Dr.Howard Somervell தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல் (Tamil & English)
தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல், இங்கிலாந்து தேசத்தில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இந்நாளில் அவர் வரைந்த ஓவியம் புவியல் சமூகக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த இசைக் கலைஞரும் கூட. இவர் பல திபெத்திய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, பாடி அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அவருடைய மருத்துவப் படிப்பின் இறுதி நாட்களில் முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்பட்டதால் அங்கு சென்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 29000 அடி உயரத்தில் இருந்த எவரெஸ்ட் மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். டாக்டர் ஜார்ஜ் மல்லாரியின் தலைமையில் சென்ற போது ஏற்பட்ட கடுமையான பனிப் புயலின் காரணமாக ஜார்ஜ் மல்லாரி அப்பொழுதே மரணமடைந்தார். ஆகவே ஹோவர்ட் சாமெர்வெலின் மலை ஏறும் முயற்சியும் தோல்வியடைந்தது. மறுபடியும் ஹிமாலய மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஷெர்பாக்கள் என்னும் வழிகாட்டினர்கள் சுமார் பதினை...