வில்லியம் டிண்டேல் William Tyndale, Father of English Bible Translators
டிண்டேலின் இளமைக்காலம்: வில்லியம் டிண்டேல் 1494ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார். சிறு வயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப் பட்டார். பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ,ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய கால மூடநம்பிக்கைகள் இவரை சிந்திக்க வைத்தன. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இதன் விளைவு,அவரை ஒரு சபை சீர்திருத்தவாதியாக உருவாக்கியது. மார்ட்டின் லுத்தர் மற்றும் சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகளின் கருத்து இவரை மிகவும் கவர்ந்தது.1521 ம் ஆண்டு இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவம் பெற்றார். திரும்பவும் தன் ஊருக்குத் திரும்பி, அங்குள்ள சபையின் போதகரானார்.டிண்டேலின் முற்போக்குத்தனமான சிந்தனைகளும், கத்தோலிக்க பழமைவாதத்திற்கு எதிரான இவர செயல்களும் சபை தலைவர்களின் கவனத்தைதிருப்பியது. முதல்ஆங்கில வேதம் : 1523ல் டிண்டேல் லண்டன் திரும்பி புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்த நினைத்தார். ஆனால் அது சட்ட விரோதமானது என அறிந்து, வேதாகமத்தை சொந்த மொழியில் அச்...