Posts

Showing posts from June, 2021

கேரியின் டைரி, William Carey's Diary entry (Tamil & English)

Image
கேரியின் ஒரு நாள் தினத்திட்டத்தை பார்த்தாலே போதும், அவர் எவ்வளவு கடின உழைப்பாளி என்பதை நிதானிக்க முடியும். * 5.30 மணிக்கு துயில் எழுந்தேன். * எபிரேயர் நிருபத்தில் ஒரு அதிகாரம் படித்தேன்.  * பின் 7 மணி வரை ஜெபித்தேன்.  * பின்னர் பெங்காலி மொழியில் குடும்ப ஜெபம் நடத்தினேன்.  * தேநீர் தயாரிக்கும் போதே பெரிசிய மொழிப் பயிற்சியை தொடர்ந்தேன். * பின் காலை உணவுக்கு முன் இந்துஸ்தான் மொழியை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தினேன். * காலை உணவு முடிந்ததும் 10 மணி வரை இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதரின் உதவியோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். * பின்  ஆசிரியப் பணிக்கென்று அரசு கல்லுரிக்குச் சென்றேன்.  *1.30 மணிக்கு மதிய உணவு எடுத்தேன்.  *2 மணிக்கு பெங்காலி மொழியில் எரேமியா தீர்க்கதரிசன புத்தகத்துக்கான அச்சுப் பிழைத்திருத்தம் செய்தேன்.  * பின் சமஸ்கிருத மொழியில் மத்தேயு 8ஆம் அதிகாரத்தை 6மணி வரை மொழி பெயர்த்தேன்.  * பின் தெலுங்கு பண்டிதரின் உதவியுடன் தெலுங்கு கற்றுக்கொண்டேன்.  * 7.30 மணிக்கு பிரசங்கம் செய்தேன்.  * 9மணிக்கு மேல் எசேக்கியேல் 11ஆம் அதி...

Dr Paul Brand (Tamil & English)

Image
டாக்டர் பால் பிராண்டின் தகப்பனார் ஜெசிமென் பிராண்ட் தொழுநோயாளிகளின் மத்தியில் பணி செய்தவர்.இவர் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் பிறந்து வளர்ந்தார்.1914 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி பிறந்தார்.பெற்றோர் ஊழியத்தில் முழுநேரமாக பணியாற்றியதால் இவரது தங்கையை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பும் பால் பிராண்டின் மேல் இருந்தது. இவரது தாயார் இவரிடம், "மகனே, இந்த அடர்ந்த இருண்ட காட்டிற்குள் நீ தனியாக இருப்பதாக நினைக்க வேண்டாம் ;ஆண்டவர் உன் கூடவே இருந்து உன்னை கவனித்து காப்பாற்றுவார்" என்று தினமும் ஊழியத்திற்கு செல்லும் முன் கூறுவார்கள். அதனால் பால் பிராண்டின் விசுவாசம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தது. காட்டுப்பகுதிக்குள் இவர்கள் வாழ்ந்ததால் சரியான கல்வி வசதி பால் பிராண்டுக்கு கிடைக்கவில்லை. எனவே பால் பிராண்டின் தாயார் ஆசிரியராக இருந்து ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களை தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார். பால் பிராண்ட் தன் தந்தையின் ஊழியத்தை அதிகம் நேசித்து கவனித்து வந்தார். பால் பிராண்டின் 15வது வயதில் அவரது தந்தை கொடிய காய்ச்ச...

William Booth (Tamil & English)

