Moravian Missionary Society மொரேவியன் மிஷனெரி சங்கம் (Tamil & English)
வில்லியம்கேரிக்கு அப்போது இருபத்து மூன்று வயது. தன் ஆவிக்குரிய வழிகாட்டிகளான ஜான் நிலாண்ட், ஆண்ட்ரூபுள்ளர், ஜான் ஸட்கிளிப் ஆகியோருடனும் வேறு சிலருடனும் இணைந்து மாதந்தோறும் இங்கிலாந்திலுள்ள சபைகளின் மலர்ச்சிக்காகவும், சுவிசேஷத்தின் பரவுதலுக்காகவும் ஜெபிக்க முற்பட்டார். அதுவே பின் பேப்டிஸ்ட் சுவிசேஷ பிரபல்ய சங்கமாக வடிவம் பெற்று கேரியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இது நடந்தது 1784-இல். இந்த அமைப்புதான் சீர்திருத்த சபையின் முதல் நற்செய்திப்பணி இயக்கமாகக் கருதப்படுகிறது. கிழக்கு ஜெர்மனியில் ஹெர்ன்ஹட் எனுமிடத்தில் வாழ்ந்துவந்த சின்சென்டார்ப் குழுவில் அவர்கள் கிரமமாக கூடி ஜெபித்ததோடு சங்கிலித்தொடர் ஜெபமுறையையும் கையாண்டு ஆளுக்கு ஒரு மணிநேரம் என்று ஒரு நாளை 24 கூறுகளாக்கி தொடர் கண்விழிப்பு ஜெபத்தை மேற்கொண்டனர். ஏசாயா 62:6. வசனத்தின்படி தங்கள் தாய் நாட்டு மக்களின் காவலாளிகளாக தங்களை எண்ணிக் கொண்ட இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிஷனெரி ஜெபக்குழுக்களை திரளாக அமைத்தனர். தேவனைத் தேடுவது, வேதத்தை கற்றுக் கொள்வது, கிறிஸ்தவ ஐக்கியத்தை அப்பியாசிப்பது, ஒருவரோடு ஒருவர் இணை...