Charles Thomas Studd (CT Studd) (Tamil & English)
கிரிக்கெடிற்கு ஒரு புது வடிவத்தையே இன்றைய தலைமுறையினர் உருவாக்கி விட்டனர்.கிரிக்கெட்... இப்ப வந்த விளையாட்டு அல்ல. முதுமையும் பழைமையும் நிறைந்த விளையாட்டுகளில் ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டில் பலரால் பெரிதும் விளையாடப்பட்ட இவ்விளையாட்டில் ஆங்கிலேயர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள். கிரிக்கெட் வீரர் ஒருவரும் மிஷனெரியாக அர்ப்பணித்து ஊழியம் செய்ய சென்றார். என்ன? கிரிக்கெட் விளையாடிய வீரர் மிஷனெரியானாரா? இது சற்று விஷேசமான சங்கதி தான். ஆம் ! 1860 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த Charles Thomas Studd பதினாறாம் வயதிலேயே மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரராக வாழ்ந்து வந்தார். அனைவரும் விரும்பக் கூடிய கதாநாயகனாகவும், தன்னுடைய கல்லூரியின் கேப்டனாகவும் C.T.Studd திகழ்ந்தார் . பணம் ,புகழ், இளமை, துடிப்பு ஆகியவை அவரை கிரிக்கெட் விளையாட்டு மலையின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. புகழின் உச்சியில் இருந்த ஸ்டட், 1878ஆம் ஆண்டு தன்னுடைய இளம் வயதில் ஊழியர் ஒருவருடனான சந்திப்பில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்...