Posts

Showing posts from April, 2023

இசபெல்லா வயட் (பேராயர் கால்டுவெல்லின் மகள்) Isabella Wyatt (daughter of Archbishop Caldwell) (Tamil & English)

Image
இடையன்குடியில் பணியாற்றி வந்த பேராயர் கால்டுவெல் - எலைசா மால்ட் தம்பதியினருக்கு தேவன் ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். ஏழு பிள்ளைகளும் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைய தேவன் உதவி செய்தார். பெற்றோர் பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உறுதுணையாய் இருந்தார்கள். அதனால் பிள்ளைகள் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், தங்களை சுற்றி வாழ்ந்த மக்களின் ஏழ்மையையும் அவர்கள் மத்தியில் காணப்பட்ட தேவையையும் நன்கு அறிந்து கொள்ள உதவியது. ஏழு பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் செய்த ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இவர்களின் பெண் குழந்தைகளில் மூத்த பிள்ளையாக பிறந்த இசபெல்லாவைப் பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம். இவர் கால்டுவெல் தம்பதியினரின் இரண்டாவது பிள்ளை. 1848 - ஆம் ஆண்டு இசபெல்லா இடையன்குடியில் பிறந்தார்.பத்து வயதாய் இருக்கும்போது, கால்டுவெல் ஐயர் குடும்பமாக ஒரு முறை இங்கிலாந்திற்கு சென்றனர். அச்சமயம் இங்கிலாந்தில் மாபெரும் ஆன்மீக எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் குடும்பமாக க

Eliza Caldwell எலைசா கால்டுவெல்(கால்டுவெல் மனைவி) In Tamil & English

Image
எலைசா மால்ட், நாகர்கோவிலில் முதல் L.M.S. மிஷினெரியாக பணியாற்றி வந்த  சார்லஸ் மால்ட் ஐயர் மற்றும் மார்தா மால்ட் அம்மையாருக்கு 1822 ஆம் ஆண்டு மூத்த மகளாக திருவிதாங்கூரில் பிறந்தார். இங்கிலாந்தின் பூர்வீக குடும்பங்களை சேர்ந்த இவரது பெற்றோர், தேவனின் தெளிவான அழைப்பிற்கு இணங்கி, இந்தியாவில் குறிப்பாக நாகர்கோவிலில் கால்பதித்தனர். அச்சமயம் எலைசா பிறந்ததால் மிஷனெரி பயிற்சியுடன் சேர்ந்து தமிழ் மொழி பயிற்சியும் அவர் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றார். நாகர்கோவிலில் தன் தந்தையார் மால்ட் ஐயர் நடத்திய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்களை பிழைதிருத்தும் பணி செய்து வந்தார். எலைசாவின் தாயார் திருமதி. மால்ட் அம்மா அவர்கள் நாகர்கோவிலில் பெண்கள் தங்கியிருந்து உணவருந்திக் கற்கும் பெண்கள் போர்டிங் பள்ளியொன்றை துவங்கினார்கள். அப்பள்ளியே தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் போர்டிங் பள்ளியாகும். மேலும் தையற்கலை கற்பிப்பதற்கு ரேந்ரா தையல் பள்ளியை தொடங்கினார். நாகர்கோவிலில் கிறிஸ்தவப் பெண்களுக்கு வருவாய் தரும் குடிசைத் தொழிலை கற்றுத்தந்த பெருமை மால்ட் அம்மையாரையே சாரும். தாய் செய்த பணி