Benjamin Henry Arthur Margoschis, Nazareth Missionary, From England 1852-1908 பெஞ்சமின் ஹென்றி ஆர்தர் மர்காஷிஸ் (Tamil & English)



சரித்திர புருஷர்கள் : பெஞ்சமின் ஹென்றி ஆர்டர் மர்காஷிஸ்
பெஞ்சமின் ஹென்றி ஆர்ர் மர்காஷிஸ் 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ரெமிங்டன் என்ற ஊரில் பிறந்தார். 1875 ஆம் ஆண்டு இடையன்குடியில் மிஷனரியாக பணிபுரிந்து வந்த பேராயர் ராபர்ட் கால்டுவெல், விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றிருந்த போது இந்தியர்களின்,  குறிப்பாக தென் தமிழக மக்களின் நிலையை பற்றியும்,  அவர்கள் மத்தியில் பணிசெய்ய ஊழியர்கள் தேவை எனவும் அறைகூவல் விடுத்தார். இதனை தேவனுடைய கட்டளையாக ஆர்தர் மர்காஷிஸ் ஏற்றுக்கொண்டார். தான் பயின்று வந்த மருத்துவ கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவிற்கு புறப்பட தயாரானார். கல்லூரி படிப்பை முழுமையாக முடித்தபின் செல்லுமாறு நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவோ கூறியும் தன் முடிவில் மர்காஷிஸ் உறுதியாக இருந்தார்.

1875 ஆம் ஆண்டு,  22வயதான  வாலிபன்  மர்காஷிஸ், இந்தியாவிற்கு வந்து கால்டுவெல் அய்யரின் கீழ் சிலகாலம் பயிற்சிகளை மேற்கொண்டார். பின் 1876 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசரேத்தில் தன்னுடைய ஊழிய  பணியை ஆரம்பித்தார். சுவிசேஷ ஊழியத்தோடு,  மருத்துவ பணியையும் அங்கு செய்தார். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த  மர்காஷிஸ், St.Luke's மருத்துவமனையை நிறுவினார். மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டு வர அயராது உழைத்தார்.

1902 ஆம் ஆண்டு காலரா என்னும் கொடிய கொள்ளைநோய் திருநெல்வேலியின் நாசரேத்தை   தாக்கியது.  கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். ஆண்டவரால் மட்டுமே கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று அறிந்த மர்காஷிஸ் ஆலயத்திற்குள் சென்று மணிக்கணக்காய் தேவனிடம் மன்றாடினார். தேவன் ஜெபத்தை கேட்டார். மக்கள் மத்தியில் காணப்பட்ட மரண பயத்தை களைந்தார். அன்று முதல் தினசரி திருவிருந்து ஆராதனை நடத்த ஆரம்பித்தார். இன்றும் நாசரேத் ஆலயத்தில் திருவிருந்து ஆராதனை தினமும் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் மரித்தோரின் ஆவிகள் பற்றிய பயம் அதிக அளவில் இருந்தது. அதனை போக்க சகல ஆத்துமாக்களின் நாள்  விசேஷமாக அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் மரித்தோரின் கல்லறைகளுக்கு பவனியாக சென்று உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை பூரணமாக பெற்றனர்.

இக் கொள்ளை நோயினால் பல பிள்ளைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆக்கப்பட்டனர். இவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டு வர விரும்பிய மர்காஷிஸ் அவர்களுக்கென ஆதரவற்றோர் இல்லத்தை ஆரம்பித்து அவர்களுக்கு கல்வியறிவை கொடுத்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிள்ளைகளுக்கு ஆசிரிய பயிற்சியை அளிக்க ஆசிரியர் பயிற்சி பள்ளியையும்  நிறுவினார்.  நாசரேத் தபால் அலுவலகத்திற்கு தந்தி வசதியையும்,  ரயில் நிலையம், spinning mill, சரியான சாலை வசதி,  இறையியல் கல்லூரி  என அநேக வசதிகளை நாசரேத் ஊருக்கு பெற்று தந்தார். இவருடைய சமூக பணிகளை பாராட்டி அரசாங்கம் இவருக்கு கைசர் இ ஹிந்த்  என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. சென்னைப் பல்கலைக்கழகம் இவரை தங்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக் கொண்டது.ன்  பணியை ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 14 சபைகளை மர்காஷிஸ் ஐயர் நிறுவினார்.

