Posts

Showing posts from January, 2022

ஈவ்லின் பிராண்ட், Evelyn Brand (Tamil & English)

Image
    மலைப்பிராந்தியங்கள் என்றாலே ஊட்டி , ஏற்காடு போன்ற சுற்றுலாத் தளங்கள் தான் நம் நினைவிற்கு வரும் . வசதியான இனிமையான சூழல்கள் அமைந்த அந்த இடங்களுக்கு எத்தனை முறை சென்றாலும் மனம் சலிக்காது . ஆனால் கொல்லிமலை , பச்சைமலை , கல்வராயன் மலை போன்ற இடங்களோ , படிப்பறிவில்லாத பின் தங்கிய மக்களால் சூழ்ந்த இடம் . மின்வசதி இல்லாத பல கிராமங்கள் இங்கு இன்றும் உண்டு . அப்படியானால் 130 வருடங்களுக்கு இந்த பகுதி எப்படி இருந்திருக்கும் ? சற்று யோசித்துப் பாருங்கள் . ஆனால் இந்த மலைப் பகுதி ஒரு இளம் பெண்ணுக்கு தரிசன நிலமாக இருந்திருக்கிறது .       அந்த இளம் பெண்ணின் பெயர் ஈவ்லின் பிராண்ட் .  இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் ஒன்பதாவது மகள் . வசதியான குடும்பச் சூழல் நிறைவான வாழ்க்கை , எங்கு தன் மகள்கள் தன்னை பிரிந்து தூரம் சென்று விடுவார்களோ என்று எண்ணி திருமணத்தையும் தாமதப்படுத்தினார் தகப்பனார் ஹாரிஸ் . ஆனாலும் தேவனுக்கடுத்தவைகளில் ஒரு நாளும் குறைவுபட்டவர் இல்லை . குடும்பமாய் ஊழியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . ஈவ்லின் சிறந்த ஓவியர் . இவரோடு தேவன் இடைபட்ட பிறக...

டேவிட் லிவிங்ஸ்டன்,David Livingston (Tamil & English)

Image
இருண்ட கண்டத்தில் ஓ ர் நட்சத்திரம் டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு ஏழைச் சிறுவன் ! அவனுக்கு பத்து வயதான போது பஞ்சாலை ஒன்றில் வேலைக்கு அம ர் த்தப்பட்டான் . பத்து மணி நேரம் அவ்வேலையை செய்ய வேண்டிய நி ர் பந்தத்தினால் பகலில் பள்ளிக்குச் செல்ல அவனால் இயலாது போனது . அவன ் தனக்குக் கிடைத்த முதல் சம்பளத்தில் புத்தகங்கள் வாங்கி ஓய்வு நேரங்களில் பிரதானமாக இரவு நேரங்களில் தனது படிப்பை தொட ர் ந்தான் . அந்நாட்களில் கடவுள் தன்னைக் குறித்து என்ன திட்டம் கொண்டிருக்கிறா ர் என்பது அவனுக்குத் தெரியாது . என்றாலும் தன்னை குறித்து தேவனுக்கு ஒரு சிறந்த நோக்கம் உண்டு என்பது மட்டும் சிறுவன் டேவிட்டுக்குத் தெரியும் . அவன் எதி ர் நோக்கிய அந்த சிறந்த எதி ர் காலத்துக்கு தன்னை நன்றாய் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் அவன் அறிந்திருந்தான் . இதற்குள் வருடங்கள் விரைந்தன . அப்போது அவன் தனது 20- வது வயதை எட்டிவிட்டான் . இதற்குள் தான் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்பதையும் தீ ர் மானித்து விட்டான் . பின்ன ர் ராப ர்...