Posts

Showing posts from March, 2022

HUGH LATIMER லாட்டிமர் (Tamil & English)

Image
  1555, அக்டோபர் 16 ஆம் நாள்… கள்ளப்போதகன் என்று பட்டம் சூட்டப்பட்டு கம்பங்களில் கட்டப்பட்டு போகிப் பொங்கலன்று தூக்கி எரிக்கப்படும் தேவையற்ற பொருளாக வேத பண்டிதர் லாட்டிமர் நிறுத்தப்பட்டார் .  கிரியையை வலியுறுத்தி கிருபையை இருட்டடிப்புச் செய்ய அவர்கள் , சத்தியம் தவறாத தேவமகன் லாட்டிமர் தங்களோடு ஒத்துபோகாத காரணத்தால் கொலைக்குற்றம் சாட்டினர் . அவருடன் பிஷப் ரிட்லுயும் அதே காரணத்துக்காக முதுகோடு முதுகாக சேர்த்துக் கட்டப்பட்டு கொலைமரத்தில் கொண்டு நிறுத்தப்பட்டார் . இந்த விசுவாசப் படுகொலை  பார்க்க திரள்கூட்டம் கூடி வந்திருந்தது . பார்வையாளர்களுக்குத் தான் அன்றும் இன்றும் பஞ்சமில்லையே . இந்த மரணத்தால் தங்கள் ஆத்துமாவை கொல்ல முடியாது என்று மனத்தெளிவுடன் அந்தக் கொலைக் கம்பங்களையே லாட்டிமர் முத்தமிட்டார் . ரிட்லி வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவே உமது கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் , என்று உரக்கச் சொன்னார் . திருச்சபையின் துரோகிகள் என்று இவர்கள் பொய் குற்றம் சாட்டினார்கள .; அக்கம்பங்களுக்கு தீமூட்டும் முன்னர் தங்கள் சடங்குபிசகாமல் இறுதிப் பிரசங்கம் ஒன்றை செய்தன...

Samuel Kaboo Morris (Tamil & English)

Image
இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்கா தேசத்திற்குள் ஊழியர்கள் பலர் சுவிசேஷத்தை சொல்ல சென்றிருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம் . ஆனால் இங்கிருந்து ஆண்டவரை ஏற்றுக் கொண்ட ஒரு மனிதன் , ஆண்டவரை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வந்தார் . அவர் பெயர் காபு . தென் ஆப்பிரிக்காவில் 2 விதமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர் . அதில் குரு இன மக்களுக்கு காபுவின் தகப்பனார் தலைவனாக இருந்தார் . தந்தைக்கு பின் காபு தான் குரு பழங்குடியின மக்களின் அடுத்த தலைவன் என்பது மக்களின் விருப்பம் . இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்படும் சண்டையில் , தோற்பவர்களின் பணம் , பொருள் மற்றும் தலைவனின் மகன் என அனைத்தையும் வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்வார்கள் . இவ்வாறு ஏற்பட்ட சண்டையில் குரு இன மக்கள் மூன்று முறை தோற்றுப் போனார்கள் . அப்போது காபுவையும் , அவர்களின் பொருட்கள் எல்லாவற்றையும் சிறைப்படுத்தி கொண்டு சென்றார்கள் ;. காபு அங்கே அதிகமாக சித்திரவதை செய்யப்பட்டான் . காபுவை மீட்க குரு இன மக்கள் மிகவும் போராடினார்கள் . ஆனால் அவனை அடிமையாக கொண்டு சென்ற மக்களோ அவனை கொன்று விட முயற்சி செய்தார்கள் . அந்நாட்களில் , மு...

Andrew Van Derbijl, ‘God’s smuggler’ (Tamil & English)

Image
                      ஆண்ட்ரூ வான் டெ ர்பிஜ்ல்                                        தேவனின் கடத்தல்காரர் என்று அழைக்கப்படும் ஆண்ட்ரூ வான் டெர்பிஜ்ல் , நெதர்லாந்த் தேசத்தில் பிறந்து வளர்ந்தவர் . இவரது தகப்பனார் காது கேட்காதவராகவும் , தாயார் படுத்த படுக்கையாகியும் இருந்தனர் . அவருடைய மூத்த சகோதரர் மூளை வளர்ச்சி குன்றியவர் . இப்படிப்பட்ட குடும்ப பின்னணியிலேயும் ஆண்ட்ரூ வான் ஆண்டவருக்காக வாழ்ந்து வருகிறார் . அவரது தாயார் படுத்த படுக்கையாக இருந்தாலும் வேத வசனத்தின் மகத்துவத்தை தனது மகனுக்கு சொல்லி கொடுத்தார் . குடும்பத்தில் தரித்திரம் , வறுமை காணப்பட்டாலும் ஆண்டவரை இந்த குடும்பம் உறுதியாக பற்றிக் கொண்டார்கள் . ஆண்டவர் மட்டும் தான் உதவி செய்ய முடியும் என்பதில் அதிக நம்பிக்கையோடு இருந்தார்கள் . இரண்டாவது உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது . ஆண்ட்ரூ தன்னையும் ஒரு போர் வீரனாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திக் கொண்டார் . ப...