குள்ள உருவமும் குறுந்தாடியும் கொண்டு தோற்றமளித்த மர்காஷிஸ், ஆஸ்துமா மற்றும் வாதை நோயினால் கஷ்டப்பட்டார்.  கடற்பயணம் குணத்தை கொடுக்கும் என்று  ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்று,  சில மாத சிகிச்சைக்கு பின்பு மீண்டும் நாசரேத்திற்கு வந்து தன்னுடைய பணியை செய்தார்.  1908ஆம் ஆண்டு மீண்டும் அவரை ஆஸ்துமாவும் வாதை நோயும்  மிகவும்  வேதனைக்குள்ளாக்கியது. 1908ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் (27.04.1908) தேவனுடைய மடியில் தன் தலையை சாய்த்து ஜீவனை விட்டார். இன்றும் நாசரேத் ஊரில் இவரால் புதுப்பிக்கப்பட்ட  தேவாலயம் கெம்பீரமாக காட்சியளிக்கிறது.

அயல் நாட்டில் பிறந்து வளர்ந்த மர்காஷிஸ்ஸிற்கு இந்திய தேசத்தை அதுவும் தென் தமிழகத்தை குறித்து இப்படியொரு பாரம் இருக்குமென்றால், இந்தியா என் தாய் நாடு என்று சொல்லி கொள்ளும் நாம் எப்படி இருக்கிறோம். கிறிஸ்துவின்றி தினமும் அழிந்து கொண்டிருக்கும் நம் ஜனங்களுக்கு நாம் தானே பொறுப்பாளர்கள். மர்காஷிஸ் ஐயரின் நினைவு நாளான இன்று அம்மாமனிதருக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். நாமும் நம்மை அர்ப்பணிப்போம்.  

Men of History: Benjamin Henry Arthur margoschis

Benjamin Henry Arthur margoschis was born on December 24, 1852, in Remington, England. In 1875, Archbishop Robert Caldwell, who was working as a missionary in Idiangudi when he went to England for a vacation, made a call about the condition of the Indians, especially the people of South Tamil Nadu, and the need for workers to work among them. Arthur margoschis accepted this as God's commandment. He left his medical education halfway through and prepared to leave for India. margoschis was firm in his decision despite friends and relatives urging him to go after finishing college.

In 1875, the 22-year-old Margoschis came to India and trained for some time under Caldwell Iyer. Then he started his ministry in Nazareth in December 1876. Along with evangelistic work, he also did medical work there. Margoschis founded St. Luke's Hospital, working at the hospital for two hours a day. He worked tirelessly to bring a Renaissance into people's lives.

In 1902, a deadly plague of cholera struck Nazareth in Tirunelveli. People died in droves. Knowing that only God can save people from the deadly disease, Margoschis went into the temple and prayed to God for hours. God heard my prayer. He removed the fear of death among the people. From that day on, he started conducting daily Lord's worship. Even today, the Lord's Prayer is held daily in the Church of Nazareth. Fear of the spirits of the dead was widespread among the people. All Souls' Day was specially observed to overcome it. Christians visited the graves of the dead and fully received the hope of resurrection.

Many children lost their parents and became orphans due to this pestilence. Wanting to bring revival into their lives, Margoschis started an orphanage for them and gave them education. He also established a teacher training school to provide teacher training to school leavers. He provided telegraph facilities to the Nazareth post office, a railway station, a spinning mill, a proper road facility, a theological college, and many other facilities to Nazareth town. In recognition of his social work, the government honoured him with the Kaiser e. Hind award. The University of Madras accepted him as one of their faculty. margoschis Iyer founded about 14 congregations within two years of his work.

Margoschis was short-footed and suffered from asthma and dysentery. He went to Japan and Australia, hoping that sea voyages would cure him, and after a few months of treatment, he came back to Nazareth and did his work. In 1908, he was again afflicted with asthma and dysentery. On this day (April 27, 1908), in April 1908, he bowed his head in the lap of God and died. Even today, the church he renovated stands majestically in the town of Nazareth.

If Margoschis, born and brought up in a foreign country, have such a burden on the Indian nation and South Tamil Nadu, then how are we who call India my motherland? We ourselves are responsible for our people, who are perishing daily without Christ. Today, the memorial day of Margoschis Iyer, let us thank God for Mother Manita. We will also dedicate ourselves.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)