பேராயர் நியூபிகின் 1909-1998 ArchBishop New Begin (Tamil & English)

 

1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பேராயர் நியூபிகின் இங்கிலாந்தில் உள்ள நியூகாஸல் என்ற ஊரில் பிறந்தார். வெள்ளை உருவம் கொள்ளை கொள்ளும் பார்வை உடைய இவர், மிகப்பெரிய சிந்தனையாளர், அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் வழிகாட்டி, இறையியல் வல்லுனர் என இவரைப் பற்றிக் கூறிக் கொண்டே செல்லலாம். கேம்பிரிட்ஜில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். பின்னர் தேவனுக்காக ஊழியம் செய்ய அர்ப்பணித்தவராய் இறையியல் படிப்பை தொடர்ந்தார். 1936 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்று, தமிழ்நாட்டில் உள்ள ஸ்காட்லாண்டு திருச்சபைக்கு மிஷனெரி ஊழியராக பணிபுரிய அனுப்பப்பட்டார். இங்கு வந்தவுடன் தமிழ் மொழியை நன்கு கற்றறிந்து "பாவமும் இரட்சிப்பும்" என்ற தமது முதல் புத்தகத்தை 1937 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் ஊழியம் செய்யும்போது வெளியிட்டார்.

 1947 ஆம் ஆண்டு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தென்னிந்திய திருச்சபையின் பேராயராக அபிஷேகம் செய்யப்பட்டு மதுரை - ராமநாதபுரம் பேராயத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் 1965ஆம் ஆண்டு சென்னையிலும் பேராயராக பொறுப்பேற்றார். மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டார். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்கள் குறைகளை களைந்தார்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நண்பனாகவும் விளங்கி, சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்டார். அநேக புத்தகங்களை எழுதி புகழ் பெற்று விளங்கினார். " இருபதாம் நூற்றாண்டின் மிகவும் மதிப்பிற்குரிய இறையியல் வல்லுனர் " என்று அனைவராலும் போற்றப்பட்டார். அவருடைய படைப்பு ஆசியா,ஐரோப்பா போன்ற நாடுகளின் எல்லையையும், கலாச்சாரத்தையும் கடந்து செல்கிறது. ஒரு சிறந்த எழுத்தாளரும், சர்வதேச மாநாடுகளில் சிறந்த பேச்சாளருமாய் விளங்கினார். இவரது எழுத்துக்கள் இன்றும் எண்ணற்றவரால் பயன்படுத்தப்படுகின்றன.

 அவரது வாழ்வு முழுமையும் மக்கள் நலனுக்காகவே செலவழிக்கப்பட்டது. அவர் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கூறிய மிக முக்கிய செய்தி என்னவெனில்: "திருச்சபை,  ஊழியம் செய்கின்ற ஒன்றாக மாற வேண்டும். திருச்சபை,  நற்செய்திப் பணியை மாற்றாந்தாய் பிள்ளை போலவும், அனாதை பிள்ளை போலவும் நடத்தி வருகின்றது. இயேசு கிறிஸ்து திருச்சபையை ஸ்தாபித்தது, இறையாட்சியின் அடையாளமாகவும், அவ்வாட்சியை உலகிற்கு வெளிப்படுத்துகிற சாட்சியாகவும் இருக்கவுமே. நற்செய்தி பணியை தன் குறிக்கோளாக அங்கீகரிக்காத திருச்சபை, ஒரு முழு வளர்ச்சி அடையாத திருச்சபை"  என்று குறிப்பிடுகிறார்.

 மனித நேயத்தை தன் வாழ்நாள் முழுவதும் காண்பித்த இவர், 1998-ஆம் ஆண்டு இதே நாள் ஜனவரி 30ல் தேவ ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டார். "ஒற்றுமையின் சீர்குலைவுக்கு வித்திடுகிறவர்கள் சுவிசேஷத்தின் எதிராளிகள்" லெஸ்லி நியூபிகின்.

இன்று நம் வாழ்வு எப்படிப்பட்டதாய் உள்ளது? சுவிசேஷப் பணியில் நம்முடைய பங்கு எப்படி உள்ளது?  

Arch bishop New begin was born on December 8, 1909, in Newcastle, England. We can go on and on about him as a great thinker, guide of all Christian churches, and theologian. While studying at Queen's College, Cambridge, he accepted Christ as his personal saviour. He then devoted himself to the service of God and continued his studies in theology. Ordained to the priesthood in 1936, he was sent to the Church of Scotland in Tamil Nadu to work as a missionary worker. After coming here, he learned the Tamil language well and published his first book, "Pavamum Iraksipum," in 1937 while serving in Kanchipuram.

In 1947, he was consecrated Archbishop of the newly established Church of South India and appointed to the Madurai-Ramanathapuram Archdiocese. Later, in 1965, he took over as Archbishop of Chennai. He was very concerned about people's welfare. He met the people affected by the drought and addressed their grievances. He also became a friend to the downtrodden and strove to eliminate caste inequalities. He became famous by writing many books. Admired by all as "the most respected theologian of the twentieth century". His work crosses the borders and cultures of countries like Asia and Europe. He was a prolific writer and a prolific speaker at international conferences. His writings are still used by countless people today.

His whole life was devoted to the welfare of the people. His most important message to the Christian community is: "The church must become one that serves." The church is treating the mission of the gospel like a stepchild and an orphan. Jesus Christ established the church to be a symbol of theocracy and a witness to the world. A church that does not recognise the work of evangelization as its goal is an underdeveloped church.

He showed humanity throughout his life and was admitted to the Kingdom of God on the same day in 1998, January 30.

"Those who sow the disintegration of unity are the enemies of the gospel," says Leslie New begin.

How is life today? What is our role in evangelism?

 


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!