Posts

Showing posts from June, 2020

ANNIE ARMSTRONG ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் (Tamil & English)

Image
 ஆனி ஆர்ம்ஸ்ட்ராங்            மிஷனரிப் பணி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எல்லாம் காடு மலைகளில் ஊழியம் செய்வது மட்டுமே. இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகள் மத்தியில் ஊழியம் செய்வது என்பது நினைவிற்கு வரும். இது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் இருந்த இடத்திலிருந்தே மிஷனெரி பணியை நம்மால் செய்ய முடியுமா?  முடியும் என்று  ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் வாழ்ந்து காட்டியுள்ளார்.            இவர் அன்னை தெரசாவை போல ஏழை மக்களை அரவணைத்து ஆதரித்தவர் இல்லை; பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று நோயுற்றவர்களை கவனிக்கும் தாதியும் அல்ல; ஆனால் ஆண்டவர் தனக்கு கொடுத்த எழுத்துத் திறமையை கொண்டு மிஷனெரி பணிகளை தாங்கினார். தேவன் தன்னை கொண்டு செய்யப் போகும் மாபெரும் திட்டத்தை மனதில் கொண்டு திறம்பட செயலாற்றினார்.              தன் முழு இருதயத்துடன் இயேசுவை நேசித்த இவர் மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டும் என்ற வார்த்தையினால் கடிதங்கள் எழுதுவதின் மூலம் தன் பணியை ஆரம்பித்தார். விரல்கள் அத்தனையும் மூலதனங்கள் ஆயின. அவைகளே தேவ ஊழியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவிகள் ஆயின.              தட்டச்சு மூலமாகவும் தன் கை படவும் ம

Theodore Howard Somervell (in English)

Image
Theodore Howard Somervell was an English surgeon. He was a man with great interest in painting. His paintings are still present at the Geological Society. Not only was he a great musician but also a song translator. He translated many Tibetan songs to English and captured the hearts of all by singing them. During the last days of his medical studies, the first world war broke out. With the injured and wounded victims of the First World War needing a doctor, he worked among them as a surgeon. Though he was a medical surgeon, mountain climbing was another of his main interest. He desired to climb Mount Everest and started his journey by trekking the 29,000 foot high mountain. Headed by Dr. George Mallory, they set out on this mission. Unfortunately, Dr. George Mallory died due to severe blizzard(snow storm). Thus, Somervell's attempt to climb the mountain was unsuccessful. However, Somervell climbed the mountain again. This time, he was accompanied by 15 Sherpas, people who live at t

AMY CARMICHAEL ஏமி கார்மைக்கேல் (Tamil & English)

Image
ஏமியும் அவள் அம்மாவும் சிற்றுண்டி சாலையில் அமர்ந்து இருந்தார்கள். வெளியே மழையோடு குளிரும்  வாட்டி கொண்டிருந்தது. வித விதமான உணவுகள் கண்ணாடி பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏமியின்   விருப்பத்திற்கு ஏற்ப அவள் தாய் அவளுக்கு கேக்குகளை வாங்கி கொடுத்தார்.  வெளியே மழை கொட்டோ கொட்டு என கொட்டி கொண்டிருந்தது.  ஏமி அவள் வயதையொத்த ஒரு சிறுமி கடைக்கு வெளியே நின்று கொண்டிருப்பதை கண்ணாடி வழியாக கவனித்தாள். கிழிந்த ஆடையோடு காலில் செருப்பில்லாமல்,  தலையில் குளிருக்கு போடும் குல்லாவும் இல்லாமல் உடல் நடுங்கி நின்று கொண்டிருந்தாள்.  பசியின் கொடுமையினால்  ஜன்னல் வழியாக பலகாரங்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுமியின் காட்சி ஏமியின் சிறிய உள்ளத்தை அதிகம் பாதித்தது. வீட்டிற்கு வந்து குளிர்காயும் அடுப்பின் அருகில் தன் உடைகளையும் காலணிகளையும் சூடாக்கி கொண்டிருந்த ஏமி,  திடீரென்று எழுந்து ஒரு பென்சிலை எடுத்தாள்.    நான் வளரும்போது  என் கையில் பணம் வரும்போது உன்னை போன்ற ஏழை சிறுமிகளுக்கு அழகிய பெரிய இன்பமான வீடு ஒன்றை கட்டுவேன்   என அதில் எழுதினாள்.  ஏமியின் லட்சியம் இப்படி காகிதத்தில் எழுதியத

John Wesley Quotes : Twelve powerful sayings... ஜான் வெஸ்லி நியமித்த 12 ஒழுங்குகள் (Tamil & English)

Image
  இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜான் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள் 1. ஊக்கமும் சுறுசுறுப்பும் உள்ளவனாய் இரு. ஒருபோதும் சும்மா இராதே. உன் கரங்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டு இருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தை செலவிடாதே. 2. மிகவும் விழிப்புள்ளவனாயிரு. கர்த்தருக்குப் பரிசுத்தம் என்பதே உன் வாழ்வின் சட்டவாக்கியமாய்  இருக்கட்டும்.  எல்லா  வெதுவெதுப்பையும்,  கேலிப் பேச்சுக்களையும்,  முட்டாள்தனமான பேச்சையும் உன்னைவிட்டு அகற்று. 3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமாகவும் குறுகிய நேரம் உடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம்பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில்  மிகவும் ஞானத்தோடு நடந்துகொள். 4. கிறிஸ்துவுக்குள் உன்னைவிட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்து விடாதே. 5.உன் சொந்த கண்கள் காணாதிருக்க,  யாரைக் குறித்தும் பேசப்படும் தீமையானவற்றை ஒருபோதும் நம்பாதே. எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்து சோதித்துப் பார்.