ஜோனத்தான் எட்வர்ட்ஸ் - மேக்ஸ் ஜுக்ஸ், Genealogy of Jonathan Edwards and Max Jukes (Tamil & English)
ஜோனத்தான் எட்வர்ட்ஸ் - மேக்ஸ் ஜுக்ஸ்
ஜோனத்தான் எட்வர்ட்ஸ் அமெரிக்க தேசத்தில் நியூயார்க் பட்டணத்தில் கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்டார். வேதத்திலும், ஆண்டவரோடு கூட நெருங்கி வாழ்வதிலும் அதிகமாக போதிக்கப்பட்டார். இவருக்குத் திருமணமான பின்பு, இவரது மனைவி சாராவும், இவரை போன்றே கிறிஸ்தவ குணாதிசயங்களை கொண்ட பெண். இருவரும் சேர்ந்து கிறிஸ்துவுக்குள் தங்கள் குடும்ப வாழ்க்கையை கட்ட ஆரம்பித்தார்கள். இரண்டு பேரின் வாழ்விலும் தேவன் 11 பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார்.11 பிள்ளைகளில் ஒரு பிள்ளை கூட ஆண்வரை விட்டு திசைமாறி போகவில்லை. ஆண்டவர் விரும்புகின்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
இவருடைய காலகட்டத்திலேயே(1700 வது ஆண்டு), நியூயார்க்கில் மேக்ஸ் ஜுக்ஸ் என்பவரும் வாழ்ந்து வந்தார்.நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், ஆண்டவரைமேக்ஸ்முற்றிலும் வெறுத்தார். இவர்கள் இருவருடைய வாழ்வையும் பார்க்கும் போது, கிறிஸ்துவை பின்பற்றுகிற சந்ததியும், கிறிஸ்துவை பின்பற்றாதவர்களின் சந்ததியும் எப்படி ஆசீர்வதிக்கப்படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர்கள் இருவரின் 5 சந்ததியை பற்றி பார்க்கலாம்.
ஜோனத்தான் எட்வர்ட்ஸின் சந்ததி...
இவர் சந்ததியில் சுமார் சுமார் ஆயிரம் பேர் இருந்தார்கள்.
அவர்களில் 65 பேர் கல்லுரி பேராசிரியர்களாக இருந்தார்கள்.
100 பேர் வக்கீல்களாக இருந்தார்கள்
30 நீதிபதிகள் அவர் சந்ததியில் உருவாகியிருக்கிறார்கள்.
60 மருத்துவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
60 எழுத்தாளர்கள் எழும்பி ஆவிக்குரிய புத்தகங்களை எழுதி உள்ளார்கள்.
75 பேர் இராணுவத்தில் பணிபுரிகிறார்கள்.
5 தலைமுறைகளை கொண்ட இவரது சந்ததியின் வரலாற்றை திருப்பி பார்த்தோமென்றால் ஆண்டவர் இந்த சந்ததியின் மூலமாக பெரிய காரியங்களை செய்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட, இவர்களில் ஒருவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உயர்ந்தார்.
1025 பேர் கொண்ட சந்ததி.
190 பேர் விபச்சாரர்களாக உருவானார்கள்.
300 பேர் தரித்திரராக உருவானார்கள்.
300 பிள்ளைகள் பிறந்து கொஞ்ச நாட்களிலேயே கவனிப்பாரற்று இறந்து விட்டார்கள்.
படிக்காத பிள்ளைகள் அநேகர் இருக்கிறார்கள்.
சோம்பேறித்தனமான பிள்ளைகளும் அநேகர் உருவாகி இருக்கிறார்கள்.
400 பேர் வியாதிபட்டவர்களாக இருந்தார்கள்.
ஆண்டவரை பின்பற்றுகின்ற குடும்பத்திற்கும், அவரைப் பின்பற்றாத குடும்பத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான். ஜோனத்தான் எட்வர்ட்ஸ் மற்றும் அவரது மனைவியும் தினமும் ஒரு மணி நேரம் தங்களின் 11 பிள்ளைகளுக்காக நேரத்தைஒதுக்கி, அவர்களோடு கூட வேதத்தை வாசித்து, ஜெபித்து அவர்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காய் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். ஆண்டவர் இவர்களின் குடும்பத்தை கனம்பண்ணினார்.
ஒரு வேளை நாம் நம் அறைவீட்டிற்குள்ளிருந்து நம் பிள்ளைகளுக்காக, நம் குடும்பத்திற்காக ஜெபிக்கலாம். இது நம் பிள்ளைகள் மட்டும் அல்ல, நம் சந்ததிகளும் ஆண்டவரை சேவிக்க வழிவகுக்கும்.இன்று நாம் கஷ்டப்பட்டு நம் பிள்ளைகளை வளர்ப்பது போல நமக்கு தெரியலாம். ஆனால் நாம் நம்முடைய பிள்ளைகளை மட்டுமல்ல, அவர்கள் சந்ததிகளையே உருவாக்கி கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. சோர்ந்து போகாமல் ஆண்டவர் நமக்கு கொடுத்த குடும்பத்தை, ஆண்டவர் நமக்கு கொடுத்த பிள்ளைகளை ஆண்டவருக்குள் வழி நடத்துவோம். இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். ஏசாயா 8:18
Jonathan Edwards was raised in the United States by Christian
parents in New York City. He was taught to read the Bible everyday and grow in
the Lord. His wife Sarah too was a God fearing woman like he was and they began
to build their married life with Jesus as the foundation. God blessed them with
eleven children. All of them loved the Lord and had committed their lives to
Jesus. His contemporary Max Jukes was also raised in a good family in New
York (1700 s). But he knew nothing of the Lord and He did not believe in Christian training. Let’s ponder upon the lives of five generations of descendants
of these two men and contrast the difference between men who did and did not
know the Lord.
Genealogy of Jonathan Edwards and Max Jukes
His generation was nearly counted to 1000 people. Out of them, 65 people were professors at various famous colleges. 100 people became successful
lawyers. There were 50 honorable judges
and 60 eminent doctors. Around 60 people became authors of good spiritual books
and 75 people served in the army. If we carefully analyze the five generations
of his offspring, we could come to know how God had blessed them and had done
marvelous things through them. One of them even rose to the rank of Vice
President of the United States.
Now let’s turn our attention to the family genealogy of Max Jukes,
his contemporary. Among the five generations of his descendants, there were
1026 people out of which 190 were prostitutes and 300 were extremely poor. 300
children in the family died because of lack of proper care. Many of them were
uneducated and slothful. About 400 people were sick with many diseases.
This is the contrasting legacies of those who follow the Lord and
those who did not. Jonathan Edwards and his wife set apart one hour everyday
for their children. They read the Bible to their children, prayed with them and
passed on a godly legacy to each of their children. They prayed for their
children’s future and God honored their family.
When we pray for our children and our family in private, it will
enable our children and their descendants to serve the Lord. The task of
raising them in the Lord’s way may seem difficult but it is no doubt that we
are building not only our children but also their generations to come. Let us
not become weary in leading our family and children to know the Lord.
Behold, I and the children whom
the Lord has
given me are for signs and wonders in Israel from the Lord of
armies, who dwells on Mount Zion. Isa
8:18.
Comments
Post a Comment