Posts

Showing posts from July, 2023

மார்த்தாள் மால்ட் Martha Mault

Image
  தென் தமிழகம் இன்று அறிவிலும், அரசியலிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறதென்றால், கடல் கடந்து வந்து அங்கு பணியாற்றிய மூத்த முன்னோடி ஊழியர்களே காரணம் என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக, வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கிடந்த பெண்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்திருப்பதற்கும் இவர்களே காரணம். 19-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மறுமலர்ச்சிக்கு இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்த சார்லஸ் மால்ட் மற்றும் அவரது மனைவி மார்த்தாள் மால்ட் பல காரியங்களைச் செய்தனர். 1818 - ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமானது. திருமணமான ஒரு வாரத்திலேயே இருவரும் இந்திய தேசத்திற்கு சுவிசேஷத்தை சுமந்து கொண்டு வந்தனர். கடும் எதிர்ப்புகள் மத்தியிலும் தேவனுடைய பணியை தைரியமாக செய்து வந்தனர். தென் தமிழகத்தின் கால சூழ்நிலை மற்றும் கலாச்சாரம்  அவர்களை அதிகம் பாதித்த போதும் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் சகித்தார்கள்.1821 - ஆம் ஆண்டு, முதல் அச்சுக்கூடத்தை நாகர்கோவிலில் நிறுவினார்கள்.          மார்த்தாள் மால்ட் பெண்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை கொண்டு வந்தார். பெண்களுக்கான முதல் போர்டிங் பள்ளிக்கூடத்தை நிறுவினார். கல்வியறிவ

Donald Andenson McGavran டொனால்ட் மெக்காவரன்

Image
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அவைகள் நிறைவேற சிலர் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் கனவுகள் கண்டே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.        சுவிசேஷகர் டொனால்ட் ஆண்டர்சன் மெக்காவரன் அவருக்கு வித்யாசமான ஆசை இருந்தது. வட இந்தியாவில் கூட்ட நெரிசலாக இருக்கும் பாசஞ்சர் ரயிலில் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும். அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்டு மரிக்க வேண்டும். அவ்வழியில் உள்ள கிராமத்திலேயே தன் உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும். இதுதான் அவரது ஆசை. வித்தியாசமாக இருக்கிறதல்லவா? தொடர்ந்து வாசியுங்கள்.         டொனால்ட் மெக்காவரன் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவ மிஷனெரியாக வாழ்ந்தவர். 1897 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ என்ற ஊரில் மிஷனெரி பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர் ஜான் மெகாவரன் - ஹெலன் அமெரிக்கா தேசத்திலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரிகளாக வந்தவர்கள். இந்தியாவில் ஆரம்ப கல்வியைக் கற்ற மெக்காவரன், தன் மேற்படிப்புகளை அமெரிக்காவில் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று சிறந்து விளங்கியதோடு, தன்

Isabellah Thoburn

Image
  இசபெல்லா தோபர்ன் "இந்தியப் பெண் ஒருவருக்கு கல்வி கற்பிப்பதை விட 50 அடி உயரமுள்ள சுவரில் ஏறுவது சுலபம்" என்று இந்தியாவின் ஆண்களுக்கென முதல் கல்லூரியை ஆரம்பித்த அலெக்சாண்டர் டஃப் என்ற மிஷனெரி கூறுகிறார். ஆம், 18 - ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெண்களின் நிலை இப்படித்தான் இருந்தது. ஜேம்ஸ் தோபர்ன் என்ற மெத்தடிஸ்ட் பிஷப் வட இந்தியாவிற்கு வந்த போது எந்த பெண்ணிற்கும் எழுத படிக்க தெரியவில்லை. இந்துக்கள் மத்தியில் பெண் கல்வியை பற்றிய ஆழ்ந்த தவறான கருத்துக்கள் காணப்பட்டது. இந்நிலையை மாற்ற விரும்பிய ஜேம்ஸ் 1866 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தன் தங்கைக்கு இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து கூறினார். இறையியல் கல்வி கற்ற இசபெல்லா தோபர்ன் தான் செய்ய வேண்டிய பணி மிகவும் பெரியது என எண்ணி இந்தியாவிற்கு வர தயாரானார். அவரோடு இணைந்து கிளாரா A.சுவைன் அவர்களும் 1869 ஆம் ஆண்டு நவம்பர் 3 - ஆம் தேதி பாஸ்டனிலிருந்து புறப்பட்டனர்.              1870 - ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் நாள் மும்பை பட்டணத்தில் கப்பல் இறங்கினர். இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு அதிக பாரம் கொண்டார். அவர்கள் வாழ்வு மறும