Posts

Showing posts from 2025

எட்வர்ட் ஜார்ஜென்ட், Edward Sargent

Image
  கிறிஸ்து இரத்தம் சிந்தி சம்பாதித்து தந்த திருச்சபையை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட். அவர் 1835 - ஆம் ஆண்டு நெல்லை பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது இங்கு 224 திருச்சபைகள் இருந்தது. ஆனால் அவர் மரிக்கும்போது, அதாவது 1889 - ஆம் ஆண்டு அங்கிருந்த திருச்சபைகளின் எண்ணிக்கை 1008 ஆகும். திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அதுமட்டுமல்ல, சபைகள் அனைத்தையும் கிறிஸ்துவில் வேரூன்றச் செய்தவர். போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை அதிகம் நேசித்தவர். அவர்களது குறைகளை நீக்கி, மகிழ்ச்சியோடு தேவனுக்காக பணி செய்ய ஊக்குவித்தவர்.  வாட்டர் லூ போரில் ஈடுபட்ட ஒரு போர் வீரனின் மகன் தான் எட்வர்ட் ஜார்ஜென்ட் - அப்பட்டாளம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது சார்ஜென்ட் தன் பெற்றோருடன் வந்தார். போரில் அவரது தகப்பனார் மரித்து விட்டார். தனிமையிலிருந்த தாயார் தன் மகனை சென்னை இராணுவ குரு அருள்திரு. சாயர் அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு தன் தாய்நாட்டிற்குச் சென்றார். 1815 - ஆம் ஆண்டு அக்டோபர் 16 - ஆம் நாள் பாரீஸ் மாநகரத்தில் பிறந்த சார்ஜென்ட், சிறு வயதிலேயே ...

Dr.Ida Scudder டாக்டர். ஐடா ஸ்கடர்

Image
டாக்டர் ஜான் ஸ்கடர் திண்டிவனத்தில் மருத்துவ மிஷனெரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர் ஜான் ஸ்கடர் ஜூனியர் மற்றும் சோபியா ஸ்கடர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தையாக 1870 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ஐடா ஸ்கடர் பிறந்தார். ஐடா ஸ்கடருக்கு ஆறு வயதாக இருக்கும்போது 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின் கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனெரியாகப் போவதில்லை என தீர்மானித்திருந்தார். மசாசூசெட்ஸில் உள்ள நார்த்ஃபீல்ட் செமினரியில் படிக்க டுவைட் மூடியால் அழைக்கப்பட்டார். அங்கு அவர் குறும்புகளுக்கு நற்பெயர் பெற்றார். 1890 இல் தமிழ்நாட்டின் திண்டிவனத்தில் உள்ள மிஷன் பங்களாவில் அவரது தாயார் நோய்வாய்பட்டிருந்தபோது தனது தந்தைக்கு உதவுவதற்காக இந்தியா திரும்பினார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் இரவில் நடந்த நிகழ்வு அவரது வாழ்வை மாற்றியது.  அந்நிகழ்வை இவ்வாறாக குறிப்பிடுகிறார் ஐடா,  ...... அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை!  காரணம்,   பிள்ளை பேற்றுக்காக எதிர்நோக்கி இருந்த தன் அன்பு மனைவியருக்கு, உள்ளூர் மருத்துவச்சிகளால் வைத்திய உ...