார்வையில் அந்த ஆலயத்தின் பிரமாண்ட இசைக்கருவி தப்பவில்லை. அதன் அருகில் சென்று அதை இயக்க தாம் விரும்புவதாக அனுமதி கேட்ட போது அவருக்கு அது மறுக்கப்பட்டது. அந்த முதிர்ந்த வல்லுநர், தான் ஒருவருக்கே அந்த உரிமை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்! என்றாலும் அந்தப் பார்வையாளர் விடுவதாக இல்லை. தமக்கு எப்படியும் அனுமதி தர வேண்டும் என்று விடாது வற்புறுத்தவே வேறுவழியின்றி அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வந்தவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அவர் அந்த இசைக்கருவி அருகே அமரிக்கையோடு அமர்ந்து தமது விரல்களை அந்த கருவியைத் தீண்டிய மாத்திரத்தில் இசை வெள்ளம் அமுதாகப் புறப்பட்டது. ஆலயத்தின் இசையமைப்பாளராக அதனை இத்தனை நாள் மீட்டி வந்த அந்த பெரியவர் அப்படியே பிரமித்து நின்று விட்டார்!

தன் வாழ்நாளில் இதுவரை கேட்டிராத வண்ணம் அத்தனை நேர்த்தியாய் இசை மழை பொழியும் இந்த இசைஞானி யாராக இருக்கக் கூடும் என்று அவர் அறிய ஆவல் கொண்டார்! அவர் அங்கே சென்று தங்கள் பெயரென்ன என்று மெல்ல வினவினார். வந்தவரோ மிகுந்த மகிழ்ச்சியுடன் தான் "பெலிக்ஸ் மென்டல்சன்" என்றார். அந்த பெயரைக் கேட்டதும் ஆலய ர்கனிஸ்ட் அசந்து போனார்!

ஆம.; மென்டல்சன் உலகப்பிரசித்திப் பெற்ற ஒரு இசை அமைப்பாளர் என்று பெயரை மட்டுமே கேட்டிருந்த அவருக்கு அந்த இசை மேதையே தன் கண்ணெதிரே நின்றது அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது! மறக்க முடியாத இந்த நிகழ்ச்சியை அந்த முதியவர் திரும்பத் திரும்ப சொல்வதுண்டாம். அந்தப் புகழ் மிக்க இசைக்கலைஞனை தன் ஆலய ர்கனில் இசைமீட்ட முதலில் தான் அனுமதி மறுத்ததைச் சொல்லும் போதெல்லாம் அவர் கரங்கள் நடுக்கம் கொள்ளுமாம்! அன்று மட்டும் அவர் இசைக்காமலே சென்றிருந்தால்? அம்மம்மா! தான் அந்த இசைஞானியின் தேனமுதான இசைமழையில் நனையும் பெரிய பாக்கியத்தை இழந்திருப்பேன் என்று ஆனந்தம் பொங்க அதை பகிர்ந்து கொள்வாராம்!

அன்பு இளம் நெஞ்சங்களே!....

ஓங்கி வளருகின்ற பழமரக் கன்றுகளைப் போலவும் சித்திரமாக வடிக்கப்பட்ட அரண்மனையின் அழகிய மூலைக்கல்லைப் போலவும் நம்மை வடிவமைத்த நமது படைப்பாளி ர்த்தராகிய இயேசு கிறிஸ்து!

அவர் உனது வாழ்க்கையின் நடுவில் குறுக்கிட்டு உன் சரீரமாகிய அந்த இசைக்கருவியை இசைக்கும் உரிமையை எனக்குத் தா என்று கேட்கிறார். உன் உடலை அதன் புயங்களை, உன் நெஞ்சை அதன் ஆசைகளை, உன் சிந்தையை அதன் எண்ணங்களை, உன் ஆன்மாவை அதாவது உன் உள்மனதை, உன் ஆவியை மொத்தத்தில் உன்னை என்வசம் கையளித்து விடு என்று கேட்கிறார். அப்படிக் கொடுத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பாவத்தால் மயக்கமுற்று தங்கள் வாழ்வை ஒப்படைக்க மறுத்த வஞ்சித்தவர்கள் துன்ப சாகரத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். தீர்ப்பு என்றும் உன்னுடையதே!

       உன் இதய வீணையை மீட்க உன் தேவனுக்கு அனுமதி வழங்குவாயா?




Perleberg is a beautiful city. There is a gorgeous church in the middle of this beautiful city in Germany. This famous church is home to a grand organ. For many years, a famous musician has been playing music on that organ. He played the organ with artistry that was praised by everyone.

Years rolled by... he grew old. Even then, only he had the permission to play music on that wind instrument.

One day, A tourist came by to that church. He had come to visit that church. Of course, he did not miss the grand organ. As he went near it, he requested to play on the organ but his request was denied. The aged organist had denied saying it was only his right to play on the organ. However the tourist wasn’t about to give up. The tourist was persuasive asking the expert to let him play that eventually he was permitted.

The tourist was elated! The moment he sat near the organ and grazed his fingers against the keys, music ebbed like honey to the ears. The elderly musician who tended to the organ these many years froze in shock listening to the beautiful music.

 He hadn’t heard such perfect music in his life and he wondered who this prodigy might be! He slowly approached the tourist and asked for his name. The newcomer with much happiness said, : Felix Mendelssohn. The organist was surprised when he heard the name!

Yes, Mendelssohn was a world-famous music director and that’s how much the organist had known! Little did he expect to be standing in front of the music genius! From then on, the organist was known for repeating this story to whomever he met. Whenever he mentions his initial reluctance to allow the musician to play, his hands would tremble! What if Mendelssohn hadn’t played that day on his church’s organ? Oh my! I would have lost the rarest opportunity to experience such sweet music, he mentions with ebbing joy to anyone who listens.

My dear young friends!

Our creator Jesus Christ had designed us to be tall growing fruitful trees and as artistic cornerstones of a palace! He intercedes in your life and is asking for the right to play wonderful music using your body as his musical instrument. He is asking you to surrender your body, its organs and limbs, your heart and its desires, your thoughts and mind, your soul and your conscience, your spirit, you as a whole. People who dedicated their life and body to Christ lived. Those who went astray with the mirage of sin and denied to dedicate had been deceived into drowning in utter distress. The decision is always yours!

Will you be willing to allow God make wonderful music with your heart?

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!