William Tyndale வில்லியம் டிண்டேல் (tamil & English)
வில்லியம் டிண்டேல் ( A Hero for the information age - Father of English Bible Translators) (1494 -1536) டிண்டேலின் இளமைக் காலம் : வில்லியம் டிண்டேல் 1494 ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார் . சிறு வயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப்பட்டார் . பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய கால மூடநம்பிக்கைகள் இவரை சிந்திக்க வைத்தன . ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார் . இதன் விளைவு அவரை ஒரு சபை சீர்திருத்த வாதியாக உருவாக்கியது . மார்ட்டின் லுத்தர் மற்றும் சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்த வாதிகளின் கருத்து இவரை மிகவும் கவர்ந்தது .1521 ம் ஆண்டு இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவம் பெற்றார் . திரும்பவும் தன் ஊருக்குத் திரும்பி , அங்குள்ள சபையின் போதகரானார் . டிண்டேலின் முற்போக்குத் தனமான சிந்தனைகளும் , கத்தோலிக்க பழமை வாதத்திற்கு எதிரான இவரது செயல்களும் சபை தலைவர்களின் கவனத்தை திருப்பியது . முதல் ஆங்கில வேதம் : 1523 ல் டிண்டேல் லண்டன் திரும்பி புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழ