Joshua Marshman ஜாஷ்வா மார்ஷ்மேன் (Tamil & English)
1768 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்பெரி மாகாணத்தில் ஜாஷ்வா மார்ஷ்மேன் பிறந்தார். தன் தந்தை செய்து வந்த நெசவுத் தொழிலையே மார்ஷ்மேன் செய்து வந்ததால் சமுதாயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த அடையாளமும் இன்றி ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல மார்ஷ்மேனின் உள்ளம் இயேசுவுக்காக எதையாவது செய்ய உந்தித் தள்ளியது. கிறிஸ்துவின் அன்பிற்கு அடிபணிந்த அவர் பிரிஸ்டல் அகடமியில் கஷ்டப்பட்டு சேர்ந்து லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீரியா ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். அங்கு கல்வி பயின்று வந்த நாட்களில், பாப்திஸ்து மிஷனெரி சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட மாத இதழை படிக்க ஆரம்பித்தார் . அதன் மூலம் இந்தியாவில் பணியாற்றி வந்த வில்லியம் கேரியின் ஊழியங்களை பற்றி தெரிந்துகொண்டார். தேவையுள்ள இந்திய தேசத்தை பற்றிய பாரம் அவரை அழுத்த, இந்தியாவில் பணி செய்ய தன்னை ஆண்டவரிடம் முழுமையாக அர்ப்பணித்தார். 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் நாள் தன் மனைவி ஹன்னா உடன் இந்தியா வந்தார். கப்பலிலிருந்து செராம்பூர் இறங்கிய உடன் கரையில் நின்று கொண்டிருந்த அனைத்து மக்களுக்கும் முன்பாக மு