John Harper ஜான் ஹார்பர் (Tamil & English)

சின்ன சின்ன காரியத்தில்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு சிறுவன் வேலை தேடி நியுயார்க் நகரத்திற்கு வந்தான். ஒரு எளிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவனுக்கு அச்சக வேலை மட்டும் தெரியும். இதை மட்டும் வைத்து வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது.

ஒரு பெரிய அச்சக அலுவலகத்திலே அவனுக்கு வேலை கிடைத்தது. உண்மையோடும் பணிவோடும் தன் வேலையை செய்து வந்தான் அச்சிறுவன். தன் எளிய நிலையிலும் ஆண்டவரை நேசித்து வாழ்ந்தான். ஒரு நாள் சனிக்கிழமை மாலை அவனுக்கு ஒரு பெரும் வேலை கொடுக்கப்பட்டது. அந்த வேலையை செய்து முடிக்க வேண்டுமானால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து வேலை செய்தால் தான் முடியும் என்பது அச்சிறுவனுக்கு புரிந்தது. தன் மேற்பார்வையாளரிடம், ஐயா இன்று இரவு பன்னிரண்டு மணி வரை இருந்தாவது வேலை பார்க்கிறேன். அதுவரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவுதான் என்னால் வேலை பார்க்க முடியும். நாளை ஞாயிற்றுக்கிழமை அது ஆண்டவருக்குரிய நாள் எனவே அன்று நான் வேலை பார்க்க முடியாது என்று கூறினான்.

இதை கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய மேற்பார்வையாளர் அப்படியானால் நீ உன் வேலையை இழக்க வேண்டியதுதான். நீ கட்டாயம் நாளைக்கும் தொடர்ந்து இந்த வேலையை செய்வதே நல்லது என்றார்.

ஆனால் அந்த சிறுவன் அந்த நிறுவனத்தின் எஜமானரிடம் சென்று ஐயா சிறு வயதிலிருந்தே நான் ஓய்வு நாளை கனம் பண்ணுகிறேன். இந்த வேலையை விட்டு விட வேண்டியிருந்தாலும் நான் அதை மீற விரும்பவில்லை என்று பணிவோடு கூறினான்

அந்த சிறுவனைஅந்த நிறுவனத்தின் எஜமானர் உற்றுப் பார்த்தார். அவர் ஆண்டவரை கனம் பண்ணுபவரோ, ஓய்வுநாளை ஆசரிப்பவரோ இல்லை. ஆனால் அந்த சிறுவனை அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்கும்படி அதன்பின் அவர் கட்டாயப்படுத்தவில்லைஅச்சிறுவன் யார் தெரியுமா? அவர்தான் ஜான் ஹார்ர்.

ஜான் ஹார்ர் பின்னாளில் பிரசித்தி பெற்ற ஊழியராக திகழ்ந்தார். சாதாரண அச்சக தொழிலாளியாக வாழ்வை ஆரம்பித்த ஜான் ஹார்ர் பின்னாளில் ஆன்மீக புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தை நிறுவும் அளவிற்கு ஆண்டவர் ஆசீர்வதித்தார். இன்று நம் சுய ஆதாயத்திற்காக ஆண்டவரை விட்டுக் கொடுக்கிறோமா? இன்றே தேவனிடம் மன்னிப்பை கேட்டு அவருக்காக வாழ்வோம்.

John Harper

This happened around 200 years ago. A small boy reached New York, looking out for a job. He ailed from a simple Christian family and knew only the vocation associated with a printing press. He took constant effort, utilizing his limited skills in the printing press to come up in life.

He managed to get a job at a reputed printing office. He was sincere in all the tasks assigned to him and discharged his duties with utmost sincerity. Even in his lowly state, he loved God. One Saturday evening he was given an important task at work. He realized that in order to complete that task, he would have to work on the following day being a Sunday as well. He approached his supervisor and requested him that he will work even until midnight but would not be able to work on the next day, as it is God’s Day.

His supervisor listened to him but told him vehemently that he would have to lose his job, if he would not complete that task the next day. The little lad, on the contrary went to the company’s boss and said humbly,” Sir, I have been honoring Sunday from my early years. Even if I have to forego this job, I am not willing to dishonor Sunday”.

Though the boss stared intently at the little boy as he was determined to revere God, by honoring Sunday, he did not force the little boy to work on Sundays afterwards. That little boy was John Harper.

John Harper in his later days became a famous missionary. John Harper, who started his life as a simple press employee, was blessed by God to become the founder of a company that published spiritual books. Do we give up God for our selfishness? Let’s seek forgiveness from God today and live our lives for Him.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)