Image
  வில்லியம் பூத் அவர்கள் இரட்சண்ய சேனை என்ற இயக்கத்தை உருவாக்கியவர். 1829 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி லண்டன் மாநகரத்தில் பிறந்தார் .இவர் குடும்பத்தின் வறுமை காரணமாக,  படிப்பைத் தொடர முடியாத நிலையில் அடகு கடையில் பணிபுரிந்தார். அதில் அவருக்கு திருப்தி இல்லாத நிலை காணப்பட்டது. அப்போது ஆண்டவரை ஏற்றுக் கொண்டு அவர்  அன்பை உணர ஆரம்பித்தார். ஆண்டவருக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, தன்னை முழு நேர பணிக்கென அர்ப்பணித்தார். வில்லியம் பூத் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும் போது  ராணுவ சேனை போல ஒரு பெரிய சேனையாக உருவாக்க வேண்டும் என்று எண்ணி, கிறிஸ்டியன் மிஷன் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் . அச்சமயத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் திருமணத்தில் நான்கு நபர்கள் மட்டுமே பங்கு பெற்றனர் .இவ்வாறு மக்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு வாழ்ந்தார்.  ஆனாலும்  ஆண்டவரின் ஊழியத்தை உற்சாகமாக செய்து கொண்டு வந்தார். வரலாற்றில் இவரை "சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர்" என்று கூறுகிறார்கள். தான் ஸ்தாபித்த ...

ஹென்றி மார்ட்டின் Henry Martin (Tamil & English)

Image
ஹென்றி மார்ட்டின் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டார். தனது இரண்டாம் வயதில் உடல் சுகவீனம் காரணமாக தாயாரை இழந்தார். தகப்பனாரால் கைவிடப்பட்டு அனாதை ஆனார். இவரது பாட்டியம்மா இவரை ஆண்டவருக்குள்ளாக வளர்த்து,ஆண்டவரிடம் நெருங்கி சேர உதவி செய்தார்கள். வாலிப வயதில் அனேக சபை ஊழியங்களில் ஆர்வமுடன் பங்குபெற ஆண்டவர் உ தவி செய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த இவர்,வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார். ஆனால் ஆண்டவர் அவரை தாயின் கருவில் உருவாகும் முன்னமே முன் குறித்து இருந்ததினால் அவர் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றினார். அச்சமயங்களில் வில்லியம் கேரியின் வாழ்க்கை வரலாறு இவரை அதிக அளவில் பாதித்தது. வில்லியம் கேரியின் ஊழியங்கள் மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகளால் அதிகம் கவரப்பட்டார்.தானும் இந்திய தேசத்திற்கு சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் பண்ணினார்.கல்லூரி படிப்பை முடித்ததும் இவரது திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டது.மணப்பெண்ணான லிடியா, அவரிடம் "ந...

விசுவாசத்தில் வல்லவர்- ஜார்ஜ் முல்லர், George Muller (Tamil & English)

Image
      விசுவாசத்திற்குக் எடுத்துக் காட்டு  ஜார்ஜ் முல்லர் ஆவார். வேதாகமத்தில் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று எப்படி அழைக்கப்படுகிறாரோ, அதே போல நடைமுறை வாழ்விலே ஜார்ஜ் முல்லரை விசுவாசத்தில் வல்லவர் என்று  கூறுகிறார்கள். அவரது வாழ்வில் எல்லா காரியங்களையும் விசுவாசத்தால் மட்டுமே சாதித்தார். ஜார்ஜ் முல்லர் இங்கிலாந்து தேசத்தில் அநேக அனாதை இல்லங்களை நடத்தி கொண்டு வந்தார். தாய், தந்தை இல்லாத சிறுவர், சிறுமிகள் சுமார் ஒன்றரைலட்சம் பேர் அங்கே இருந்து படித்தார்கள். அனாதைப் பிள்ளைகளுக்கென நடத்தப்பட்ட விடுதி என்பதால் அதன் மூலம் அவருக்கு எந்த மாத வருமானமும் இல்லை. அவர்களை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி சிறிதளவும் கூட அவர் கவலைப்படாமல், ஆண்டவரையே முழுமையாக நம்பி இருந்தார்.ஒரு நாள், அனாதை இல்லத்தில்  குழந்தைகளுக்குக் காலை உணவு பரிமாறப்பட வேண்டும், ஆனால் இல்ல பணியாளர்கள்  பிள்ளைகளுக்கு உணவளிக்க ஒன்றுமே இல்லை, என்ன செய்வது என்று ஜார்ஜ் முல்லரிடம் கேட்டனர். ஜார்ஜ் முல்லரோ பிள்ளைகளை சாப்பிட மேஜையில் அமர வைக்கக் கூறினார். பணியாளர்களுக்கு ஒன்ற...