மேரி ஜோன்ஸ் Mary Jones
இன்று நம்மில் அநேகருடைய கரங்களில் வேதாகமம் உண்டு. அதை வாசிப்பவர்களும் நேசிப்பவர்களும் ஏராளம். நாம் கொடுத்து வைத்தவர்கள். கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கடந்த காலங்களில் நிலைமை வேறு. கல்வி கற்றவர்கள் மிகக் குறைவு. வேத புத்தகங்கள் தயாரிக்க ஏராளமாகப் பணம் தேவைப்பட்டது. பள்ளிக்கூடங்களும் இல்லை. மக்களுடைய வாழ்க்கைத் தரம், கல்வி அவர்களை அக்கரை கொள்ளச் செய்யவில்லை. மூன்று வேளை உணவு தேடுவதற்கு அவ ர்களுக்கு நேரம் போதாது. இரவு பகலாய் கடின உழைப்பில் ஈடுபட்டு வந்தார்கள். 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நிலை எங்கும் காணப்பட்டது. 1704-ம் ஆண்டில் வேல்ஸ் நாட்டின் வட பகுதியிலுள்ள டின்டால் என்ற சிற்றூரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் மேரி. ஏழையாய்ப் பிறந்த அவள் கிறிஸ்துவுக்குள் ஒரு இலட்சியப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். தகப்பனார் ஒரு நெசவுத் தொழிலாளி. தாயும் அவரோடு சேர்ந்து உழைத்தால் தான் குடும்பப் பொருளாதாரத்தை ஓரளவு சரிக்கட்டி வாழ்க்கை நடத்தமுடியும். எனவே வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாப் பொறுப்பும் மேரியைச் சேர்ந்தது. மேரி உழைப்பின் சின்னம். ஓடி ஓடி மகிழ்ச்சியோடு வேலைகளைச் செய்து வந்தாள், நல்ல கு